சனி, 6 ஜூலை, 2019


2009 மே மாதத்தில் ஈழத்தில் இனப்படுகொலையும்
இந அழிப்பும் நடந்த நேரம். சிங்கள ராஜபக்சேவுடன்
எரிந்து சோனியா அரசு இனப்படுகொலையை
நிகழ்த்தியது. தமிழகம் கொந்தளித்து நின்ற நேரம்.

அந்த நேரத்தில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில்
திமுகவினருக்குப் பதவிகள் பெறுவதற்காக
சக்கர நாற்காலியில் பயணம் செய்தவாறே
கலைஞர் டெல்லி சென்றார். சோனியாவிடம்
பேரம் பேசினார்.

கலைஞரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்கு
உள்ளானது.அந்நேரத்தில் தமது செயலை
நியாயப்படுத்தும் பொருட்டு கலைஞர்
புறநாநூற்றில் இருந்து ஒரு பாடலைக் கூறி,
தம் செய்கை தவறாகாது என்று வாதிட்டார்.
அந்தப் பாடல்தான் "ஓரில் நெய்தல் கறங்க"
என்று தொடங்கும் பாடல். அதை இயற்றியவர்
பக்குடுக்கை நன்கணியார்.

பாடலையும் அதன் பொருளையும் பின்னர்
எழுதுகிறேன். பாடலைப் படித்துப் புரிந்து
கொண்டால், கலைஞரின் நியாயப்படுத்தல்
மிகவும் அபாரம் என்று புரியும். An excellent justification indeed!
   

orupakkam uuzhal purinthu kondirunthaalum

ஒரு பக்கம் ஊழல் புரிந்து கொண்டிருந்தாலும்
மறுபக்கம் தமிழைப் பரப்பிக்கொண்டுதான்
இருந்தார். இதை மறக்கவோ மறுக்கவோ
இயலாது.  உண்மைதான்


கலைஞர் தமிழுக்குச் செய்த தொண்டை
ஊழல் என்னும் ஒற்றைச் சொல்லில்
புறந்தள்ளி விட இயலாது. வரலாற்றில் தனிநபர்
வகிக்கும் பாத்திரத்தை மார்க்சியம் மறுப்பதில்லை.


வேரறுக்க காழ்ப்பைப் புறந்தள்ளுக.
காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்
அறிவுடையார் கண்ணதே. நிற்க.

மாறன் குருவை ஒருபோதும் விஞ்சியதில்லை.
தமது ஆங்கிலக் கல்வி, அகில இந்திய உறவு
ஆகியவை காரணமாக மாறன் அவர்கள்
கலைஞரின் complimentary ஆகத் திகழ்ந்தார்.

ஒரு கோணம் 70 டிகிரி என்றும் மற்றொரு கோணம்
20 டிகிரி என்றும் கொண்டால், இரண்டையும் சேர்த்தால்
90 டிகிரி வரும். இப்போது இவ்விரு கோணங்களும்
complimentary angles எனப்படும்.


நீங்கள் குறிப்பிடும் ஏனையோர்


படிப்பறிவற்ற தமிழ் மக்களிடம் அவர் தமிழைக்
கொண்டு சென்றார். ஏனையோர் படித்த
வர்க்கத்தாரிடம் கொண்டு சென்றனர்.
மறைமலை அடிகளின் தமிழ் எத்தனை பேருக்குப் புரியும்?
இதில் விவாதிக்க எதுவும் இல்லை.
இதெல்லாம் நிரூபிக்கப்பட்டு ஏற்கப்பட்டு
முடிந்துபோன விஷயங்கள் ஆகும்.

தமிழ் உணர்வு என்பது இயற்கையாக மீசை
முளைப்பது போன்றது. ஒப்பனை செய்து செயற்கையாக
தமிழ் உணர்வு உள்ளது போல் காட்ட இயலாது.
காட்டினால் நிற்காது. இயன்றவரை தமது
சுயநல வாழ்வின் எல்லைக்குள் நின்று கொண்டிருந்த 
போதிலும், கலைஞர் தமிழுக்குத்
தொண்டாற்றினார் என்பதை மறைக்க இயலாது. 
அரசியல் காழ்ப்பு உடையோரே அங்ஙனம் பேச இயலும்.
காய்தல் உவத்தல் அகற்றி ஆய்வோர் அவ்வாறு
காழ்ப்புடன் கலைஞரின் தமிழ்ப்பணியை
மறுப்பதில்லை. 

புழுவினும் இழிந்த மு க ஸ்டாலின், புழுவினும் இழிந்த
உதயநிதி, புழுவினும் இழிந்த தயாநிதி மாறன்,
புழுவினும் இழிந்த கனிமொழி,
புழுவினும் இழிந்த அழகிரி ஆகியோரை நீங்கள் 
எவ்வளவுதான் திட்டினாலும் தமிழ் உணர்வார்கள்
கவலைப் படுவதில்லை. ஆனால் கலைஞரை அவ்வாறு
திட்டினால் ஓராயிரம் பேராவது தடியை எடுத்துக்
கொண்டு தாக்க வருவார்கள். அப்படி வருவோரில்
மிகப் பெருமான்மையானோர் திமுகவினர் அல்லர்.

என்னுடைய DNAஐ அறுத்துப் பார்த்தால் அதில் தமிழ்
இருக்கும். கலைஞரின் DNAஐ அறுத்துப் பார்த்தாலும்
அதிலும் தமிழ் இருக்கும். என்னுடைய தமிழறிவு,
புலமை, தமிழ்ப்பற்று, தமிழுணர்வு ஆகியவற்றை
உருவாக்கியதில் கலைஞருக்குக் கொஞ்சமேனும்
பங்க உள்ளது. இந்த உண்மையை என்னால்
மறுக்க இயலாது. இன்றைய திமுகவை அழிக்கும்
முயற்சிக்கு நான் தோல்  கொடுப்பேன்.ஆனால்
கலைஞரின் தமிழுக்கு இந்தக் கட்டை மண்ணில்
போகிறவரை மதிப்பளிப்பேன்.
 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக