சனி, 1 ஜூலை, 2017

கழுத்தை இறுக்கும் சேவை வரி!
சேவை வரி என்ற கோட்பாடே மக்களுக்கு எதிரானது!
--------------------------------------------------------------------------------------------------
1) நேரு இந்திரா ராஜிவ் காலத்தில் சேவை வரி
என்ற பேச்சே கிடையாது.

2) 1991-96 காலக்கட்டத்தில், நரசிம்மராவ்-மன்மோகன்
காலத்தில்தான் முதன் முதலாக இந்தியாவில்
சேவை வரி என்ற கோட்பாடு ஏற்கப்பட்டது.

3) ஜூலை 1994இல் அன்றைய நிதியமைச்சர்
மன்மோகன்சிங் அவர்கள் இந்தியாவில் சேவை
வரியை முதன் முதலில் செயல்படுத்தினார்.

4) 1994இல் மொத்தமே மூன்றே மூன்று சேவைகளுக்கு 
மட்டுமே சேவை வரி விதிக்கப் பட்டது. அவையாவன:-
அ) தொலைபேசி சேவை
ஆ) இன்சூரன்ஸ் சேவை (Non Life insurance only)
இ) ஸ்டார்க் எக்சேஞ்சு தரகு (brokerage)

5) போகப்போக, மேலும் சேவைகள் சேவை வரி
வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. 2012 வரை
119 சேவைகள் இவ்வாறு சேவை வரிக்கு இலக்காயின.

6) தொடக்கத்தில் 5 சதமாக மட்டும் இருந்த
சேவை வரி படிப்படியாக உயர்ந்து GSTக்கு முன்பு
வரை 15 சதமாக இருந்து, இன்று GST
செயல்பாட்டுக்கு வந்ததும் 18 சதமாகி விட்டது.

7) சேவை வரி மூலம் ஆரம்பத்தில் (1994இல்)
சில நூறு கோடிகளே வருவாய் கிடைத்தது.
தற்போது பல லட்சம் கோடி ரூபாய் வருவாய்
சேவை வரி மூலம் கிடைக்கிறது.

8) 2012இல் சேவைவரி வளையத்தில் ஒரு
புரட்சிகரமான மாற்றத்தைச் செய்தார் அன்றைய
நிதியமைச்சர் ப சிதம்பரம்.

9) அது என்ன? இனி ஆண்டுதோறும் புதிய புதிய 
சேவைகளை  வரி வளையத்திற்குள் (Tax net) கொண்டு
வர வேண்டிய அவசியம் இல்லை. ப சிதம்பரம்
அவர்கள் ஒரு எதிர்மறைப் பட்டியலை (Negative List)
தயாரித்தார். அந்தப் பட்டியலில் இடம் பெறாத
சேவைகள் மீது சேவை வரி விதிக்கப்படும்.
இவ்வாறு ப சிதம்பரம் அவர்கள் தமது
நிபுணத்துவத்தின் உச்சத்துக்கே சென்றார்.

10) இவ்வாறு 2012இல் இருந்து இந்தியாவில்
 எதிர்மறைப் பட்டியலின் ஆட்சி  (Negative List Regime)
நடந்து வருகிறது.

11) சேவை வரி என்பதே மன்மோகன்-ப சிதம்பரம்
ஆகிய இருவரின் குழந்தையே. இதன் தாயும்
தந்தையும்  சிதம்பரமும் மன்மோகனும் ஆவர்.

12) சேவை என்பதற்கு வரி விதிக்கக் கூடாது.
சேவையை இலவசமாகவோ அல்லது எப்போதுமே
5 சதத்திற்கு மிகாத குறைந்த கட்டணத்திலோ
ஒரு அரசு தர வேண்டும். அவ்வாறு தருவது
அரசின் கடமை. சேவை வரி என்பது மக்களுக்கு
எதிரானது. இந்தியா போன்ற ஏழை நாட்டில்
சேவை வரி என்பது அநீதியானது. அதிலும்
தொலைபேசி சேவைக்கு 18 சதம் சேவை வரி
என்பது மன்னிக்கவே முடியாத குற்றம்.

13) சேவை வரி என்பது கோட்பாட்டு ரீதியாகத்
தவறானது என்ற கருத்தை நான் மட்டுமே
இச்சமூகத்திற்கு முன்வைக்கிறேன். தொடர்ந்து
கூறி வருகிறேன். என்றாலும் யாரும் செவி
சாய்ப்பதில்லை. இதனால் எனக்கு நஷ்டமில்லை.
*************************************************************** 

   

1 கருத்து: