புதன், 17 ஜூலை, 2019

கே என் சிவராமன்
மருதுபாண்டியன் திருப்பூர் குணா ரகுபதி
-----------------------------------------------------------------
பூனைக்கு யார் மணி கட்டுவது?
முகிலனின் மோசடிகளை அம்பலப் படுத்தத் தயக்கம் ஏன்?
கொலை மிரட்டல்களுக்கு நடுவில் அம்பலப் படுத்தினேன்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
பாலியல் செயல்பாட்டாளர் முகிலன் ஒரு ஒற்றைத்
தனிநபர் (single individual). அவர் எந்தக் கட்சியையோ
அமைப்பையோ சாராதவர். கட்சி சார்ந்து இயங்குவது
அல்லது அமைப்பு சார்ந்து இயங்குவது என்ற சிந்தனையே
அணுவளவும் இல்லாதவர். அது மட்டுமல்ல, அமைப்பு
சார்ந்து இயங்கவே கூடாது என்று தெளிவுடன்
இருப்பவர். அவரின் சமூகக் கண்ணோட்டம் என்பது
சுயமோக குட்டி முதலாளியக் கண்ணோட்டம் ஆகும்.

அவரின் பாலியல் பிறழ்வு நடத்தை இன்று புதிதாக
அறியப் படுவதல்ல. ஸ்டெர்லைட் எதிர்ப்பின்
காரணமாகத்தான் அவர் மீது பாலியல் புகார் கூறப்
படுகிறது என்பது கடைந்தெடுத்த பொய்.

அவர் போராட்டம் நடத்திய களங்களில் எல்லாம்
பாலியல் பிறழ்வு நடத்தையுடனே இருந்தார்.
அதன் காரணமாகவே அக்களங்களில் இருந்து
அங்கு போராடி வந்த மக்களால் விரட்டி அடிக்கப்
பட்டார். இது அவரின் கடந்த கால வரலாறு.

அவரின் தலைமறைவு என்பது முற்றிலும் நாடகம்.
பாலியல் புகாரால் எழுந்த நெருக்கடி காரணமாக
தலைமறைவு நாடகம் நடத்தினார். இந்த உண்மையை
இன்று பலரும் உணர்ந்து கொண்டனர்.

அரசையும் நீதிமன்றத்தையும் மக்களையும் அவரை
ஆதரித்த அனைவரையும் முகிலன் ஏமாற்றி விட்டார்
என்றும் அனைவரின் முகத்திலும் கரி பூசி விட்டார்
என்றும் அவரை விழுந்து விழுந்து ஆதரித்த பல
ஊடகத்தினர் எழுதத் தொடங்கி விட்டனர்.

இந்த 140 நாட்கள் எங்கிருந்தார் என்ற கேள்விக்கு
அவர் பதிலளிக்கவே இல்லை. எனினும் அதைக் கண்டு
பிடிப்பது கடினமே அல்ல. போலித் தலைமறைவுக்
காலத்தில் முகிலன் தன் குடும்பத்தாருடனும்
நண்பர்களுடனும் மொபைல் தொலைபேசி மூலம்
தொடர்பில் இருந்தார் என்பதும் இன்று அம்பலப்
பட்டு விட்டது.

நீங்கள் ஒரு பாதாள அறைக்குள் இருந்து கொண்டு
பேசினாலும், நீங்கள் எங்கிருந்து யாருடன் பேசினீர்கள்
என்பதை இன்றைய நவீன தொழில்நுட்பம் கண்டு
பிடித்து விடும். இன்றைய உலகம் ஒரு வயர்லெஸ்
உலகம். ஒரு cell phone call எந்த modemத்தில் இருந்து
emanate ஆகிறது, முதலில் எந்த டவரில் முட்டுகிறது,
அதன் destination என்ன என்பதையெல்லாம் கண்டுபிடிக்க
CBI நிபுணர்கள் தேவையில்லை.

BSNL, AIRTEL, GIO போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பப்
பணியாளர்களே இதை அறிந்து விடுவார்கள்.
35 ஆண்டுகளாக தொலைத்தொடர்புத் துறையிலும்
BSNL நிறுவனத்திலும் பணியாற்றியவன் என்ற
முறையிலும் கடந்த 35 ஆண்டுகளாக தொழிற்சங்கத்தின்
முக்கிய பொறுப்புகளில் இருந்தவன் என்ற முறையிலும்
இதை என்னால் அடித்துக் கூற இயலும். நிற்க.

முகிலனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு
ஆதரவாக ஒரு குரல் கூட எழும்பவில்லை. பெண்ணியப்
போராளிகளாகத் தங்களைப் பொதுவெளியில்
அடையாளப் படுத்துபவர்கள் எவரும் முகிலனால்
பாதிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணுக்கு
ஆதரவாக ஒரு மெலிந்த குரலைக்கூட எழுப்பவில்லை.

குரல் எழுப்பிய ஒன்றிரண்டு பேரும் கூட
அவதூறுகளையும் வசைகளையும் தாங்கிக்கொண்டு
நான் மட்டுமே முகிலனின் மோசடிகளை பொதுச்
சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தேன். பூனைக்கு
மணி கட்ட யாரும் முன்வரவில்லை. துணிந்து மணி
கட்டியவன் நான். இதனால் இன்று வரை எனக்கு
வசவுகளும் கொலை மிரட்டல்களும் வந்து
கொண்டிருக்கின்றன.



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக