செவ்வாய், 2 ஜூலை, 2019

மொழித் தூய்மைவாதம் சாதியத் தூய்மைவாதமே!
------------------------------------------------------------------------------
ஒரு சாதியைச் சேர்ந்த பெண்ணை வேறொரு சாதியைச்
சேர்ந்த ஆண் திருமணம் புரிவதை சாதியத்
தூய்மைவாதம் தடுக்கிறது. அது மானுட இயற்கைக்கு
எதிராக நிற்கிறது. மொழித் தூய்மைவாதமும்
அத்தகையதே. அது மொழியின் இயற்கைக்கும்
மொழியைப் பேசும் மக்களின் இயல்புக்கும்
எதிராக நிற்கிறது.

மட்குடம் என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.
என்றுமே அது மக்களின் வழக்காக இருந்ததும் இல்லை.
பிணத்தினைப் போற்றேல் என்கிறது ஆத்திசூடி.
மட்குடம்தான் சரி மண்குடம் தவறு எனில், தவறாகப்
பேசும் தமிழனின் நாவை அறுப்பது நியாயமாகப்
போய்விடும்.

தொல்காப்பியமும் நன்னூலும் இன்று பயன்படா.
அவற்றில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய
காலக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

பொருளில் இருந்துதான் கருத்து பிறக்கிறது. பொருளே
முதன்மையானது. மண்ணும் மண்ணில் இருந்து
குடம் செய்தலும் குடம் செய்யும் குயவனும் குடம்
சுமக்கும் மக்களும் இன்றும் உள்ளனர். ஆனால்
மட்குடம் என்ற சொல் மட்டுமே இறந்து விட்டது.

மண்ணும் குடமும் மண்ணிலிருந்து குடம் செய்தலும்
மட்குடம் என்ற சொல் இறந்தவுடன் கூடவே உடன்கட்டை
ஏறிவிடவில்லை. மட்குடம் மண்குடம் ஆகிய இரண்டில் ஒன்று
இறத்தலும் பிறிதொன்று வாழ்தலும் உலக
இயற்கை; மொழியின் இயற்கை.
இறந்துவிட்ட சொல்லுக்குரிய இலக்கணத்தை
வாழும் சொல் பெற்று நிற்கிறது. அவ்வளவுதான்!

மண்குடம் என்பது மண்ணால் செய்யப்பட குடம் என்று
பொருள்படும் வரை, மண்குடம் என்பது மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக
நிலைபெற்று நிற்கும்.

தமிழே அறியாத செருமானியர் ஒருவர் செருமனி
நாட்டில் தமிழ் கற்கிறார் என்று கொள்வோம்.
மண்குடம்,  பித்தளைக்குடம், வெள்ளிக்குடம்,
பிலாஸ்டிக் குடம் ஆகியவற்றைப் பார்க்கும் அவர்
என்ன முடிவுக்கு வருவார்?  மண்குடம் என்றால்
மண்ணால் செய்யப்பட்ட குடம் என்றுதானே
முடிவுக்கு வருவார்!

அப்படி முடிவுக்கு வருவதுதானே மானுட இயற்கை!
அந்த மானுட இயற்கைக்கு ஏற்றவாறுதானே
இலக்கணம் அமைய வேண்டும்? ஆயின் மண்குடம்
என்பது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை என்றுதானே இலக்கணம்
செய்ய இயலும்!

வாழ்க்கையில் இருந்தே இலக்கணம் செய்யப்பட
வேண்டும். பொருளில் இருந்தே கருத்து பிறக்கிறது
என்னும் பொருள்முதல்வாதம் இது.

இலக்கணத்தைப் பற்றிய இந்தப் பார்வை (perspective)
இல்லாமல், வெறுமனே வறட்டுத்தனம் மேலோங்க
செய்நுட்பக்கூறு ( technical aspects) சார்ந்து இலக்கணத்தை
வரையறுப்பது, இலக்கணத்தை trivialise செய்வதாகும்.  

மொழியின் இலக்கணம் என்பது சமூகவியல்
சார்ந்தது. கணிதச் சூத்திரம், இயற்பியல் விதிகள்
போன்றதன்று மொழியின் இலக்கணம்.

ஒரு தயார்நிலை அட்டவணையை (ready recknor)
வைத்துக்கொண்டு, cos55, cot 48 ஆகியவற்றின்
மதிப்புகளை அறிவது போல, நெட்டுருச் செய்து
கொண்ட சூத்திரங்களில் இருந்து ஒன்றின் இலக்கணம்
இன்னதுதான் என்று வரையறுக்க முயல்வது
ஆபத்தானது.

பொருளுணர்ந்தே இலக்கணம் கூற வேண்டும்.
சூத்திரங்களை யாந்திரிகமாகப் பிரயோகித்தல்
கூடாது (No mechanical application).

 தமிழின் இலக்கணங்களைப் படைத்தோர் அனைவரும்
தமிழின் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்கள்.
இலக்கியத்தில் இருந்தே அவர்கள் இலக்கணம்
செய்தனர். இலக்கண நூற்பாக்களை அறிந்து வைத்துக்
கொண்டு அவற்றைப் பிரயோகிக்கும் ஒருவர்
இலக்கணம் பயின்றிருந்தால் மட்டும் போதாது;
இலக்கியங்களை ஆழ்ந்து கற்றிருக்க வேண்டும்.

இலக்கியம் கற்றிருப்பதன் மூலமே ஒருவர்
இலக்கணத்தை யாந்திரிகமாகப் பிரயோகிக்கும்
தவறுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக்
கொள்ள முடியும். இலக்கியம் கற்காமல் வெறுமனே
இலக்கண நூற்பாக்களை மட்டும் அறிந்து வைத்துக்
கொண்டிருக்கும் எவர் ஒருவராலும் சரியான
இலக்கணம் கூற இயலாது.

இலக்கியம் கற்று அதன் பின் இலக்கணம் கூற
முற்படும் ஒருவருக்கு நுண்மாண் நுழைபுலம்
கைவரப்பெறும். பொருளுணர்ந்து இலக்கணம்
கூறுவர் அத்தகையோர்.

யாம் பின்பற்றி வரும் இலக்கணமானது
இலக்கணம் குறித்த எமது மார்க்சியப்
பார்வையில் இருந்து, இலக்கணம் குறித்த எமது
பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து
பெறப்பட்டது (derived from our Marxian materialist perspective).

எமது இலக்கணம் தவறு என்று நிரூபிக்க முயல்வோரை
வரவேற்கிறோம். அவர்கள் இலக்கணம் குறித்த
எமது பார்வை (perspective) தவறு என்று முதலில்
நிரூபிக்க வேண்டும்.

இலக்கியம் குறித்த மார்க்சியப் பார்வை மிகவும்
தெளிவானது. கலை கலைக்காகவே (art for art's sake) என்று
குட்டி முதலாளியம் கூறுகிறது. அதை மறுத்து,
கலை மக்களுக்காகவே (art for people's sake) என்கிறது
மார்க்சியம்.

அதைப்போலவே, இலக்கணம் மக்களுக்கானது
என்றும், வாழ்வில் இருந்து இலக்கணம் செய்யப்பட
வேண்டும் என்றும் மார்க்சியம் கூறுகிறது.

மீண்டும் கூறுகிரம்: இலக்கணம் குறித்த எமது
பார்வையில் (perspective) இருந்தே யாம் கூறும்
இலக்கணம் அமைகிறது. எமது பார்வை தவறென்று
இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. ***************************************************   
சகோதரி கோதை நாச்சியார் வாசிப்பில்
பெருவிருப்பம் உடையவர்; தீவிர வாசகி.
தமிழ் மட்டுமின்றி நிறைய ஆங்கில நாவல்களை
ஆழமாக வாசித்தவர்.

கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த தோழர் கே டி கே
தங்கமணி எம் ஏ பாரட்லா அவர்களின் உறவினர்.
பேத்தி என எண்ணுகிறேன்.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை பற்றிய
ஒரு கேள்விக்கு இல்லத்தரசியாகிய அவர் உடனே
விடையளித்தார். ஒரு ப்ளஸ் டூ மாணவி போன்று
அவர் விடையளித்தது கண்டு நான் தலைவணங்கி
நிற்கிறேன்.

கேள்விக்கு விடையளித்ததுடன் நின்று விடாமல்
இந்நேரம் மீண்டும் இலக்கணப் புத்தகத்தைப்
படிக்காத தொடங்கி இருப்பர். புத்தகங்களை
எடைக்குப் போடுபவர் அல்லர் அவர்.

மீண்டும் அவரின் பேரார்வம் கண்டு வியந்து
நிற்கிறேன். அவரின் ஆர்வத்தைத் தாண்டிச்
செல்ல எனக்கு எதுவும் இல்லை.
  

     





1) மண்குடமாயினும் மட்குடமாயினும் இரண்டும்
 ஒரே பொருளைக் குறிப்பன; ஒரே பொருளைத் தருவன.
மட்குடம் செய்யுளில் மட்டுமே உயிர் வாழ்ந்திருந்து
காலப்போக்கில் வழக்கு வீழ்ந்த ஒரு சொல்.
மட்குடம் இறந்துபட்ட ஒன்று. மண்குடம் அன்றும்
இன்றும் உயிர்ப்புடன் உள்ள ஒன்று.

2) மட்குடத்துக்குப் பொருந்தும் இலக்கணம் அங்ஙனமே
மண்குடத்துக்கும் பொருந்தும். மண்ணும் குடமும்
மண்ணால் குடம் செய்தலும் அக்குடத்தின் பயன்பாடும்
அதைப் பயன்படுத்தும் மக்களும், இவை அனைத்தும்
அடங்கிய ஒட்டு மொத்தமும் அப்படியே இருக்கின்றன.
ஒன்றே ஒன்று மட்டும் இன்று இல்லை; அதாவது மட்குடம்
என்ற சொல் இன்றில்லை; அது இறந்து விட்டது.
அவ்வளவே.

3) மட்குடம் என்ற சொல் இறந்துபட்டமையால் ஏற்பட்ட
வெற்றிடத்தில் (vacancy) மண்குடம் அமர்ந்து கொண்டது.
ஜவகர்லால்நேரு இறந்து விட்டார்; அவ்விடத்தில் சாஸ்திரி
அமர்ந்து கொண்டார்; பிரதமர் பதவி இறந்துபோகவில்லை.

4) மட்குடம் சாகாவரம் பெற்றதோ சாசுவதமானதோ
அல்ல. அது மூலாதாரமான சொல்லும் இல்லை.
இரண்டு சொற்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில்
புணர்ந்தபோது உருவான சொல்; அவ்வளவே.
புணர்ச்சி முறை மாறும்போது மட்குடம் தோன்றவில்லை.

5)   
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக