சனி, 6 ஜூலை, 2019

திரு பிரகாஷ் ராமசாமியார் அவர்களுக்கு,
----------------------------------------------------------------
" திருக்குறளுக்குப் பதில் புறநானூறு"
என்ற தங்களின் தற்குறிப்பேற்றம் (interpretation)
கயமையின் பாற்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.  

பட்ஜெட் உரையில் திருக்குறளைத்தான் மேற்கோள் காட்ட
வேண்டும் என்று எந்த மரபும் இல்லை. இதற்கு முன்பு
இருந்த நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள்
கம்ப ராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டியதை
தாங்கள் அறிந்திருக்கவில்லை போலும்.

அருள்கூர்ந்து புறநானூற்றை மேற்கோள் காட்டிய
நிர்மலா அம்மையாரையும், தமிழையும், குறளையும்
புறநானூற்றையும் இழிவு செய்ய வேண்டாம் என்று தங்கள்
காலில் விழுந்து வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்து மேலும் விவரம் அறிய நிர்மலா அம்மையார்
குறித்தும் புறநானூறு குறித்தும் யான் தொடர்ந்து
எழுதி வரும் கட்டுரைகளைப் படித்துத் தெளிவுறுமாறு
வேண்டுகிறேன்.

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக