சனி, 20 ஜூலை, 2019

பழைய கற்காலம் முதல் பின்நவீனக் காலம் வரை!
----------------------------------------------------------------------------
மானுட வரலாற்றில் நிலவுடைமைச் சமூகம் நீண்ட
காலமாக நீடித்து இருந்தது. வரலாற்றில் இக்காலம்
(அதாவது 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலம்)
மத்திய காலம் என்று அழைக்கப் படுகிறது.
பழைய கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம்
என்றெல்லாம் காலங்களைப் பகுக்கிறோம். அந்த
வரிசையில் வருவதுதான் நவீன காலம்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைத் தொடர்ந்து,
அறிவியல் வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்ந்தது.
தொழிற்புரட்சி 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
ஏற்பட்டது. தொடர்ந்து முதலாளிய சமூகம்
உருவானது. மார்க்சியத் தத்துவமும் பிறந்தது.
இந்நிகழ்வுகள் யாவும் நடைபெற்ற காலம்
நவீன காலம் என்று அழைக்கப் படுகிறது.

முதலாளிய சமூக உருவாக்கத்தைத் தொடர்ந்து
மானுடம் நவீன காலக்கட்டத்தில் நுழைந்து விட்டது.
இக்காலக் கட்டத்தின் தத்துவம் மார்க்சியம் ஆகும்.
ஆக மார்க்சியம் என்பது நவீன காலத்தின் தத்துவம்
ஆகும். எனவே மார்க்சியம் நவீனத் தத்துவம்
(modern philosophy) என்று அழைக்கப் படுகிறது.
மார்க்சியம் 19ஆம் நூற்ராண்டிலேயே தோன்றி விட்டது.
மார்க்சின் காலம் 1818-1883; எங்கல்சின் காலம் 1820-1895. 

மார்க்சியத்துக்குப் பிறகு தோன்றிய தத்துவம்
பின்நவீனத்துவம் ஆகும். இரண்டாம் உலகப்
போருக்குப் பின்னர்தான் இத்தத்துவம் திரண்ட
வடிவம் பெற்றது. மார்க்சியத்துக்குப் பின்னர்
வந்த தத்துவம் என்பதால், இது பின்நவீனத்துவம்
(post modernism) எனப்படுகிறது. இத்தத்துவம்
மார்க்சியத்தை விமர்சனம் செய்கிறது.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக