நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
BSNL, MTNL ஆகிய இரு அரசு நிறுவனங்களும்
ஒருபோதும் அலைக்கற்றை ஏலத்தில்
பங்கெடுத்ததில்லை; அது தேவையும் இல்லை.
அரசுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தமட்டில்,
அவை ஏலத்தில் பங்கெடுக்காமலே
அவற்றுக்கு அலைக்கற்றை வழங்கப்பட்டு
வருகிறது. இதுதான் நடைமுறை.
அதில் BSNL, MTNL ஆகிய இரு அரசு
நிறுவனங்களும் பங்கெடுக்கவில்லை.
ஆனால் ஏலம் நடப்பதற்கு முன்னரே
BSNL, MTNLக்கு 3G அலைக்கற்றை
வழங்கப்பட்டது.
அதன் பிறகு நடைபெற்ற BWA
அலைக்கற்றை ஏலத்திலும்
BSNL, MTNL நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.
பங்கேற்காத நிலையிலே அவற்றுக்கு
BWA அலைக்கற்றை வழங்கப் பட்டது.
இதே போல, 4G அலைக்கற்றையும் ஏலத்தில்
பங்கெடுக்காத BSNLக்கு 2019 புத்தாக்கத்
திட்டத்தின்படி வழங்கப் பட்டது.
தற்போது 5G ஏலம் நடைபெற்று
முடிந்துள்ளது. அதற்கு முன்பே
BSNLக்கு 5G அலைக்கற்றையை
வழங்க நிர்வாக ஒப்புதல்
(ADMINISTRATIVE APPROVAL) அளிக்கப்
பட்டு விட்டது.
அருள்கூர்ந்து BSNL குறித்த தவறான
தகவல்களைப் பரப்ப வேண்டாம். தனியார்
நிறுவனங்களின் கைக்கூலிகள் இது போன்ற
பொய்களை BSNLக்கு எதிராகப் பரப்பி
வருகிறார்கள். அவற்றுக்கு இரையாக
வேண்டாம் என்று BSNL ஊழியர்கள்
சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
எப்போதுமே எவ்விதமான
Upfront payment செலுத்தாமல் ஏலத்தில்
பங்கெடுக்காமலும்தான் அரசு
நிறுவனங்களுக்கு அலைக்கற்றை
ஒதுக்கப்படும்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL தொழிற்சங்கம்
சென்னை மாவட்டம், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக