ஞாயிறு, 2 ஜூன், 2019

பூஜ்யமும் சுழியமும்!
------------------------------
இந்தித் திணிப்பை எதிர்ப்போர் மட்டுமின்றி
ஆதரிப்போரும் பூஜ்யம் என்றுதான் சொல்வார்கள்.
ஏன்? 1950,1960, 1970களில் பள்ளிப் பாடப் புத்தகங்களில்
பூஜ்யம் என்றுதான் எழுதப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் பூஜ்யம் என்றுதான் கற்பித்தார்கள்.

6ஆம் வகுப்பில் இருந்து SSLC வரை (11ஆம் வகுப்பு)
உள்ள பாடப் புத்தகங்களில் பூஜ்யம் என்றுதான் இருந்தது.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்ற
பழமொழிக்கு இணங்க பூஜ்யம் என்ற சொல்
பசுமரத்தாணி போலப் பதிந்து விட்டது.

சுழியம் என்பது பூஜ்யம் என்ற சொல்லுக்கு நிகரான
சொல்தானா? இல்லை. சுழி என்பது வெறுமனே ஒரு
சுழித்தலை (an unclosed loop) மட்டுமே குறிக்கும்.
அது வெறுமையாய் ஏதுமற்ற தன்மையைக்
குறிக்காது. எனவே ஒரு தவறான சொல்லை ஏன்
வழங்க வேண்டும்?

என் கருத்தில் "இலியம்" என்ற சொல்லே பூஜ்யத்துக்கு
மிகச் சரியான தமிழ்ச் சொல் ஆகும். இலியம் என்ற
சொல்லை தமிழக் குட்டி முதலாளித்துவம் ஏற்க
மறுக்கும் நிலையில், நான் பூஜ்யம் என்ற ஆகி வந்த
சொல்லையே பயன்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்
படுகிறேன்.

சுழியம்..... தவறு.
இலியம், பூஜ்யம் ....சரி.


தாய்மடி முருகானந்தம்

சுழித்தல் என்பது வெறுமையைக் குறிக்காது.
பூஜ்யம் அல்லது zero என்ற சொல்லுக்கு ஒன்றுமில்லை
என்று பொருள். emptiness என்ற பொருளை சுழியம்
தருவதில்லை. பிள்ளையார் சுழி என்பதில் closed loop
எங்கே உள்ளது?

இலியம் என்ற சொல்லைப் பாருங்கள். இன்மை என்ற
பொருள் கிடைக்கிறதா? இலியம் வேண்டாம் என்றால்
"இன்மம்" என்ற சொல்லை ஆளலாம்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
என்ற குறளைக் கருதுங்கள்.
இன்மை என்ற சொல்லுக்கு ஏதுமற்ற தன்மை
என்ற பொருளை வள்ளுவர் தருகிறார்.

சுழியம் என்ற சொல்லை ஏற்க இயலாது. ஏற்கக் கூடாது.
குட்டி முதலாளித்துவ ஆசாமிகள் தங்களுக்குத்
தோன்றியதை எல்லாம் கலைச்சொற்களாக ஆக்க
முயல்வர். அதை முறியடிக்க வேண்டும்.    

சுழியம் என்பது பொருட்குற்றம் உள்ள சொல்!
-------------------------------------------------------------------------  
சுழியம் என்பது வட்டம் என்ற பொருளைத் தருகிறது.
இன்மை. இல்லாமை என்ற பொருளைத் தரவில்லை.
எனவே இது பொருட்குறை உள்ள சொல்.

0 என்ற எண்ணின் வடிவம் ஒரு வட்டமாக இருப்பதால்,
அந்த வட்ட வடிவத்தைக் குறிக்கும் விதத்தில்
சுழியம் என்ற சொல்லை உருவாக்கினர்.

பூஜ்யம் என்பது (zero) இன்மையைக் குறிப்பதால்,
இலியம் (அல்லது இன்மம்) என்ற சொல்லை நான்
உருவாக்கி உள்ளேன். இது பொருட்செறிவு உடையது.

இலியம் சுழியம் என்னும் இவ்விரு சொற்களில்,
சுழியம் என்பது வெறும் வடிவப் பொருளை
மட்டும் தருகிற (a geometrical indicator) குறைபாடுடைய
சொல். இலியம் என்ற சொல்லே துல்லியமான
முழுமையான பொருளைத் தரும் சொல்.

தேவையான புதிய சொற்களை எவரும் ஆக்கப்
போவதில்லை. எவரேனும் ஒருவர் முயன்று
ஆக்கினால், ஊரில் இருக்கிற அத்தனை பேரும்
கத்தியைத் தூக்கிக் கொண்டு வருகின்றனர்.
        

A,B,B,C,C,C,D,D,D,D,........என்னும் வரிசைத் தொடரில்
194ஆவது உறுப்பு என்ன? விடை தருக!


பூஜ்யம் யாருடைய கொடை என்பது இங்கு
விவாதப் பொருள் அல்ல. நான் கூறியது
அனைத்தும் சுழியம் என்ற சொல்லாக்கம் குறித்தே.

தகுதியற்ற குட்டி முதலாளித்துவம்!
--------------------------------------------------------
சுழி என்ற சொல்லையும் அதன் பொருளையும்
நான் 10 வயதுக்கு முன்பே அறிவேன். எங்கள் வீட்டில்
மாடு கன்றுகள் நிறையவே வளர்ந்தன. ஒரு  கிடாரிக்கு
இரட்டைச் சுழி உண்டு. இந்த இரட்டைச் சுழியை
வீட்டில் மூத்தவர்கள் எனக்குக் காண்பித்து விளக்கினர்.

தொடர்ந்து வலஞ்சுழி , இடஞ்சுழி, இரட்டைச்சுழி
ஆகிய சொற்களையும் அவற்றின் பொருளையும்
அறிந்தேன்.

இங்கு எந்த ஒரு இடத்திலும் சுழி என்பது இன்மை என்ற
பொருளைத் தரவில்லை. எனவே சுழியம் என்ற சொல்லை
இன்மை என்ற பொருளுக்குரிய சொல்லாக ஏற்க
முடியாது.

பெரு நகரத்தில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு
சுழியம் என்பதுதான் சரியான சொல் என்று சொல்லும்
குட்டி முதலாளித்துவ நபர்களின் உளறலை நான்
ஏற்க மாட்டேன்.

நான் மாடு கன்றுகளோடு வளர்ந்தவன். நான் வயலில்
வேலை செய்தவன். நான் தினசரி ஆற்றில் குளித்தவன்.
எனவே நானோ அல்லது என்னைப் போன்றவர்களோ
மட்டும்தான் புதிய கலைச்சொல்லாக்கம் செய்யும்
தகுதியும் உரிமையும் உடையவர்கள்.

சுழி என்ற சொல் இன்மை (இல்லாமை) என்ற பொருளைத்
தரவில்லை; தரவில்லை; தரவில்லை!!!


நன்றி.

  



1 கருத்து: