வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

 dr shalinis post controversial krishna jeyanthi post

தேய்பிறை, அஷ்டமி என்பவை அபசகுணம் என்றிருந்த காலத்தில், சரியான தேய்பிறை அஷ்டமி அன்று தான் பிறந்தான் கிருஷ்ணன். பெரிய கண்கள் கொண்ட கருப்பான indigenous குழந்தையாய்.
இந்திரன் தான் ஆரியர்களின் முதன்மை கடவுள். அந்த இந்திரனை விட வளங்கள் கொழிக்கும் கோவர்தன மலை முக்கியம். இந்திரனை வழிப்பட வேண்டாம். மண்ணை வழிப்படுவோம், என்று சிறு வயதிலேயே புரட்சி பேசிய பையன்.
திருதிராஷ்டிரனுக்கு 100 மகன்கள். அவர்களை எல்லாம் ஒரே அப்பாவிற்கு பிறந்தவர்கள். Products of polygyny. அரச வாரிசு. ஆனால் பாண்டுவின் ஐவரும் வெவ்வேறு ஆடவருக்கு பிறந்தவர்கள். Products of Polyandry. தாமாய் ஒரு நகரை அமைத்து ஆட்சி செய்த தான்தோன்றி அரசர்கள். கிருஷ்ணன் யார் பக்கம்?
கிருஷ்ணன் எப்போதுமே பெண்களின்‌ பக்கம்.
அவன் தான் சுபத்ரையை ஊக்குவித்து, "அர்ஜூனன் தானே உன்னை தூக்கிக் கொண்டு போய் விவாகம் பண்ண முடியாது. நீ அவனை ரதத்தில் தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்துக்கொள்" என்று பெண்கள் உரிமையை நிலைநாட்டினார்.
பாண்டவர்களை அவன்‌ மட்டும் தான், தாயின் பெயரால் "கௌந்தேயா" (குந்தி மகனே) என்றும், அர்ஜூணனை பிரத்தியேகமாய் பார்த்தா (ப்ரிதையின்‌ மகனே) என்றும் அழைத்தான். ஏன் கர்ணனைக்கூட அவன் ராதேயா (ராதேயின் மகனே) என்று தான் அழைத்தான்‌.
போரின் போதும் அவன் ஆண்வழி அரசர்களோடு நிற்காமல், பெண்வழி அரசர்களுக்கு தான் ஆதரவாய் நின்றான்.
பிருந்தா வனத்தில் முப்பதாயிரம் விதவைகள் "கணவன் இல்லாமல் முக்தி பேரு இல்லை" என்று கூறிய போது, "மொத்தமாய் எல்லோருக்கும் நானே கணவன்," என்று அறிவித்தான்.
இத்தனை பேருக்கும் கணவனா? நீ என்ன பொம்பளை பொறுக்கியா? என்று அவனை அசிங்கப்படுத்தி, "பொம்பளை பொறுக்கி கிருஷ்ணன்" பற்றி கதைகளை கட்டி விட்ட பிறகும், அவன் மேல் மக்கள் வைத்த மரியாதை குறையவே இல்லை.
அதனால் பிறகு அவனையே கதாநாயகனாக வைத்து, பகவத் கீதையை அவன் தலையில் கட்டிவிட்டார்கள்.
வரலாறு என்பது 2D அல்ல, 3D. காலம் அதனை பல லேயர்களாய் வேய்ந்து இருக்கிறது. ஒற்றை லேயராய் பார்த்தால் உள்ளே இருக்கும் உண்மைகள் தெரிவதில்லை.
இன்று
அந்த புரட்சியாளன்,
பெண்ணியவாதி,
பகுத்தறிவு செம்மல்
திராவிட "கருப்பு"
அரசியல் ஞானி
இத்யாதிகள் ஆன
ஸ்ரீ கிருஷ்ணாவின்
பிறந்த நாளென கொண்டாடப்படுகிறது....
சீடை எடு, கொண்டாடு!
Ravi Kumar, Suresh Kr and 2 others
1 Comment
Like
Comment
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக