ஞாயிறு, 7 ஜூலை, 2019

முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குரிய
நியாயத்தைப் பெற்றுத் தருவதே சமூகத்தின் கடமை!
முகிலன் தான் புரிந்த பாலியல் குற்றங்களுக்காகத்
தண்டனை பெற்றே ஆக வேண்டும்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
1) ஆகக் கடைசியில் முகிலன் பிடிபட்டு விட்டார். ஆந்திரக்
காவல் துறை அவரை திருப்பதியில் பிடித்துள்ளது. ஆக முகிலன் உயிரோடுதான் இருக்கிறார் என்று நாம் அன்றே கூறினோம்.
அதை மறுத்து, முகிலனைக் கொலை செய்து புதைத்து
விட்டார்கள் என்று வதந்தி பரப்பிக் கொண்டிருந்தனர்
இழிந்த சமூக விரோதிகள்.

2) தந்தி டிவியில் பணியாற்றும் ஒரு குட்டி முதலாளிய
ஊடகவியலாளர் எம்மிடம் மிகவும் சண்டை பிடித்தார்.
முகிலனைக் கொன்றே விட்டார்கள் என்று வயிறு
வெடிக்கக் கத்திக் கொண்டே இருந்தார். இன்று முகிலன்
உயிருடன் உள்ளார் என்பது உலகறிந்த உண்மை
ஆகி விட்டது.

3) ஆனாலும் வதந்தியைப் பரப்பி சமூகத்தின் பொது
அமைதியைக் குலைத்த அந்தக் குட்டி முதலாளித்துவ
அற்பர்கள் நேர்மையுடன் தங்கள் தவறை ஒப்புக்
கொள்வார்களா? ஒருபோதும் மாட்டார்கள். ஏனெனில்
அவர்கள் நேர்மையற்றவர்கள்.

4) முகிலன் மீது ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
யார் அந்தப் பெண்? அவர் ஒரு சூழலியல் போராளி.
முகிலனுடன் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு,
மணல் கொள்ளை எதிர்ப்பு, காவிரி ஆற்றுநீர்ப்
பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு என்று அனைத்துப்
போராட்டங்களிலும் களத்தில் நின்று போராடிய
பெண்தான் அவர். அவர் மீது தமிழக அரசு தொடுத்த
நிறைய வழக்குகள் உள்ளன. அவற்றுக்காக நீதிமன்றம்
சென்று கொண்டுதான் இருக்கிறார் அந்தப்பெண்.
முகிலனின் விசுவாசியும் அவரின் சக போராளியும்
ஆவார் அந்தப் பெண்.

5) இந்தப் பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக  .
ஆசை காட்டி, கெடுத்துச் சீரழித்து, வாக்களித்தபடி
திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார் முகிலன்.
அந்தப் பெண்ணின் தரப்பில் இந்த விவகாரத்தைத்
தீர்க்க ஒரு பஞ்சாயத்து கூட்ட முடிவு செய்தனர்.
அந்தப் பஞ்சாயத்து பெப்ரவரி 16 அன்று நடக்க இருந்த
நிலையில், அதற்கு முந்திய நாள் இரவு (பெப்ரவரி 15)
வேண்டுமென்றே தலைமறைவு ஆகி விடுகிறார் முகிலன்.

6) முகிலனின் தலைமறைவு அவராகவே எடுத்த
சுய முடிவின் பேரில் அமைந்த சுயமறைவு (self exile).
அடுத்த நாள் நடைபெறும் பஞ்சாயத்தைச் சந்திக்கும்
மனநிலையோ துணிவோ இல்லாமல் அவரின் சொந்தப்
பிரச்சினைக்காக அவர் தலைமறைவு ஆனார். இதை
சமூகப் பிரச்சினையாகக் கருதுவதோ அப்படி
ஆக்குவதோ அறியாமை மட்டுமல்ல சமூக விரோதச்
செயலும் ஆகும்.

7) பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில்
முகிலன் மீது ஏமாற்றுதல் (cheating), கற்பழிப்பு (IPC பிரிவு 376)
மற்றும் பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்
கீழ் பெண் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளின்
அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் குறைந்தது ஏழாண்டு
சிறை வரை முகிலனுக்கு தண்டனை கிடைக்கும் என்று
சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

8) முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு
பற்றிய வீடியோ அரசுக்கு எதிரான மாபெரும் ஆதாரம்
என்று குட்டி முதலாளிய அன்பர்கள் கூறி வருகின்றனர்.
இது நூற்றுக்கு நூறு சதம் பொய் ஆகும்.

9) இந்த வீடியோவைத் தயாரித்தவர் முகிலன் அல்லர்.
பெரிதும் முயன்று பல ரிடமும் பேசி ஆதாரங்களைத்
திரட்டியவர்கள் வேறு இருவர்; முகிலன் அல்லர்.
அந்த ஒரிஜினல் வீடியோவில் அதைத் தயாரித்தவர்களின்
பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் வேண்டுமென்றே
தயாரித்தவர்கள் பெயர்கள் உள்ள பகுதியை நீக்கி
விட்டு, தான் தயாரித்த வீடியோ போல அதை வெளியிட்டார்
முகிலன். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் உள்ளது.
இதை மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் அறிவர்.
தோழர் டி எஸ் எஸ் மணி அவர்கள் வின் டிவியில் தாம்
நடத்தும் நிகழ்ச்சியில் இதை அன்றே தெரியப் படுத்தினார்.

10) இந்த வீடியோவால் எடப்பாடி அரசுக்கு அசௌகரியம்
என்றால், அந்த வீடியோவைத் தயாரித்த இரண்டு பேரை
அல்லவா போலீஸ் கைது செய்திருக்க வேண்டும்? ஆனால்
அப்படி எதுவும் நடக்கவில்லையே. வீடியோவைத்
தயாரித்தவர்கள் சர்வ சுதந்திரமாகவும் நிம்மதியாகவும்
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றனர்.

11) முகிலன் வெளியிடும் முன்பே, உளவுத் துறையிடம்
அந்த வீடியோ இருந்தது. அந்த வீடியோவால் அரசுக்கு
எவ்வித ஆபத்தும் இல்லை என்று உளவுத் துறை
முடிவு செய்ததாலேயே, அந்த வீடியோவை உளவுத்துறை
பறிமுதல் செய்யவில்லை. அதைத் தயாரித்தவர்களையும்
கைது செய்யவில்லை. உண்மை இப்படி இருக்க,
முகிலன் வெளியிட்ட வீடியோ என்று பூச்சாண்டி
காட்டுவதால் என்ன பயன் விளையும்?

12) முகிலனைப் போன்றவர்கள் ஏதேனும் ஒரு கட்சியிலோ
அமைப்பிலோ சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
ஆனால் முகிலன் ஒருநாளும் இதற்கு உடன்பட மாட்டார்.
ஏனெனில் கட்சியில் சேர்ந்தால் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு
உட்பட வேண்டும். அது என்றுமே முகிலனுக்கு ஏற்புடையது
அல்ல. தோழர் கார்முகில் விதித்த நியாயமான
கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்தே முகிலன் அந்த
அமைப்பின் இளைஞர் பிரிவில் இருந்து விலகினார்!

13) முகிலன் வெறும் குட்டி முதலாளிய விளம்பரப்
பிரியர். கோட்பாட்டு ரீதியாக எவ்விதக் கறார்த்
தன்மையும் அற்றவர். பின்நவீனத்தின் செல்வாக்கிற்கு
இரையானவர். He is after all a liberal, post modern petti bourgeois!
He is incapable of challenging the state. எனவே அரசின் பார்வையில்
அவர் வெறும் nuisance value தரக்கூடியவர்; அவ்வளவே!

14) குட்டி முதலாளிய முகிலனை லெனின் ரேஞ்சுக்கு
உயர்த்தும் சக குட்டி முதலாளியர்கள் அற்பப் புழுக்கள்.
முகநூலில் புரட்சிகரமாக ஒரு பதிவு போடுவது
மட்டுமே புரட்சி என்று நினைக்கிறது புழுவினும்
இழிந்த குட்டி முதலாளியம். இத்தகைய குட்டி
முதலாளிய அற்பர்களின் உடம்பு முழுவதும்
சூடு போட்டார் மாவோ. புரட்சி என்பது மாலை நேரத்து
விருந்து அல்ல என்கிறார்.

15) முகிலனின் மெய்க்கீர்த்தியைப் பாடும் குட்டி
மதலாளியர்கள் முகிலன் குறித்து தாங்கள் அறிந்த
செய்திகளை CB CID அதிகாரிகளிடம் சென்று கூற
வேண்டியதுதானே! ஏன் கூறவில்லை? CB CIDயில்
இருந்து அழைத்தவுடன் நான் சென்று அங்கு சாட்சியம்
அளித்தேன்.

16) முகிலன் எமக்குப் பகைவர் அல்லர். அவரைப்
பகையாகக் கருதும் அளவு எமது அரசியலோ,
அமைப்போ, வாழ்வோ பலவீனம் ஆனதல்ல.
இந்தப் பெண்ணுக்கு அவர் அநீதி இழைக்காவிட்டால்
அவர் விஷயத்தில்நான் தலையிடப் போவதும் இல்லை.

17) நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்கிறேன்.
அந்தப் பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய நீதியைப்
பெற்றுத் தருவேன்.

18) அந்தப்பெண் குறித்து எவரேனும் அவதூறு மொழிந்தால்
அவர்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று
எச்சரிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
(தேவைப்படின் தொடரும்)
****************************************************


.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக