வியாழன், 11 ஜூலை, 2019

முகிலனுக்குப் பின்னால் இருந்து இயக்குவது யார்?
கேள்வி எழுப்புகிறார் கூடங்குளம் உதயகுமார்!
முகிலனின் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சுமத்தும்
உதயகுமாரின் முகநூல் பதிவு!
---------------------------------------------------------------------------------
கூடங்குளம் உதயகுமாரின் முகநூல் பதிவு: 2015 டிசம்பர் 24.
--------------------------------------------------------------------------------------
1) முகிலன் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை 
அபகரிக்க வந்தவர்.

/////அவர் போராட்டத்தை அபகரிக்க வந்திருப்பதாகவும், 
நான் அப்படியே முழுமையாக அவரை நம்புவதாகவும், 
அளவுக்கு மீறி அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் 
என்னிடம் சிலர் முறையிட்டனர்.///// (உதயகுமாரின் முகநூல் பதிவு) 

2) உதயகுமாருக்கே தெரியாமல், அணுஉலை எதிர்ப்புப்
போராட்டக் குழுவின் பெயரை மாற்றி அமைத்திருக்கிறார்.
இதன் மூலம் மற்றவர்களின் உழைப்பை அபகரிக்க முயற்சி 
செய்தார்.

///அப்போது 2001-ஆம் ஆண்டு அய்யா ஒய். டேவிட் அவர்கள் 
தலைமையில் துவங்கி, பலரும் பங்களித்த, பல்வேறு 
போராட்டங்களுடன், தியாகங்களுடன், அர்ப்பணிப்புடன் 
நடத்தி வளர்க்கப்பட்ட “அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” 
எனும் அமைப்பை “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் 
போராட்டக் குழு” என்று முகிலன் மாற்றியமைத்திருக்கிறார். 
இந்தத் தகவல் எனக்கோ, பிற தோழர்களுக்கோ 
தெரிவிக்கப்படவேயில்லை.  

3) உதயகுமாரின் பெயரை இருட்டடிப்புச் செய்யும்
நோக்கில், கூடங்குளம் போராட்டக்குழுவின்
ஒருங்கிணைப்பாளராக தன் பெயரை மோசடியாகப்
போட்டுக் கொண்டார்.

////முகநூல் பதிவு ஒன்றில் முகிலன் தன்னை 
“ஒருங்கிணைப்பாளர்: கூடங்குளம் அணுஉலை 
எதிர்ப்புப் போராட்டக் குழு” என்று அடையாளப்படுத்தி 
இருந்ததை கவனித்து, அவரை அழைத்துப் பேசினேன்/////

4) போராட்டம் நடத்துபவன் ஒருவன், பெயரைப்
போட்டு விளம்பரம் தேடிக் கொள்பவன் மற்றொருவனா
என்று கொதிக்கிறார் உதயகுமார்.

5) போராட்டக் குழுவின் முடிவுக்கோ அல்லது
ஊர்க்கமிட்டியின் முடிவுக்கோ ஒருபோதும்
முகிலன் கட்டுப் பட்டதில்லை. எந்த முடிவையும்
மதித்தது இல்லை. தன்  சொந்த சுயநலன் சார்ந்தே
முடிவெடுப்பவராக முகிலன் இருந்தார். இதனால்
போராட்டம் பாதிப்புக்கு உள்ளானது. சக போராளிகள்
வழக்கறிஞர் ரமேஷ், நித்யானந்த ஜெயராமன்
ஆகியோரின் கருத்தையும் துச்சமாக மதித்தார்.

////ஊர் மக்களும் போராட்டக் கமிட்டியும் ஒன்று கூடிப் பேசி 
முடிவெடுப்பதே சரியானதும் தேவையானதும். இது மக்கள் 
பிரச்சினை” என்று வழக்கறிஞர் ரமேஷ் சொன்ன கருத்துக்கும்,
 “கலந்து பேசி முடிவெடுப்பது சரியான முறை. முகிலனும் 
ஊரு கமிட்டி முடிவிற்கு கட்டுப்பட ரெடியா?” என்று 
நித்தியானந்த் ஜெயராமன் கேட்டக் கேள்விக்கும் முகிலன் 
பதில் சொல்லவேயில்லை.////

6) முகிலன் யாரால் வளர்ந்தார்? யாரால் பிரபலம் ஆனார்?
கூடங்குளம் மக்களால் பிரபலமான அவர் அந்த மக்களின் 
முடிவை மதிக்காமல் தன் சொந்த சுயநல முடிவை 
எடுக்கிறார் என்று குமுறுகிறார் உதயகுமார்.

////அவர் இன்று தமிழகம் முழுவதும் அறியப்படுவதற்கு 
காரணம் இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் அப்பகுதி 
மக்களின் போராட்டங்களும், தியாகங்களும், உழைப்பும் தான். 
அதில் வளர்ந்த ஒருவர் அந்த மக்களின் நலன்களை 
முழுவதுமாகப் புறந்தள்ளிவிட்டு, "தனிப்பட்ட" முறையில் 
தனியாவர்த்தனம் செய்வது ஒரு தன்னல நடவடிக்கை 
என்றே நான் கருதுகிறேன்.

7) இடிந்தகரையில் உள்ள போராட்டக் கமிட்டியின் 
முடிவுக்குக் கட்டுப்படாத முகிலன், போராட்டக் குழுவின் 
அறையைப் பயன்படுத்துகிறார். இது எப்படி நியாயம் ஆகும்      
என்று கொதிக்கிறார் உதயகுமார்.

இடிந்தகரையில் உள்ள ஆவணங்களை முறைகேடாக 
எடுத்துச் செல்கிறார் முகிலன் என்று குற்றம் 
சாட்டுகிறார் உதயகுமார். போராட்டக்குழு வழக்கறிஞர்
செம்மணியிடம் உண்மையைச் சொல்லாமல் அவரை 
ஏமாற்றி ஆவணங்களை வாங்கிச் செல்கிறார் முகிலன் 
என்று கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார் உதயகுமார்.  

////இடிந்தகரையிலுள்ள போராட்டக்குழு அறையை 
பயன்படுத்துவதும், அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் 
செல்வதும், போராட்டக் குழு வழக்கறிஞர் வழ. செம்மணியிடம் 
போய் முழுத் தகவல்களை, உண்மைகளைச் சொல்லாமல் 
ஆவணங்களை வாங்கிச் செல்வதும் தவறு//// 

8) இப்போது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்
உதயகுமார். முகிலனுக்குப் பின்னால் இருந்து இயக்குபவர் 
யார்? யார்? யார்? என்று கேள்வி எழுப்புகிறார் உதயகுமார்.
இதற்கு உதயகுமாருக்கு விடை தெரியும்.

 /// இதன் பின்னணியில் இருந்து இயக்குகிறவர்கள் யார் யார், 
அவர்களின் நோக்கங்கள் என்னென்ன என்பவைப் 
பற்றியெல்லாம் பலரும் பல தகவல்களைச் சொல்கிறார்கள்////

 9) இறுதியாக ஓர் அற்புதமான குறளை மேற்கோள் காட்டுகிறார்.
உதயகுமார். அவரின் தமிழ்ப் பற்றுக்குத் தலை வணங்குகிறேன்.
ஓரிடத்தில் செயல்படும்போது அங்குள்ள அனைவரையும் 
அரவணைத்துச் செல்லாதவனும், தன்னுடைய ஆற்றலின் 
வரம்பை அறியாமல் மிகையாக மதிப்பிடுபவனும் 
சுயமோகத்தில் மூழ்கி தன்னைத்தானே புகழ்ந்து 
கொண்டிருப்பவனும் விரைவில் அழிவான் என்பது 
இக்குறளின் பொருள்.

////அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்.///

10) முகிலனைப் பற்றிய உதயகுமாரின் கருத்து 
பொதுவெளியில் பதிவு செய்யப்பட்ட கருத்து.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று கூறுவார்கள்.
அதே போல வசிஷ்டரான உதயகுமாரின் வாயாலேயே 
முகிலன் ஒரு போலிப் போராளி என்பதையும் 
அவரை யாராலோ பின்னல் இருந்து இயக்கப் 
படுகிறார் என்பதையும் அறிந்து கொண்டோம்.
அழிவான் என்று சொன்னார் வள்ளுவர்! அதையே சொன்னார் 
உதயகுமாரும்! இருவருமே தீர்க்கதரிசிகள்தாம்! இன்று 
உதயகுமார் சொன்ன அழிவை கண்முன் பார்க்கிறோம்!
----------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ////.....//// இந்தக் குறிக்குள் உள்ளவை உதயகுமார் 
அவர்களின் முகநூல் பதிவு dtd 24 டிசம்பர் 2015).
உதயகுமாரின் பதிவை முதல் கமென்டில் காண்க.
****************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக