ஒரு என்ஜிஓ எடுபிடியின்
அப்துல் கலாம் குறித்த
இழிந்த பின்நவீனத்துவ மதிப்பீடு!
-------------------------------------------------------------
1)தோழர் விவேக் அவர்கள் பகிர்ந்த கட்டுரை
இழிந்த பின்நவீனத்துவப் பார்வையில்
ஏவுகணை விஞ்ஞானி கலாம் அவர்களை
இழிவு செய்கிறது.
**
2) ஏவுகணை விஞ்ஞானத்துக்கும் அணு விஞ்ஞானத்துக்கும்
மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு என்கிறார்
கட்டுரையாளர்.இரண்டுமே இயற்பியல்தான். இரண்டிலுமே இயற்பியலும் கணிதமும் செயல்படுகின்றன. இயற்பியலின்
இரண்டு துறைகளுக்கு இடையே உள்ள பொதுத்தன்மையைப்
பார்க்க மறுக்கிறார் கட்டுரையாளர். இது பின்நவீனத்துவப்
பார்வை.
**
2) பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் differentiate செய்யும்
தத்துவம். மாறாக, மார்க்சியம் integrate செய்யும் தத்துவம்.
அரசியல் சமூக அரங்கில் இத்தகைய தொடர்ச்சியான
பிரிவினை, மக்களின் வர்க்கரீதியான ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும்.மக்களை எந்த அமைப்பிலும் சேர்ந்து
விடாதவண்ணம் தடுக்கும்.
**
3) ஏவுகணை விஞ்ஞானியான கலாம், அணுக்கரு இயற்பியல்
பற்றிக் கருத்துக் கூறக்கூடாது என்கிறார் கட்டுரையாளர்.
என்ன கருத்தைக் கூறினார் கலாம் என்பதுதான்
கவனிக்கத் தக்கது. நியல்ஸ் போரின் அணுச்சித்திரம்
தவறு என்று கூறினாரா கலாம்? அல்லது, எலக்ட்ரான்கள்
அணுவின் உட்கருவுக்குள் இருக்கின்றன என்கிறாரா
கலாம்?
**
4) கலாம் அவர்களுக்கு அணுக்கரு இயற்பியல் பற்றிப்
பேசத் தகுதியில்லை என்றே வாதத்திற்காக வைத்துக்
கொள்வோம். கட்டுரையாளருக்கு கலாம் பற்றி
கருத்துக்கூற என்ன தகுதி உள்ளது? கட்டுரையாளர்
ஏவுகணை விஞ்ஞானியா என்ன? இக்கட்டுரையை
முகநூலில் பகிர்ந்த தோழருக்கு என்ன தகுதி உள்ளது?
தோழர் விவேக் ஏவுகணை விஞ்ஞானியா?
**
5) டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் எங்கல்ஸ் அங்கக
வேதியியல் (organic chemistry) பற்றி நிறையவே எழுதி
உள்ளார். எங்கல்ஸ் என்ன வேதியியல் அறிஞரா?
**
6) கட்டுரையாளர் தன் மண்டைக்குள் ஏறிய
பார்ப்பனியத்தை தன எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.
என்ன இருந்தாலும் கலாம் ஒரு துலுக்கந்தானே என்ற
அருவருக்கத்தக்க எண்ணமே அவரின் கட்டுரையில்
வெளிப்படுகிறது.
**
7) திமிர் பிடித்த ஒரு இழிந்த நபரின் கேவலமான
அவதூறுகள் கட்டுரை முழுவதும் நிரம்பிக்
கிடக்கின்றன. அவற்றில் எதுவும் பரிசீலித்து
பதிலளிக்க அருகதை அற்றவை.
**
(தொடர்ச்சி)
--------------------
8) இதில் ஒரு அவதூறு என்ஜிஓ எடுபிடி உதயகுமார்
கிளப்பிய அவதூறு. அதை அப்படியே தன்
கட்டுரையில் மீண்டும் எழுதி இருக்கிறார்
கட்டுரையாளர். கூடங்குளம் அணுஉலையைச்
சுற்றிப் பார்த்த நாலு மணி நேரத்திலேயே, அதைப்பற்றி
நூல் எழுதி விட்டார் கலாம் என்கிறார் கட்டுரையாளர்.
**
9) குறிப்பிட்ட நிகழ்வில் கூடங்குளம் சென்ற கலாம்
அவர்கள், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள PHRS
(Passive Heat Removal System) எவ்வாறு வேலை செய்கிறது
என்று செயல்படுத்திப் பார்த்து அறிவதற்காகச்
சென்றார். அதை பார்த்து முடித்ததும் கூடங்குளத்தை
விட்டு வெளியேறி, அவரின் நூலை வெளியிட்டார்.
**
10) இந்தியாவில் உள்ள எல்லா அணுஉலைகளிலும்
சென்று பார்வையிட்டு, சோதித்து அறிந்து, இதற்காக
ஆயிரம் என்ற அளவில் மனித நேரங்களைச்
(man hours) செலவிட்டு, அதன் பிறகு எழுதப்பட்ட
புத்தகம் அது.கூடங்குளம் சென்று சுற்றிப்பார்த்து
விட்டு ஒரு சில மணி நேரத்தில் எழுதப்பட்ட
புத்தகம் அல்ல.
**
11) இதை எந்த இடத்திலும் எத்தனை பேர்
முன்னிலையிலும் நிரூபிக்க நான் தயார்.
கட்டுரையாளரை வரச் சொல்லுங்கள். நீங்களும்
வாருங்கள். உங்களின் கூற்றை நிரூபிக்க இயலாது
என்று நான் சவால் விடுகிறேன்.
**
12) எவரோ ஒரு என்ஜிஓ எடுபிடி எழுதிய,. முற்றிலும்
காழ்ப்புணர்வு மட்டுமே நிரம்பிய ஒரு நச்சு
எழுத்தை இகழ்ச்சியுடன் நிராகரிப்பதற்குப்
பதிலாக, அதை மக்களிடம் பரப்புவது
மார்க்சியம் ஆகாது.
**
13) சோவியத் ஒன்றியத்தில் சீனாவிலும், மூல ஆசான்கள்
ஸ்டாலினும் மாவோவும், தங்கள் நாட்டின் அணு
விஞ்ஞானிகளை தேசத்தின் மகத்தட்டான குடிமக்களாகக்
கருதி மரியாதை செய்தார்கள். அத்தகைய மரியாதைக்கு
இந்தியாவில் உரியவர் கலாம் அவர்கள். அவரை நேர்மையாக எவரும் விமர்சிக்கலாம். ஆனால் அவதூறு செய்வது
அநீதியானது.
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.
------------------------------------------------------------------------- .
நாடாளுமன்ற அரசியல் என்பதில் (parliamentary politics)
சந்தர்ப்பவாதம் தவிர்க்க முடியாத ஒன்று. அரசியலில்
நிரந்தர நம்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை
என்பதே அங்கு செயல்படும் தத்துவம். இதனால்தான்
பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம் என்கிறார் லெனின்.
இந்து ஏட்டின் கட்டுரை நாடாளுமன்ற அரசியலின்
அடிநாதம் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதப்பட்ட
வழமையான கட்டுரை.
**
நித்திஷ் குமார் முதல்வரான உடனே நித்திஷ்-லாலு
கூட்டணி நீடிக்காது என்று எழுதி இருக்கிறேன். எனது
பழைய பதிவுகளை படிக்கவும்.
**
திமுக, அதிமுக, மதிமுக, பாமக ஆகிய தமிழக
கட்சிகளும், மமதா கட்சியும் பாஜகவுடன் கூட்டணி
வைத்த கட்சிகளே. வாஜ் பாய் அமைச்சரவையில்
முரசொலி மாறன் அமைச்சராக இருக்கவில்லையா?
காஷ்மீரின் உமர் அப்துலா அமைச்சராக
இருக்கவில்லையா?
**
நித்திஷை மட்டும் சந்தர்ப்பவாதி என்று சொல்ல
யாருக்காவது அருகதை இருக்கிறதா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக