பாண்டியன் அறிவுடை நம்பிக்கு
பிசிராந்தையார் அறிவுரை!
தொல்காப்பியரை மீறிய அறிவுடை நம்பி!
இலக்கண வறட்டுவாதம் இனியும் எடுபடாது!
------------------------------------------------------------------
நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் புறநானூற்றுப்
பாடலை நாடாளுமன்றத்தில் சொன்னார்!
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
என்று தொடங்கும் பாடல் அது.
அப்பாடலில் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு
புலவர் பிசிராந்தையார் அறிவுரை சொல்கிறார்.
சரி, பாண்டியன் அறிவுடை நம்பி எப்படிப்பட்டவர்?
அவரும் ஒரு புலவரே!
அவர் எழுதிய பாடலும் புறநானூற்றில் உள்ளது.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே.
(பொதுவியல் திணை, பொருண்மொழிக் காஞ்சித் துறை)
இது மக்கட்பேறின் மாண்பை உணர்த்தும் பாடல்.
தொல்காப்பியருடன் உடன்படாத அறிவுடை நம்பி!
---------------------------------------------------------------------------------
பலரோடு உண்ணும் என்று எழுதி இருக்கிறார்
பாண்டிய மன்னர் அறிவுடை நம்பி.
நன்கு கவனிக்கவும்: பலரோடு = பலர் + ஓடு
இங்கு ஓடு என்பது உருபு; மூன்றாம் வேற்றுமை உருபு.
ஒரு வேற்றுமைக்கு ஒரு உருபு மட்டுமே என்பது
தொல்காப்பியர் நெறி. மூன்றாம் வேற்றுமை உருபாக
தொல்காப்பியர் "ஒடு" என்பதை மட்டுமே குறிக்கிறார்.
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் என்ற குறளில்
ஒடு என்னும் உருபை வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார்.
ஆனால் பாண்டியன் அறிவுடை நம்பியோ "ஓடு" என்னும்
உருபைப் பயன்படுத்துகிறார். அவர் காப்பியரைப்
பின்பற்றவில்லை. அவர் ஓடு என்னும் உருபைப்
பயன்படுத்தி உள்ளார். (பலரோடு உண்ணும்)
தொல்காப்பியர் .... ஒடு
வள்ளுவர் ...................ஒடு
பாண்டிய மன்னர்...ஓடு
தொல்காப்பிய இலக்கணத்தை இன்று இந்த 21ஆம்
நூற்றாண்டில் மக்கள் பின்பற்றவில்லை என்றால்
அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால்
பாண்டியன் அறிவுடை நம்பி யே பின்பற்றவில்லை!
அறிவுடை நம்பியின் காலம் தொல்காப்பியத்தை
ஒட்டிய காலமே!
அறிவுடை நம்பியின் காலத்தில் நன்னூல் இயற்றப்
படவில்லை. அப்போது பவணந்தியார் பிறக்கவே
இல்லை. ஆக, தொல்காப்பியர் காலத்திலேயே
தொல்காப்பிய இலக்கணத்தை விட்டு விலகிய
போக்குகள் காணப்பட்டன. இலக்கண வறட்டுவாதம்
அறிவுடை நம்பியிடம் எடுபடவில்லை.
அறிவுடை நம்பியின் "இலக்கண மீறல்"கள்
பின்னாளில் இலக்கணம் ஆயின. இது வரலாறு.
எனவே அடுத்த ஆண்டு சில புதிய வேற்றுமை
உறுப்புகளை நான் அறிமுகப் படுத்த உள்ளேன்.
புதிய வேற்றுமைகளையும் அறிமுகப் படுத்த உள்ளேன்.
தமிழுக்குப் புதிய இலக்கணம் தருவேன்.
வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை உள்ளிட்ட
ஊர்களில் மக்கள் எப்படிப் பேசுகிறார்களோ, அதுவே
தமிழ். அதை ஒட்டியே இலக்கணம் அமையும்!
*****************************************************
தனிமங்களின் அட்டவணையான periodic tableஇல்
எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படும் தனிமங்களுக்கும்
இடமளித்தது போல, எதிர்காலத்தில் உருவாகப்போகும்
வேற்றுமை உருபுகளுக்கும் எனது இலக்கணத்தில்
இடமளிக்கப் படும். அத்துச் சாரியை போன்ற
வேண்டாத சாரியைகள் நீக்கப்படும்.
வழுவமைதிகளுக்கு இடமளிக்கப்படும். காட்டாக
ஒரு ஓர் வேற்றுமைகள் அகற்றப்படும்.
இலக்கணம் சமைப்பது என் கடமை. ஏற்பது
மக்களின் உரிமை!
அரசு அதிகாரம் அவரிடம் இருந்தது. ஒரு பெரும்
இயக்கத்தின் தலைவர் என்ற அளவில் சமூகத்துடன்
உரையாடும் வாய்ப்பு அவருக்கு இருந்தது.
அதன் வாயிலாக வேறெந்த முதல்வர்களை விட
அவரால் தமிழுக்குத் தொண்டாற்ற முடிந்தது.
இதன் பொருள் அவர் அரசியலில் அப்பழுக்காற்றவர்
என்பதல்ல. அல்ல, அல்ல, அல்ல. நிற்க.
புழுவினும் இழிந்த மேனனிடம் அப்துல்லா அடியார்
இருந்தார். அவர் நீரோட்டம் என்ற ஏட்டை நடத்தி
வந்தார். அதில் ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ
விளங்கி என்ற பாடலை எழுதினார். ஞாயிறு (சூரியன்)
தமிழ் இரண்டையும் ஒப்பிட்டு, தமிழின் மான்பைக் கூறும்
பாடல். இந்தப் பாடலின் பொருள் புழுவினும் இழிந்த
மேனனுக்குப் புரியவில்லை என்பது இயல்பே.
அடியார் உதயசூரியனே உயர்ந்தது என்று எழுதி
இருக்கிறார் என்று மேனனிடம் சில வேண்டாதவர்கள்
போட்டுக் கொடுத்ததை அடுத்து அடியார் கட்சியில்
இருந்து விலக நேரிட்டது. மேனன் நடந்து கொண்ட விதம்
என்ன தமிழுக்குத் தொண்டாற்றிய செய்கையா?
வேறொரு நிகழ்வு! வேட்பாளர் பட்டியலை கலைஞர்
அறிவிக்கும்போது க சுப்புவின் பெயர் இல்லை.
உடனே மேடை நோக்கி ஓடிய க சுப்பு, கலைஞரிடம்
சென்று, " நல்லதோர் வீணை செய்தெ அதை நலங்கெடப்
புழுதியில் எறிவதுண்டோ என்கிறார். அடுத்த நொடி
கலைஞர் அறிவிக்கிறார்; வில்லிவாக்கம் தொகுதி, வேட்பாளர்
க சுப்பு என்று.
இதுதான் தமிழ் உணர்வு. இது மேனனிடமும் ஜெயாவிடமும்
மருந்துக்கும் கிடையாது. இங்குதான் கலைஞர் நிற்கிறார்.
இதையெல்லாம் ஊழல் என்ற ஒற்றைச் சொல்லால்
யாரும் அழித்து விட முடியாது. காழ்ப்புடன் எதையும்
அணுகினால், உண்மையை ஒருபோதும் அடைய
முடியாது. ஒருவரின் தமிழ்ப்புலமை, தமிழ்ப்பற்று,
தமிழ் உணர்வு ஆகியவற்றை அவரிடம் உள்ள ஊழலால்
அழித்து விட முடியாது.
ஒற்றைத் தன்மையுடன் உலகில் எதுவும் இல்லை.
அத்வைதம் எல்லாம் உலகில் கிடையாது. உலகம்
என்பது பன்மைத்துவம். ஒன்றை எடுத்துக் கொண்டு
அதுவே எல்லாம் என்று கூறுவது உண்மைக்குப்
புறமானது.
கலைஞர் மாபெரும் தமிழறிஞர் என்பதால்
அவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று சொல்ல
முடியுமா? முடியாதல்லவா? அதுபோலவே,
அவர் ஊழல் என்பதால், அவர் தமிழ்ப் பற்று இல்லாதவர்
என்றும் கூற இயலாது.
ஆயிரம் முறை பதில் கூறிச் சளித்துப் போன
விஷயம் இது. இனியும் சொல்ல என்ன உள்ளது?
முகிலனை திருப்பதியில் பார்த்ததாக
கிடைத்த தகவலை அடுத்து, அவரை
ஆந்திர போலீஸ் கைது செய்து காவலில்
வைத்துள்ளதாக நியூஸ் 18 செய்தி!
மருதுபாண்டியன் கிருஷ்ணசாமி தியாகராஜன் நன்றி
கொண்டு என்பது மூன்றாம் வேற்றுமையாகக்
கருதப்பட்டு வருகிறது. எப்போதில் இருந்து?
குறைந்தது நூறாண்டுகள் இருக்கும். என்ன
இருக்கிறதோ அதை நான் கூறியுள்ளேன்.
நன்னூல் உரையாசிரியர்களின் பல்வேறு
உரைகளைப் படிக்கவும். அவற்றில் கொண்டு
என்னும் உருபு பற்றிக் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கப்பட்ட ஒன்றை, ஏற்கப்பட்ட பின்னர்,
அதை அறியாமையால் இன்று எப்படி மறுக்க இயலும்?
கொண்டு என்பது வேற்றுமை உருபாக ஏற்கனவே
இருக்கிறதே! நான் பிறக்கும் முன்பே இருக்கிறதே!
அதனுடன் இன்று முரண்படுவது நியாயமா? அருள் கூர்ந்து
உரிய நன்னூல் உரைகளைப் படிக்குமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.
அரசியலையும் இலக்கியத்தையும் சேர்த்துக் குழப்பாமல்
இருந்தால் போதும். டெல்லி சென்று பதவிகளை
யோசித்தது அரசியல் நிகழ்வு. இது கொடியது; தகாது.
அதே நேரத்தில், அவரின் விளக்கத்தின் மூலம்
புறநானூற்றுப் பாடல் பிரபலம் அடைகிறது.
இது நல்ல அம்சம்.
எந்த ஒன்றிலும் 100 சதம் நல்லதோ அல்லது கெட்டதோ
மட்டும் இருக்கும் என்று பொருள்முதல்வாதம்
கூறவில்லை. 100 சதம் தூய்மையான பொருள்முதல்வாதம்
அல்லது கருத்துமுதல்வாதம் உலகில் எங்கும் இல்லை.
எனவே கசடு நீக்கி நல்லதை மட்டும் கொள்க. யா
குழப்பாமல் இருக்குமாறு வேண்டுகிறேன். கலைஞர்
சோனியாவிடம் பதவிகளை யோசித்தது
பின்னர் எழுதுகிறேன்.
ஏற்கனவே இருக்கும் இலக்கணத்திற்கு நான்
பொறுப்பேற்கத் தேவையில்லை. புதிய
இலக்கணம் எதையேனும் நான் முன்மொழிந்தால்,
அதற்குரிய விளக்கத்தை அளிக்கக் கடமைப்
பட்டவன். கொண்டு என்னும் உருபு ஏற்கனவே
இருப்பது. அதை நான் முன்மொழியவில்லை.
இந்த நிமிடம் வரை இலக்கண நூலோரால்
ஏற்கப்பட்டு, பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு,
கடைப்பிடிக்கப்பட்டு வரும் இலக்கணத்துக்கு
என்னை மட்டும் பொறுப்பாளி ஆக்குவது
எங்ஙனம் சரி?
புதிய இலக்கணம் சார்ந்த முற்றுப்பெறாத சிந்தனைகள்
மட்டுமே தற்போது என்னிடம் உள்ளன.
பொதுவெளியில் எதுவும் என்னால் முன்மொழியப்
படவில்லை. எனது சிந்தனைகள் திரண்டு, முற்றுப்
பெற்று ஒரு வடிவம் எய்திய பின்னரே அவை
பொதுவெளியில் என்னால் முன்மொழியப்படும்.
அதற்கு முன்பாக நான் எதற்கும் பொறுப்பாக முடியாது
அல்லவா!
ஆந்திர போலிசாரின் பிடியில் முகிலன்!
முகிலனை கைது செய்து ஆந்திர போலீஸ்
அழைத்து வருகிறது! இடம்: திருப்பதி ரயில்நிலையம்!
வீடியோ காண்க!
மன்னிக்கவும்; அதுதான் சரியான செய்தி.
முகிலனால் பாதிக்கப்பட்ட அந்தப் போராளிப்
பெண்ணின் பக்கத்தில் உள்ள நியாயத்தை அறிக.
முகிலனைக் கொலை செய்து புதைத்து விட்டார்கள்
என்று வதந்தி பரப்பிய சமூக விரோதக்
கயவர்கள் திருந்த வேண்டும்!
இல்லையேல் தண்டிக்கப் படுவார்கள்!
மருதுபாண்டியன் கிருஷ்ணசாமி தியாகராஜன்
யார் அப்படிச் சொன்னார்கள்? எப்போது?
எந்தத் தவறான செய்தியும் இல்லை.
முகிலனுடன் கூடங்குளம் எதிர்ப்பு, காவிரி ஆற்றுப்
பாதுகாப்பு ஆகிய போராட்டங்களில் ஒரு பெண் ஈடுபட்டார்.
அந்தப்பெண் முகிலன் மீது கற்பழிப்பு வழக்கு
தொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்தப் போராளிப் பெண்ணை
நான் அறிவேன். அந்தப்பெண் தனக்கு நிகழ்ந்த
கொடுமைகளை என்னிடம் கூறி உள்ளார். அவர் கூறியது
உண்மை.
எனவே முகிலன் குற்றவாளியே. அவரின் போராளி
வேடம் கலைந்த நிலையில் அவர் சுயமான தலைமறைவு
மேற்கொண்டார். இன்று ஆந்திர போலீஸ் அவரைப்
பிடித்துள்ளது.
அவர் மீதான கற்பழிப்பு வழக்கு நீதிமன்றத்தில்
நடைபெறும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம்
நியாயம் இருப்பதால் நான் அந்தப் பெண்ணை
ஆதரிக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு கிடைக்க
வேண்டிய நியாயத்தைப் பெற்றுத் தருவதில்
நாங்கள் முன்னிற்போம்; பாடுபடுவோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது அவதூறு பரப்புவோர்
சிறைக்குச் செல்ல நேரிடும்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக