சனி, 29 ஜூலை, 2017

குஜராத்தில் ஒரு கூவாத்தூர்!
குஜராத் காங்கிரஸ் MLA களை பெங்களூருவில்
அடைத்து வைத்துள்ள சோனியா!
சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட சித்தராமையா!
---------------------------------------------------------------------------------------
1) டிசம்பர் 2017இல் குஜராத்தில் சட்ட மன்றத் தேர்தல்
வருகிறது. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய்
காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மாறி வருகின்றனர்.

2) அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்,
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எட்டுப்பேர் கட்சிமாறி
பாஜகவின் கோவிந்துக்கு வாக்களித்தனர்.

3) குஜராத் சட்ட மன்றத்தில் மொத்த இடங்கள் =182.
பாஜக= 120; காங்கிரஸ்= 57. ஆனால் மீரா குமாருக்கு
காங்கிரசின் 57 MLAகளும் வாக்களிக்கவில்லை.
49 பேர் மட்டுமே வாக்களித்தனர். காங்கிரசின் 8 MLAகள்
கோவிந்துக்கு வாக்களித்தனர்.

4) நிற்க. குஜராத்தில் ஏன் ஒரு கூவாத்தூரை அரங்கேற்றி
உள்ளது காங்கிரஸ்? பார்ப்போம்.

5) ஆகஸ்ட்டு 8இல் குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல்
வருகிறது. 3 காலியிடங்களுக்கான தேர்தல் இது.
இதில் பாஜக வேட்பாளர்களாக அமித்ஷா, அமைச்சர்
ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும் போட்டி இடுகின்றனர்.

6) ஒருவர் வெற்றி பெற 47 MLAக்களின் ஆதரவு தேவை.
பாஜகவின் இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற
94 MLAக்களின் ஆதரவு வேண்டும். பாஜகவுக்கு
120 MLAக்கள் உள்ளனர். அதாவது வெற்றி பெறத்
தேவையான எண்ணிக்கை போக, உபரியாகவே
26 பேர் உள்ளனர்.

7) காங்கிரஸ் வேட்பாளராக சோனியாவின்  செயலாளர்
அகமது பட்டேல் இங்கு போட்டி இடுகிறார். காங்கிரசுக்கு
57 MLAக்கள் இருக்கின்றனர். இதில் ஜனாதிபதி தேர்தலில்
கட்சி மாறி வாக்களித்த 8 பேரைக் கழித்தால், மீதி
49 பேர் உள்ளனர். வெற்றிக்கு 47 தேவை. கூடுதலாக
2 பேர் இருப்பதால், அகமது படேலின் வெற்றி உறுதி
என்ற நிலை இருந்தது. ஆனால் அண்மையில் இந்த
நிலை மாறி விட்டது.

8) மூத்த காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா
கட்சி மாறி, பாஜகவில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து
3 காங்கிரஸ் MLAகள் பாஜகவில் சேர்ந்து விட்டனர்.
பாஜகவில் சேரும் முன்னரே தங்களின் MLA பதவிகளை
ராஜினாமா செய்து விட்டனர். எனவே கட்சி தாவல்
சட்டம் இவர்கள் மீது பாய முடியவில்லை.

9) மேலும் காங்கிரஸ் MLAகள் கட்சியில் இருந்து
விலகி பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இதனால்
வெற்றிக்குத் தேவையான 47 MLAக்களின் ஆதரவைப்
பெறுவது அகமது பட்டேலுக்கு கடினமாக உள்ளது.

10) மொத்தம் 3 ராஜ்யசபா காலியிடங்கள். மூன்று
பேர்தான் வேட்பாளர்கள் (பாஜக=2, காங்=1). எனவே
தேர்தல் ஏகமனதாக நடந்து முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் காங்கிரஸ் MLAக்கள் கட்சி மாறி நிலைமையைச்
சிக்கலாக்கி உள்ளனர். காங்கிரஸ் தலைமைக்
கொறடா ராஜ்புத் என்பவரே காங்கிரசில் இருந்து
விலகி விட்டார்.

11) நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த
பாஜக காங்கிரசில் இருந்து விலகிய ராஜ்புத்தை
ராஜ்யசபா வேட்பாளராக்கி விட்டது. பாஜகவின்
உபரி வாக்குகளான 26 மற்றும் காங்கிரஸ் அதிருப்தி
MLAக்களின் வாக்குகள் ஆகியவற்றுடன் அகமது
பட்டேலை தோற்கடித்து, அதிருப்தியாளர்
ராஜ்புத்தை வெற்றிபெறச் செய்வதற்காக, பாஜக
முயன்று வருகிறது.

12) தங்களின் MLAக்களைத் தக்க வைத்துக்
கொள்வதற்காக, சோனியாவும் ராகுல் காந்தியும்
எஞ்சியுள்ள காங்கிரஸ் MLAக்களை குஜராத்தில்
இருந்து வெளியேற்றி, காங்கிரஸ் ஆட்சி நடத்தும்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில்
ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் அடைத்து
வைத்துள்ளனர்.

13) ஆக, பெங்களூருவில் ஒரு கூவாத்தூரை உருவாக்கி
உள்ளது காங்கிரஸ்.  தப்பித்துப் போகாமல், MLAகளை
அடைத்து வைத்து வழிக்கு கொண்டு வருவது எப்படி
என்று, இது விஷயத்தில் நல்ல அனுபவம் உள்ள
 அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் காங்கிரஸ்
முதல்வர் சித்தராமையா ஆலோசனை கேட்டதாக
சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

14) ஆக, பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்று
லெனின் சொன்னது ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்
பட்டு வருகிறது.
*************************************************************          

தொ பரமசிவன் மார்க்சியம் அறியாதவர். வரலாற்றுப்
பொருள்முதல்வாதம் பற்றிய எந்த அறிவும் இல்லாத
ஒரு குட்டி முதலாளித்துவ நபர். அவரின் "ஆய்வு"களில்
அறிவுக்கு இடம் கிடையாது. தமது நுனிப்புல் பார்வையை
ஆய்வாக முன்வைப்பவர் அவர். அவரின் கருத்துக்கள்
மார்க்சிய ஆய்வுமுறைமையைப் பின்பற்றாதவை.
அவை இகழ்ச்சியுடன் நிராகரிக்கத் தக்கவை.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக