ஞாயிறு, 7 ஜூலை, 2019

பிசிராந்தையாரும் நரைக்காத தலையும்!
------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------------
பிசிராந்தையார் பாண்டி நாட்டுப் புலவர்.
பாண்டி நாட்டில் இன்றைய நெல்லை மாவட்டம்
எப்போதுமே இடம் பெற்று இருந்தது.

எனவே பிசிராந்தையார் திருநெல்வேலிக்காரர்.
அவர் வீரவநல்லூரைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும்.


பிசிராந்தையாருக்கு 65 வயதாகியும் தலை நரைக்கவில்லை.
தலை நரைக்காதது எப்படி என்று பலரும் அவரைக்
கேட்டனர். அதற்கு விடையாக அவர் ஒரு பாடலைப்
பாடினார்.

யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கா கியர்என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
................................................................................
...........................................................................
என்று தொடங்கும் அப்பாடல்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.
என்று முடியும்.

தலை நரைக்காமைக்குக் காரணங்கள் பல அடுக்குவார்.
மாண்ட என் மனைவி என்பதன் பொருள் என்ன?
மாண்ட என் மனைவி என்றால் இறந்து போன என்
மனைவி என்று பொருள் கொண்டு விடக்கூடாது.

மாண்ட = சிறப்புப் பொருந்திய, சிறந்த
மாண்ட = மாண்பு கொண்ட
மாணாக்கன் என்ற சொல் மாண்பு உடையவன் என்று
பொருள் தரும்.

என் ஊரில் வாழும் பலரும் சான்றோர்கள். தலை
நரைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம் என்பார்
பிசிராந்தையார்.

தமிழ்நாட்டில் இன்று சான்றோர்கள் பலர் வாழும் ஒரே ஊர்
வீரவநல்லூர் மட்டுமே. எனவேதான் பிசிராந்தையார்
வீரவநல்லூரில் பிறந்தவர் என்கிறேன்.

ஆக பிசிராந்தையார் வீரவநல்லூர்க்காரர் என்பது
நிரூபிக்கப் பட்டு விட்டது. QED.
---------------------------------------------------------------------------
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
என்ற பிசிராந்தையாரின் பாட்டுக்கு,
நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் மேற்கோள்
காட்டிய அதே பாட்டுக்கு, எனது விளக்கவுரை
காணொளியாக (வீடியோ) நாளை வெளிவரும்.
செய்தித்தமிழ் என்னும் சானல் அதை ஒளிபரப்புகிறது.
நாளை வெளியிடப்படும்.
*******************************************    

mistar srinivaas,

மிஸ்டர் ஸ்ரீனிவாஸ்,  ஸ்ரீநிவாஸ் பா ஆனந்த  

இந்தப் பதிவில் உள்ள பெண்ணின் பெயர் மட்டும்
அடையாளக் குறிப்புகளை அகற்றி விட்ட பிறகே
இதை வெளியிட வேண்டும். எனவே அதைச் செய்த பின்
வெளியிடவும். இல்லாவிடில் பதிவை டெலிட் செய்யவும்.
இது சட்டத்தால் தடுக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள்
சிக்கலுக்கு ஆளாக நேரும்.

(பழைய பதிவு)

          
 





















இங்கெல்லாம் வல்லினம் மிகுமா?
----------------------------------------------------
1) அன்புக் காட்டாத மனைவி.
2) தின்றுச் செரிக்காத இறைச்சி
3) கண்டுக் கொள்ளாமல் ஒதுங்கினான்.
4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக