பிசிர் என்ற ஊர் இன்றில்லை; நேற்றும் இல்லை.
அவ்வூர் புறநானூற்றுக் காலத்தில் மட்டுமே
இருந்த ஊர். பின்னாளில் நிலவுடைமைச் சமூகம்
தோன்றி வளர்ந்து நிலைபெற்ற காலத்தில்,
முன்னர் இருந்த பல ஊர்கள் மறைந்தன.
ஆயினும் தம்மூர் பற்றிய ஓர் அழியாக் குறிப்பை
விட்டுச் சென்றுள்ளார் பிசிராந்தையார். சான்றோர்
பலர் வாழும் ஊரே எம்மூர் என்று சொல்லிச்
சென்றுள்ளார் புலவர்.
அந்தத் தடயத்தை வைத்துப் பார்க்கிறபோது,
இன்று சான்றோர் பலர் வாழும் ஒரே ஊராக
வீரவநல்லூர் மட்டுமே உள்ளது. எனவே வீரவநல்லுரே
அன்றைய பிசிர் என்னும் ஊர் என்ற முடிவுக்கு
நுண்மாண் நுழைபுலம் மிக்கோர் வருகின்றனர்.
எனவே வீரவநல்லூரே பிசிர்!
யாமே பிசிராந்தையார்!
மெய்யாகவே சான்றோர்களாய் அவர்கள் இருப்பதால்
பார்க்கும் என் கண்களுக்கும் அவர்கள் அவ்வாறே
காட்சி அளிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக