ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

எப்போது BSNLன் 5G சேவை வழங்கப்படும்? 
எல்லோருக்கும் முந்தி இருக்கிறது BSNL!
எவருக்கும் பிந்தி இருக்கவில்லை BSNL!
BSNL is second to none!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------   
உலகெங்கும் 5G என்பது இன்னும் பரவலாக 
நடைமுறைக்கு வரவில்லை. தற்போது சீனாவும் 
அமெரிக்காவும் 5G சேவை வழங்குவதில் 
முன்னணியில் இருக்கின்றன.

அடுத்து, கனடா, தென் கொரியா, ஜெர்மனி. ஸ்பெயின்,
இத்தாலி, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய 
நாடுகளில் 5G சேவை குறிப்பிடத்தக்க அளவில் 
அறிமுகமாகி மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது.  

இந்தியாவில் இவ்வாண்டு இறுதியில் 5G சேவை 
முக்கிய நகரங்களில் தொடங்கி விடும். அடுத்து 
படிப்படியாக நாடெங்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படும்.

5G நெட்வொர்க் உருவாக்குவதில் உலகெங்கும் 
இரண்டு விதமான முறைகள் உள்ளன. 
1) Stand alone 5G network. (SA) 
2) Non stand alone 5G network (NSA)        

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி vis-a-vis பொருளியல் 
வாய்ப்புகள் என்னும் சூழ்நிலை காரணமாக 
இவ்வாறு இரண்டு வகைகள் ஏற்படுவது தவிர்க்க 
இயலாதது.Stand alone, Non stand alone networks குறித்து 
இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்).
  
உலகெங்கும் Standalone மற்றும் Non Standalone networks 
உள்ளன. இந்தியாவிலும் கூட. இந்தியாவில் முகேஷ் 
அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 
5G Standalone நெட்ஒர்க்கை நிறுவ உள்ளது.
ஏனைய நிறுவனங்கள் BSNL உட்பட Non standalone
நெட்வொர்க்கை நிறுவ உள்ளன.

  
CDoT  நிறுவனமானது NSA நெட்வொர்க்கை 
நிறுவுவதற்குத் தேவையான தொழில்நுட்ப 
உத்திகளை வகுத்து வருகிறது. அது இவ்வாண்டு 
(2022) டிசம்பரில் முடிவடையும். அதைத் தொடர்ந்து 
அடுத்த ஆண்டில் அதாவது 2023ல் BSNL நிறுவனமானது 
5G சேவையைத் தொடங்கும் என்கிறார் 
தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
--------------------------------------------------------------------------------

 
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக