திங்கள், 15 ஆகஸ்ட், 2022

 5G ஏலத்தில் ஊழலா? இல்லை!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
1) நாடாளுமன்றத்தின் MONSOON கூட்டத்தொடர் 
2022 ஜூலை 18 முதல் ஆகஸ்டு 8 வரை நடந்து முடிந்தது.
5G ஏலம் 2022 ஜூலை 26 முதல் ஆகஸ்டு 1 வரை 
7 நாட்கள் நடந்தது.
5Gயில் ஊழல் என்றால், நாடாளுமன்றத்தில் ஏன் 
பேசவில்லை?

முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர்கள்
ஆ ராசா, தயாநிதி மாறன், கபில் சிபல் ஆகிய 
மூவரும் நாடாளுமன்றத்தில் இருந்தார்களே! 
5G ஏலத்தில் ஊழல் நடந்திருந்தால் 
அதை ஏன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசவில்லை?
ப சிதம்பரமோ கனிமொழியோ நாடாளுமன்றத்தில் 
5G ஊழல் பற்றிப் பேசி இருக்கலாமே! ஏன் பேசவில்லை? 

2)  5G ஏலத்தில் ஊழல் என்றால், ஏலத்தை ரத்து 
செய்யக்கோரி  உச்சநீதிமன்றத்தில் பொதுநல 
வழக்குத் தொடரலாமே! ஏன் செய்யவில்லை?

3) அரசுத்துறை நிறுவனமான BSNL, ஏலத்தில் 
பங்கேற்கவில்லையே! இது BSNLக்கு எதிரானதும்  
தனியாருக்கு ஆதரவானதுமான நடவடிக்கை அல்லவா?

அரசுத்துறை நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் 
நடைமுறை இல்லை. இதுவரை தொலைதொடர்பில் 
12 முறை ஏலம் நடைபெற்று உள்ளது. இதில் எந்த 
ஒரு ஏலத்திலும் BSNL போன்ற அரசு நிறுவனங்கள் 
பங்கேற்றதில்லை. பங்கேற்க வேண்டிய தேவையும் 
இல்லை. ஏலத்தில் பங்கெடுக்காமலும் எவ்வித 
முன்பணமும் செலுத்தாமலும் (without any upfront payment)
BSNLக்கு அலைக்கற்றை வழங்கப் பட்டுள்ளது. இதுதான் 
PROCEDURE.

4) அதானிக்கு சலுகை காட்டப் பட்டதா!
அதானி இந்த ஏலத்தில் பங்கெடுத்து கொஞ்சம் 
அலைக்கற்றையை தமது சொந்த உபயோகத்துக்கு 
வாங்கினார். அதற்காக அவர் டோக்கன் அட்வான்சாக 
ரூ 100 கோடி EMD (Earnest Money Deposit) கட்டினார்.
வெறும் 400 MHz அலைக்கற்றையை மட்டுமே 
அதானி வாங்கினார். இதன் மதிப்பு ரூ 212 கோடி.

அதாவது அதானி நுகர்வோருக்கு சேவை வழங்கும் 
ஒரு சேவை வழங்குநர் (service provider) அல்ல.

5) 5g ஏலத்தில் அரசுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை.
72 GHz அளவுள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு 
வைக்கப்பட்டது. இதில் 51 GHz அளவுள்ள அலைக்கற்றை 
ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 21 GHz 
அளவுள்ள அலைக்கற்றை அடுத்து நடைபெறும் 
ஏலத்தில் விற்கப்படும். இதுதான் நடைமுறை.

இந்த 5g ஏலத்தின் மூலம் அரசுக்கு எவ்வளவு 
வருவாய் கிடைக்கும் என்பது பற்றி 2022 பட்ஜெட்டில் 
தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. அதன்படி 
5g ஏலத்தின் மூலமாக அரசுக்கு ரூ 80,000 கோடி
முதல் ரூ 1,00,000 கோடி வரை வருவாய் கிட்டும் என்று 
பட்ஜெட்டில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது.

பட்ஜெட்டில் சொன்னபடி அரசின் எதிர்பார்ப்பு 
ரூ 1 லட்சம் கோடி. ஏலத்தின் மூலம் கிடைத்தது 
ரூ ஒன்றரை லட்சம் கோடி. இதில் நஷ்டம் இல்லை.
மாறாக ரூ 50,000 கோடி எதிர்பார்த்ததை விட 
அதிகமாக லாபம் கிடைத்துள்ளது.  
 ------------------------------------------------------------------------------

   

4) 
  

3)   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக