வியாழன், 11 ஜூலை, 2019

அத்தி வரதரும் காரல் மார்க்சும்!
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
அத்தி வரதர் என்ற புதிய கடவுள் வந்திருக்கிறார்.
ஆம், அவர் முற்றிலும் புதிய கடவுள்தான். தேவாரம்
திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைப்
பாடல்களைப் பெரிதும் நான் படித்திருக்கிறேன்.
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்தையும் படித்து
இருக்கிறேன்.திருவிளையாடல் புராணம் கூட.
நானறிந்தமட்டில் அவற்றில் அத்தி வரதர் பற்றி எதுவும் இல்லை.

அத்தி வரதர் 0 ஆண்டுகளாகத் தண்ணீருக்குள்
அமிழித்தி வைக்கப் பட்டு இருக்கிறார் என்ற செய்தி
என்னை மிகவும் ஈர்த்தது.

உடனே வேதியியல் ஆய்வகத்தில் தண்ணீருக்குள் அமிழ்த்தி
வைக்கப் பட்டிருக்கும் வெள்ளை பாஸ்வரம் (white phosphorus)
எனக்கு நினைவு வந்தது. பாஸ்வரத்தின் மிகப் பொதுவான
இரண்டு புறவேற்றுமை உருவங்களை (allotropes) வேதியியல்
படித்தோர் அறிந்திருக்கலாம்.

வெள்ளை பாஸ்வரம் எப்போதுமே நீரில் அமிழ்த்தி
வைக்கப்பட்டு இருக்கும். ஏனெனில் அதன்
தீப்பற்றிக் கொள்ளும் வெப்பநிலை (ignition temperature)
மிகவும் குறைவு. சாதாரணமாக  அறை வெப்பநிலையில்
(room temperature)  அது தீப்பற்றிக் கொள்ளும்.

அறை வெப்பநிலை என்றால் என்ன? இந்தக் கட்டுரையை
சென்னையில் எனது அறையில் அமர்ந்து நான் எழுதுகிறேன்.
என்னிடம் தெர்மா மீட்டர் உள்ளது. எனது மொபைல்
தொலைபேசியம் வெப்பநிலையைக் காட்டும். அதன்படி
32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என் அறையில் உள்ளது.

எனவே வெள்ளை பாஸ்வரத்தின் தீப்பற்றிக் கொள்ளும்
வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்குச் சற்று அதிகமானது.
எனவே வெள்ளை பாஸ்வரத்தை தண்ணீருக்குள் அமிழ்த்தி
வைக்காவிட்டால் அது உடனே தீப்பற்றிக் கொள்ளும்.

அப்படியானால் அத்தி வரதரின் ignition temperature என்ன?
30 டிகிரி செல்சியசோ அல்லது 25 டிகிரி செல்சியசோ
இருக்கக் கூடும்.

நமது வீட்டில் மேசை நாற்காலி போன்ற மரச்சாமான்கள்
உள்ளன. இவை ஏன் அறை வெப்பநிலையில் தீப்பற்றிக்
கொள்வதில்லை? இவற்றின் ignition temperature மிக அதிகம்
என்பதே காரணம். மிக அதிகம் என்றால் எவ்வளவு
இருக்கும்? தோராயமாக 180 டிகிரி செல்சியஸ்
இருக்கக் கூடும். துல்லியமான ignition வெப்பநிலையை
உரிய அட்டவணையைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சரி, அடுத்த கேள்வி! வெப்பநிலை (temperature என்பது
ஸ்கேலாரா (scalar) அல்லது வெக்டாரா (vector)?
ஸ்கேலார்தான்! எப்படி என்று சிந்தித்து விடை காணுங்கள்.

ஸ்கேலார் வெக்டார் பற்றி 12ஆம் வகுப்பு மாணவன்
அறிவான். அத்துடன் டென்சார் (tensor பற்றியும்
அறிந்து கொள்ள வேண்டும். டென்சார் பற்றித்
தெரியாமல் பிரபஞ்சத்தைப் பற்றியோ, ஐன்ஸ்டினின்
பொதுச்சார்பியல் பற்றியோ அறிந்து கொள்ள முடியாது.

எனினும் டென்சார் அல்ஜிப்ரா பற்றி BE  படித்துள்ள
பொறியியல் பட்டதாரிகள் கூட அறியாமல்
உள்ளானார். காரணம் BE படிப்பின் பல்வேறு
பாடப்பிரிவுகளின் பாடத்திட்டத்தில் டென்சார்
அல்ஜீப்ரா இல்லை.

MSc கணிதம், MSc இயற்பியலில் படிப்புகளின்
பாடத்திட்டத்தில் மட்டுமே டென்சார் அல்ஜீப்ரா
உள்ளது. எனவே அறிவியல் படித்த மிகப் பலரும்கூட
டென்சார் அல்ஜீப்ரா அறிந்திராத நிலையே உள்ளது.

அத்தி வரதர் ஆன்மிகத்தினருக்கு மட்டுமே பயன்படுபவர்.
அவரைப் பயன்படுத்தி நான் அறிவியலை விளக்கி
உள்ளேன். அத்தி வரதர் முதல் அல்லா கர்த்தர் வரை
அனைத்துக் கடவுள்களும் அறிவியலுக்குக் கட்டுப்
பட்டவர்கள். ஆனால் அறிவியல் கடவுளுக்குக்
கட்டுப் பட்டதல்ல. இதை இக்கட்டுரை மூலம்
நான் நிரூபித்துள்ளேன்.

இது கடவுள் நிந்தனை அல்லது மத நிந்தனைக்கான
(blasphemy) பதிவு அல்ல. இது நாத்திகப் பதிவு.
இது அறிவியல் பதிவு. எமது நாத்திகம் காரல்
மார்க்சின் நாத்திகம். கடவுள்களை நிந்தனை
செய்துதான் எமது நாத்திகத்தை வளர்க்க
முடியும் என்ற நிலை மார்க்சிடம் கிடையாது.
**************************************************     

அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
---------------திருக்குறள்------------------ 
----------------------------------------------------------------------------

அறிவியல் இல்லாமல், கணிதம் இல்லாமல்,
அல்ஜீப்ரா இல்லாமல் எந்த ஒரு சமூகத்திலும் 
பொருளுற்பத்தி இல்லை.


 


  

            
.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக