துணை ஜனாதிபதி தேர்தல் 2022!
--------------------------------------------------
தேர்தல் நாள்: ஆகஸ்டு 6, 2022.
வாக்களிக்கும் தகுதி பெற்றோர்: லோக் சபா ராஜ்ய சபா
ஆகிய இரண்டு அவைகளின் எம்பிக்கள் மட்டுமே.
மொத்த எம்பிக்கள் 543+ 245 = 788. இதில் ராஜ்ய சபாவில்
8 காலியிடங்கள் உள்ளன. எனவே எம்பிக்கள் = 780.
குறிப்பு: நியமன உறுப்பினர்களும் துணை ஜனாதிபதி
தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உடையவர்கள் ஆவார்.
ஆனால் இவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்
உரிமை வழங்கப் படாதவர்கள்.
2022 தேர்தலில் இருவர் மட்டுமே போட்டி இடுகின்றனர்.
ஜெகதீப் தங்கர் பாஜக
மார்கரெட் ஆல்வா காங் மற்றும் எதிர்க்கட்சிகள்
சிலவற்றின் ஆதரவு பெற்றவர்.
மாயாவதியின் பகுஜன் கட்சி, நாயுடுவின் தெலுங்கு
தேசம் ஆகிய கட்சிகள் பாஜக வேட்பாளரை
ஆதரிக்கின்றன.
இரண்டு அவைகளிலும் சேர்த்து மொத்தம்
36 எம்பிக்களைக் கொண்ட மமதாவின் திரிணாமூல்
கட்சி துணை ஜனதிபதி தேர்தலைப் புறக்கணிக்கிறது.
எனவே அக்கட்சியின் 36 எம்பிக்களும் தேர்தலில்
வாக்களிக்கப் போவதில்லை.
சற்று முன்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்
மொத்தமுள்ள 788 எம்பிக்களில் 740 பேர்
வாக்களித்தனர். இதில் பாஜகவின் திரௌபதி முர்மு
540 வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சிகளின்
வேட்பாளர் யஷ்வந்த்சின்ஹா வெறும் 208 வாக்குகளை
மட்டுமே பெற்றார்.
தற்போது பாஜகவுக்கு தன் சொந்த செல்வாக்கில்
மட்டுமே 303 லோக் சபா இடங்களும் 91 ராஜ்ய சபா
இடங்களும் உள்ளன. மொத்தத்தில் 394 எம்பிக்கள்
உள்ளனர்.
இந்த அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் வேட்பாளர்
மார்கரெட் ஆல்வா 200 வாக்குகளுக்கும் குறைவாகவே
பெறுவார். மிக்க கேவலமான தோல்வியை அவர்
தழுவுவார்.
ஜனாதிபதி தேர்தல் என்பது 2024 தேர்தலின் தொடக்கம்
ஆகும். 2024 தேர்தலின் முன்னோட்டமும் இதுவே ஆகும்.
2024 ஏப்ரல்-மேயில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத்
தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்களே உள்ளன. இரண்டு
ஆண்டுகளுக்கும் குறைவான காலம் இது.
2024 தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று தெளிவாகக்
காட்டி விட்டன ஜனாதிபதி-துணை ஜனாதிபதி
தேர்தல் முடிவுகள்.
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக