அதிகார மாற்றமா? அரசியல் சுதந்திரமா?
----------------------------------------------------------------
தத்துவார்த்தக் கட்டுரை
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்
திட்டத்தைப் படித்திருக்கிறீர்களா? அதன் முதல்
வாக்கியம் இப்படித்தான் தொடங்கும்:
1947ல் நடந்த அதிகார மாற்றத்திற்குப் பிறகு ..........
(After the transformation of powers in 1947........)
குட்டி முதலாளித்துவ விடலைகளை பெரும்
பரவசத்துக்கு ஆளாக்கும் இந்த வாக்கியம்
பொருட்குற்றம் உடையது. 1947ல் இந்தியாவுக்கு
அரசியல் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று
முழுமூடத் தனமாக மார்க்சிஸ்ட் கட்சி மேற்காணும்
வாக்கியத்தில் கூறுகிறது.
கிடைத்தது வெறும் அதிகார மாற்றமே என்று
மார்க்சிஸ்ட் கட்சி கூறி தனது அறியாமையை
முற்றிலுமாக வெளிப்படுத்துகிறது. அதிகார மாற்றம்
நிகழ்ந்தது என்பது உண்மையே. ஆனால் அதிகார
மாற்றம் மட்டும் நிகழவில்லை என்றும் கூடவே
அரசியல் சுதந்திரமும் கிடைத்தது என்றும்
மார்க்சிஸ்ட் கட்சி உணரத் தவறியது.
1947லும் அதன் பின்னரும், குறிப்பாக இரண்டாம்
உலகப்போரின் முடிவுக்குப் பிறகு உலகின் பல்வேறு
நாடுகள் சுதந்திரம் பெற்றன. அங்கெல்லாம் அதிகார
மாற்றம் நிகழ்ந்து அரசியல் சுதந்திரம் கிடைக்கப்
பெற்றது. விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்த
உண்மையை மிகவும் எளிதாக மார்க்சிஸ்ட் கட்சி
புறந்தள்ளியது.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்தப் பெரும் மூடத்தனத்தை
அதிலிருந்து பிறந்த நக்சல்பாரி கட்சி (CPI ML)
அப்படியே சுவீகரித்துக் கொண்டது. அதன் விளைவாக
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் 1970ஆம் ஆண்டின்
கட்சித் திட்டத்தில் (party programme of CPI ML) இந்த
இழவெடுத்த அதிகார மாற்றம் என்பது இடம் பெற்றது.
அதாவது இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரம் 1947ல்
கிடைக்கவில்லை என்ற முழுமூடத்தனத்துக்கு
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் இரையானது.
ஆக 1947ல் அதிகார மாற்றம் மட்டுமே நிகழ்ந்தது
என்பதும் அரசியல் சுதந்திரத்தை இந்தியா
பெறவில்லை என்பதுமான முட்டாள்தனமான
கணிப்பு நக்சல்பாரி இயக்கத்தை முற்றிலுமாக
அழித்தது. மார்க்சிஸ்ட் மற்றும் CPI கட்சிகள்
மரணப் படுக்கையில் இழுபறியாக மூச்சு
வாங்கிக் கொண்டு நொம்பலப்பட்டு நிற்கின்றன.
1947இல் இந்தியாவுக்கு கிடைத்தது அதன் ஒவ்வொரு
அம்சத்திலும் அரசியல் சுதந்திரமே. இது மட்டுமே
சரியான மார்க்சிய நிலைபாடு. இது எமது
நிலைபாடு. இதோடு முரண்படுவோர் தாராளமாக
முரண்படலாம். ஆனால் அப்படி முரண்படுவோர்
எமது நிலைபாடு தவறானது என்று நிரூபிக்க
வேண்டும். அதாவது 1994ல் இந்தியா அரசியல்
சுதந்திரம் பெறவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
அப்படி நிருபிக்க இயலாதோர் உயிர் வாழும்
உரிமையை இழக்கிறார்கள்.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக