SSLVயின் கன்னி முயற்சி தோல்வி! DRAFT
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
நம்மிடம் ஏற்கனவே PSLV, GSLV ஆகிய
இரண்டு வகையிலான செலுத்து வாகனங்கள்
உள்ளன. இவை அதிகமான நிறை (mass) கொண்ட
(அதாவது 1 டன், 2 டன், 4 டன், 10 டன் நிறையுள்ள)
செயற்கைக்கோள்களை விண்ணில்
செலுத்தும் வல்லமை வாய்ந்தவை.
தற்போது குறைந்த நிறை கொண்ட
செயற்கைக் கோள்களை அடிக்கடி ஏவ
வேண்டியது உள்ளது. இவை அனைத்தும்
1 டன் நிறைக்கும் குறைந்தவை. மேலும்
மாணவர்கள் உருவாக்கும் குறைந்த நிறை
கொண்ட (1 கிலோகிராம், 2 கிகி, 3 கிகி போன்ற)
செயற்கைக் கோள்களையம் விண்ணில் செலுத்த
வேண்டியுள்ளது.
இவ்வளவு சிறிய செயற்கைக்கோள்களைச்
செலுத்த PSLV, GSLV போன்ற பெரிய
செலுத்து வாகனங்கள் தேவையில்லை.
அவற்றுக்கான எரிபொருள் செலவு உள்ளிட்ட
அனைத்து விதமான செலவுகளும் மிக அதிகம்.
நேற்றைய செலுத்துதலில் (launch)
(07 ஆகஸ்டு 2022 காலை, Mission: SSLV-D1/EOS-2)
அனுப்பப்பட்ட 135 கிகி நிறை கொண்ட
மைக்ரோசேட் மற்றும் 11 கிகி நிறை கொண்ட
மாணவிகள் தயாரித்த செயற்கைக்கோள்
ஆகியவற்றை அனுப்ப PSLV, GSLV போன்ற
பெரிய செலுத்துவாகனங்கள் எதற்கு?
மேலும் இவ்விரு செயற்கைக்கோள்களும்
தாழ்நிலை புவிச்சுற்றுப் பாதையில்தான்
(LEO) நிலைநிறுத்தப்பட உள்ளன. அப்படி
இருக்கையில் பெரிய செலுத்துவாகனங்களை
இதற்குப் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன?
எனவேதான் இஸ்ரோ புதிதாக ஒரு செலுத்துவாகனத்தை
உருவாக்கி உள்ளது. அதுதான் SSLV (Small Satellite Launch Vehicle)
என்னும் சிறிய ரக செலுத்துவாகனம்.
இதன் கன்னிச் செலுத்துதல் (maiden launch) ஆகஸ்டு 7
காலை நடைபெற்றது. இரண்டு payloadகளையும்
ஒழுங்காகச் சுமந்து சென்ற SSLV, அவற்றை ஒரு
வட்டச் சுற்றுப்பாதையில் (circular orbit) நிலைநிறுத்தியிருக்க
வேண்டும்.
ஆனால் SSLV அதைச் செய்வதில் தவறியது. வட்டச்
சுற்றுப்பாதைக்குப் பதிலாக (radius 356 km) ஒரு
நீள்வட்டச் சுற்றுப் பாதையில் (elliptical orbit)
செயற்கைக்கோள்களை SSLV நிலைநிறுத்தியது.
(Perigee 76km; apogee 356 km).இந்தத் தவற்றின் காரணமாக
செயற்கைக்கோள்கள் செயலிழந்தன.
இந்தக் குறிப்பிட்ட நீள்வட்டச் சுற்றுப்பாதையானது
செயற்கைக் கோள்களுக்கு எமனாக அமைந்தது
எப்படி என்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இந்தச் செலுத்துகை (launch) SSLVயின் கன்னி முயற்சி.
பரீட்சார்த்த முறையில் (experimental basis) இந்தச்
செலுத்துகை மேற்கொள்ளப்பட்டதாக
இஸ்ரோ தலைவர் சோமநாத் அறிவித்துள்ளார்.
பரீட்சார்த்த முறையிலான இச்செலுத்துகை
தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணம்
ஆராயப்படும்.
பெருமுயற்சிகளை மேற்கொண்ட இஸ்ரோவின்
விஞ்ஞானிகள் பணியாளர்கள் அனைவருக்கும்
நியூட்டன் அறிவியல் மன்றம் மரியாதையைத்
தெரிவித்துக் கொள்கிறது.
*********************************************
SSLV is configured with three solid stages 87 t, 7.7 t and 4.5 t. The satellite insertion into the intended orbit is achieved through a liquid propulsion-based velocity trimming module. SSLV is capable of launching Mini, Micro, or Nanosatellites (10 to 500 kg mass) to a 500 km planar orbit.
மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த SSLV
மூன்றிலும் திட எரிபொருளைக் கொண்டது.
செயற்கைக்கோளைக் குறிப்பிட்ட ஆர்பிட்டில்
செலுத்துவதற்கு இதில் VTM
(Velocity Trimming Module) எனப்படும் ஏற்பாடு
உள்ளது. இது திரவ எரிபொருளைப்
பயன்படுத்துகிறது.
The orbital plane of a revolving body is the geometric plane in which its orbit lies. Three non-collinear points in space suffice to determine an orbital plane. A common example would be the positions of the centers of a massive body (host) and of an orbiting celestial body at two different times/points of its orbit.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக