சனி, 27 ஜூலை, 2019

பூமியைச் சுற்றும் சந்திரயான்!
நிலவை ஏன் இன்னும் சுற்றவில்லை?
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
சந்திரயான் 2 தற்போது பூமியைச் சுற்றிக்
கொண்டிருக்கிறது. இது நிலவுக்குச் செல்ல இன்னும்
சிறிது காலமாகும்.

பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றிக்
கொண்டிருக்கிறது சந்திரயான். இப்படிச் சுற்றும்போது
பூமியில் இருந்து 45163 கிமீ தூரத்தில் அதன் சேய்மைப்புள்ளி
(apogee) இருந்தது. இது ஜூலை 26ல்.

நிலவுக்குச் செல்ல சுற்றுப்பாதையை அதிகரிக்க
வேண்டும். This exercise is called orbit raising manoeuvre.
அதன்படி, ஜூலை 26ல் சுற்றுப்பாதை அதிகரிக்கப்பட்டது.
தற்போது சேய்மைப்புள்ளி (apogee) 58429  கிமீ உள்ளது.
10000 கிமீ அதிகரிப்பு!

அடுத்து ஜூலை 29ல் மூன்றாம் முறையாக சுற்றுப்பாதையை
அதிகரிக்கப் போகிறோம். பாருங்கள்.
-----------------------------------------------------------------------------------

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
ஆர்யபட்டாவை 1975ல் விண்ணில் செலுத்தியது
ரஷ்யா! ஏவுகணையும் ரஷ்ய ஏவுகணையே! ரஷ்யாவே!
இன்று சந்திரயான்-2 முழுவதும் சுதேசியே!


மிஸ்டர் ஸ்டான்லி ராஜன்,
நூறாண்டுக்கும் மேல் நீர் வாழ்ந்து முடித்த பின்னர்
நீர் நம்புகிற சொர்க்கத்தில் உமக்கு நிச்சயம் இடம் உண்டு.

விண்வெளிக்கு  அனுப்பி ஏதேனும் ஒரு கோளில்
அணுக்கழிவைக் கொட்டலாம். அதுதான் சாத்தியம்.
ஒன்று சந்திரனில் கொட்டி விட்டு வர வேண்டும். அல்லது
செவ்வாயில் கொட்டி விட்டு வர வேண்டும். செவ்வாயில்
கொட்டி விட்டு வந்தால், சந்திரனை அடுத்தபடியாக
மனிதன் குடியேறப் பயன்படுத்த வேண்டும்.

சந்திரனில் கொட்டி விட்டு வந்தால், செவ்வாயை
நாம் குடியேறப் பயன்படுத்த வேண்டும்.

(விண்வெளியில் அந்தரத்தில் கொட்ட முடியாது.
அந்தரத்தில் கொட்டினால் அதன் கதிர்வீச்சு
பூமிக்கு வந்து கொண்டே இருக்கும்.)


இந்தியாவின் இரண்டாவது செயற்கைக்கோள்
பாஸ்கரா-1. இதை ரஷ்ய ஏவுகணை மூலம் ரஷ்யாவே
1979ல் விண்ணில் செலுத்தியது! அப்போது நம்மிடம்
ஏவுகணை இல்லை.

----------------------------------------------------------------------------

யுகத்தின் மீது சுவடு பதித்த டாக்டர் அப்துல் கலாம்!
-----------------------------------------------------------------------------
1957ல் ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோளை
விண்ணில் செலுத்தியது சோவியத் ஒன்றியம்.
அப்போது சோவியத் அதிபராக குருச்சேவ்
இருந்தார். ஸ்புட்னிக் என்று விண்ணில் பறந்ததோ
அன்று முதல் உலகின் விண்வெளி யுகம் (space era)
தொடங்கியது.

இந்தியா தன் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை
1975ல் ரஷ்ய உதவியுடன் ரஷ்ய ஏவுகணை மூலம்
விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் இந்தியாவிலும்
விண்வெளி யுகம் தொடங்கியது.

விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் ஆகியோர் இந்தியாவின்
விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்டனர். இவர்களைத்
தொடர்ந்து டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித்
துறையை சிகரத்தில் அமர்த்தினார்.

ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்த அடுத்த நாட்டின்
தயவை எதிர்பார்த்துக் கிடந்த இந்தியா இன்று
ஒரே ஏவுகணையின் மூலம் 104 செயற்கைக் கோள்களை
விண்ணில் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

மங்கள்யானை முதல் முயற்சியில் விண்ணில் செலுத்தும்
அளவுக்கு வளர்ந்துள்ளது. சந்திரயான்-1, சந்திரயான்-2
ஆகிய திட்டங்களை மிகக் குறைந்த செலவில்
நிறைவேற்றி உள்ளது. இந்த வளர்ச்சிக்கெல்லாம்
வித்திட்டவர் ஏவுகணை நாயக்கர் டாக்டர் ஏ பி ஜே
அப்துல் கலாம் அவர்கள். இந்திய விண்வெளி யுகத்தின்
மீது சுவடு பதித்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

ஏவுகணை நாயகனின் நினைவு நாளில்
போற்றுதலுக்குரிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின்
நினைவை நெஞ்சில் ஏந்தி வணங்கி நிற்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
******************************************
டாக்டர் கலாம் நினைவு நாள்: ஜூலை 27.
---------------------------------------------------------------
       
   






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக