ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

BSNL ஓய்வூதியதாரர்களின் 
பென்சன் திருத்தியமைப்பு வெற்றி பெறுமா?
Pension Revision: What is the position today?
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
முன்னாள் மாவட்டச் செயலாளர், 
NFTE BSNL, சென்னை.
---------------------------------------------------
முன் எச்சரிக்கைக் குறிப்பு:
பென்சன் ரிவிஷன் கிடைக்குமா கிடைக்காதா என்ற
கேள்விக்குச் சரியான பதில் கூற வேண்டுமெனில்,
01.01.1996ல் ஆரம்பித்து அனைத்து நிகழ்வுகளையும்    
கூற வேண்டும். இதனால் பதில் நீளும். அதை வாசிக்கும் 
பொறுமையற்ற என் தோழர்கள் விலகலாம். சேரன் 
ஸ்டோர்ஸ், சோழன் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் 
சீரியல்களைப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------      
தென்னிந்தியாவின் போர்பந்தர் என்று புகழப்படும் 
வீரவநல்லூருக்கு அருகில் உள்ள திருப்புடைமருதூரில் 
பிறந்தவர் உச்சநீதிமன்ற நீதியரசர் ரத்தினவேல் 
பாண்டியன் அவர்கள். இவர் நமது ஐந்தாவது சம்பளக் 
கமிஷனின் (V CPC) தலைவராக இருந்தவர். இவரின் 
பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, 01.01.1996 முதல் செயலாக்கப் 
பட்டு, அன்றைய மத்திய அரசு ஊழியர்களாகிய நாம் 
அதன் பயனைப்பெற்றோம் என்பதை  உங்களுக்கு 
நினைவூட்டுகிறேன்.

ஆறாவது சம்பளக் கமிஷன் (VI CPC) 2006ல் செயலாக்கப் 
பட்டபோது, நாம் பொதுத்துறை ஊழியர்களாக மாறி 
விட்டோம். எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கும்  
நமக்கும் 5ஆவது சம்பளக் கமிஷன் வரை மட்டுமே 
ஊதிய நிலைமகள் பொருந்தும்.

01.10.2000ல் BSNLக்கு மாறிய நாம், 2003ல் ஒரு ஊதிய 
ஒப்பந்தம் பெற்றோம். அதன் பின் 2007ல் இன்னொரு 
ஊதிய ஒப்பந்தம்! இந்த wage revisionல் point to point fxation
இருந்தது. இது pay fixation முறைகளிலேயே ஆகச் சிறந்த 
முறை என்பதை IQ 120க்கும் மேற்பட்டவர்கள் 
அறிவார்கள்.   

நீட்சி வேண்டாம் என்பதால் நிறுத்துகிறேன். 
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்ல வேண்டும் 
என்றால், பிரச்சினையின் மூல முடிச்சு இதுதான்.
அதாவது நமக்கும் மத்திய அரசு பென்ஷனர்களுக்கும்
இடையில் நிலவும் PENSION DISPARITY ஒரு முக்கியமான 
காரணியாக இருக்கிறது.

மத்திய அரசு, BSNL இரண்டிலும் உள்ள இரண்டு 
ஊழியர்களை ஒப்பிடுவோம். அவர்கள் சமமான கேடரில்,
சமமான பொசிஷனில் இருக்க வேண்டும். அப்படியான 
ஒரு ஒப்பீட்டில், BSNL ஊழியரான நமது பென்ஷன்,
நமக்குச் சமமான மத்திய அரசு ஊழியரின் பென்ஷனை 
விட அதிகமாக இருக்கிறது. ஏனெனில் (1) நாம் அவர்களை 
விடக் கூடுதலாக  ஒரு ஊதிய ஒப்பந்தத்தைப் 
பெற்றுள்ளோம். (2) நாம் பெறுவது IDA பென்சன்; 
அவர்களுக்கு CDA பென்சன்.

பொதுத்துறைக்கு மாறிய பிறகு அங்கு தரப்படும் 
IDA பென்ஷனை ஏற்றுக் கொண்டு காலப்போக்கில் 
CDA பென்ஷனுக்கு மாறி விடுவது நல்லது என்று 
மிகுந்த தீர்க்க தரிசனத்தோடு அறிவுரை கூறினார் 
தலைவர் குப்தா. பொதுத்துறைக்கு மாறிய பின் 
அரசுக்கே உரிய CDAவுக்கு நீங்கள் ஆசைப்படுவது 
முழுமூடத்தனம் என்று அன்று DOT நம்மைக் 
கண்டித்தது; CDAவுக்கு மாறிச்செல்லவும் மறுத்தது.   

இன்று BSNL உருவாகி, 37A ஷரத்தும் செயல்படுத்தப்
பட்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட  
நேரம். இப்போது மத்திய அரசு பென்ஷனருக்கும் 
BSNL பென்ஷனருக்கும் இடையிலான 
PENSION DISPARITY விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இந்தியாவிலேயே மிக அதிகமான பென்ஷனை 
வாங்குபவர் யார்? மத்திய அரசின் Cabinet Secretaryதான்.
மேற்கூறிய disparity நீடிக்குமானால், Cabinet Secretaryஐ 
விட அதிகமான பென்ஷனை வாங்கி விடுவார்
BSNLன் சீனியர் CGM. அப்படி ஒரு நிலைமை 
ஏற்பட்டால், Cabinet Secretary தற்கொலை செய்து 
கொள்ள நேரிடும். எனவே மத்திய அரசின் பென்சன் 
துறை (DOP) உடனடியாக இந்த DISPARITYஐ நீக்க 
வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது.
        
அநேகமாக இப்போது processஆகிக் கொண்டிருக்கும் 
இந்த pension revisionன்போதே pension disparityஐ
நீக்குவதற்கு DOP முயற்சி செய்யலாம்.

Pension revisionல் கணிசமான முன்னேற்றத்தை 
அடைந்துள்ளது AIBSNLPWA சங்கம். அதன் தலைவர்கள் 
மிகவும் அறிவுடைமையுடன் நடந்து கொண்டும், 
மிக்க சாதுரியமாகக் காய் நகர்த்தியும் வெகுதூரம் 
நடந்து வந்து வெற்றியை நெருங்கி இருக்கிறார்கள்.
Their claims are genuine and rightful. அவர்கள் கூறியதில் 
அணுவளவு கூட உயர்வு நவிற்சி இல்லை.. 

AIBSNLPWA பொதுச்செயலாளர் தோழர் கங்காதர ராவ் 
அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 
அனைத்தும் உண்மையே; அனைத்தும் சரியே.
அதே போல தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் 
சுந்தர கிருஷ்ணன் அவர்கள் ஓய்வூதியர்களிடம் 
அளித்து வரும் விளக்கம் முற்றிலும் சரியே. சிக்கல் 
நிறைந்த தற்போதைய சூழலில்,  ஊழியர் நலனில் 
கண்ணும் கருத்துமாக உள்ள, மத்திய அரசின் சட்ட 
திட்டங்கள், விதிகள் ஆகியவற்றில் சிறந்த அறிவைப் 
பெற்றுள்ள, நல்ல ஆங்கிலப் புலமை மிக்க தோழர் 
சுந்தர கிருஷ்ணன் அவர்கள் மாநிலச் செயலாளராகத் 
தேர்ந்தெடுக்கப் பட்டுப் பொறுப்பேற்று இருப்பது 
ஓய்வூதியர்களுக்கு ஒரு வரம் ஆகும்.          
 
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Pay reviion is not a 
precondition for pension revision என்ற நிலைபாட்டை 
எடுத்தமையால், நாம் இவ்வளவு தூரம் முன்னேற 
முடிந்துள்ளது. நமக்கு இந்த pension revisionஐ 
வழங்குவதால், அது எத்தகைய பின்விளைவுகளையும் 
ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த pension revision என்பது 
BSNL, MTNL என்ற இரண்டே இரண்டு பொதுத்துறை 
நிறுவனங்களுக்கு மட்டுமேயானது. எனவே பிற 
பொதுத்துறை நிறுவனங்கள் இதை மேற்கோள் 
காட்ட இயலாது. எனவே இவர்களுக்கு PENSION REVISION
வழங்குவதால் மற்றவனும் கேட்பானோ என்று 
தயங்குவதற்கு இடமே இல்லை. 

மேலே சொன்னதெல்லாம் என்னுடைய எண்ண 
ஓட்டம் இல்லை. மத்திய அரசின் DOPயின் உயர் 
அதிகாரிகளின் எண்ண ஓட்டம் ஆகும்.  


இறுதியாக, BUREACRATS எனப்படும் அதிகார வர்க்கமானது  
எப்போதுமே தொழிலாளர் நலனுக்கு எதிராகவே 
இருக்கும் என்ற மார்க்சிய பாலபாடம் நமக்கெல்லாம் 
நமது இடதுசாரித் தொழிற்சங்கங்களில் போதிக்கப் 
பட்டது. 1970களில் BUREACRACY DOWN DOWN என்று 
ஊர்வலங்களில் கோஷம் போட்டதை உங்களுக்கு 
நான் நினைவூட்டுகிறேன். பின்னாளில் அந்த 
கோஷமே எங்கும் போடப்படவில்லை. 

இந்த PENSION REVISION நமக்கு மட்டுமானதல்ல.
ரெகுலர் மஸ்தூர் துலுக்காணம் முதல்
காபினெட் செக்ரட்டரி B K சதுர்வேதி வரை 
அனைவருக்குமானது. எனவே கிடைக்கப் போகும் 
பயன்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல 
அதிகார வர்க்கத்திற்கும் உரியவை. உச்சநீதிமன்ற 
நீதிபதிகளுக்கும் இதே பென்ஷன்தான். எனவே 
விதி சமைப்பவர்களான அதிகார வர்க்கமும் 
இந்த விஷயத்தில் நமக்கு சாதகமாகவே இருக்கும்.

Pension revision கிடைத்து விடும் என்று AIBSNLPWA 
தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருகின்றனர்.
அது வெற்று நம்பிக்கை அல்ல. அவர்கள் 
களநிலைமையை நேரடியாகக் கண்டு 
அறிந்தவர்கள். அவர்களின் நம்பிக்கை வலுவான 
தர்க்கத்தை அடிப்படையாக கொண்டது. 

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கணக்கீட்டின்படி 
PENSION REVISION கோரிக்கை வெற்றி பெறுவதற்கான 
நிகழ்தகவு cetaris paribus 0.73 ஆகும். (Probability always lies 
between 0 and 1 என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறேன்).   

இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில் 
கணக்கெடுக்கும்போது ஒரு எதிர்ப்பு எஞ்சி 
இருக்கிறது. காழ்ப்புணர்ச்சிச் சீழால் தங்களின் 
மூளையை நிறைத்துக் கொண்ட, வக்கிரம் பிடித்த 
சில குட்டி முதலாளித்துவ இழிவு சக்திகள், நமக்கு 
pension revisison கிடைப்பதை, அதிலும் AIBSNLPWA வின் 
சாதனையாக அது அமைந்து விடுவதை 
விரும்பவில்லை. தங்களால் முடிந்தமட்டும் இதை
நிறைவேறாமல் தடுத்து நிறுத்தவும், முட்டுக் கட்டை
போடவும் முயன்று வருகிறார்கள். யார் இவர்கள் என்று 
நான் சொல்லாத தேவையில்லை. அடல் பிகாரி 
வாஜ்பாய் காலத்தில் அன்று ஆண்டு 2000, செப்டம்பர் 
6, 7, 8 தேதிகளில் நடந்த பென்சன் வேலைநிறுத்தத்தின்போது கருங்காலித்தனம் செய்த அதே போலிகள் இப்போது
PENSION REVISIONஐ சீர்குலைக்க முயல்கிறார்கள்.

We have 
canons to the right 
canons to the left 
and canaons in front.
But there are canons to the back also.

துரோகிகளை முறியடிப்போம்!
Pension revisionஐ வெல்வோம்!
***************************************** 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக