புதன், 12 ஜூலை, 2017

பெண் நாவலாசிரியைக்கு எதிர்ப்பு!
ஐஐடி கரக்பூரில் நாவலின் கருத்துக்கு எதிர்ப்பு!
கவிஞர் மனுஷ்ய புத்திரன் அதிர்ச்சி!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐஐடியில்
கட்டிடக்கலை  படிப்பில் (B.Arch) வாஸ்து சாஸ்திரம்
ஒரு பாடமாக வைக்கப்பட இருக்கிறது. இது
அதிகாரபூர்வமான செய்தி!

இது குறித்துக் கண்டித்தும், இந்த முயற்சியை
முறியடிக்கக் கோரியும் நியூட்டன் அறிவியல்
மன்றம் அறிவியல் சமூகத்திற்கு (scientific community)
ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தது. என்றாலும்
இது குறித்த எமது முகநூல் பதிவு பலராலும்
சீந்தப் படவில்லை.

ஐஐடி மாணவர்கள், குறிப்பாக B.Arch படிப்பில் சேரும்
கட்டிடக்கலை மாணவர்கள் அனைவரும்,
அயன் ராண்ட் (Ayn Rand) எனப்படும் சோவியத்
ரஷ்ய-அமெரிக்க பெண் எழுத்தாளரான (1905-1982)
அயன் ராண்ட் எழுதிய "FOUNTAINHEAD" என்ற ஆங்கில
நாவலைப் படிப்பார்கள். அநேகமாக இந்த நாவலைப்
படிக்காத ஐஐடி B.Arch மாணவர் இருக்க முடியாது.
பிற பிரிவுகளின் (mechanical electrical) மாணவர்களும்
அயன் ராண்டைப் படிப்பது வாடிக்கை.
(இங்கு மாணவர் என்ற சொல் மாணவியையும்
குறிக்கும்).

ஆக, ஒரு பக்கம் அயன் ராண்டின் "fountainhead".
மற்றோரு பக்கம் வாஸ்து சாஸ்திரம்.
சேமியாப் பாயாசத்துடன் மிளகாயப்பழ ஜுசை
சேர்த்து, ஒரு காக்டெயில் பானத்தை ஐஐடி
மாணவர்கள் அருந்த வேண்டியது இருக்கிறது.
வாஸ்து சாஸ்திரம் versus அயன் ராண்ட் என்ற
பைனரி முரண் ஐஐடி கரக்பூரில் கட்டமைக்கப்
பட்டுள்ளதை எவரும் எளிதில் உணரலாம்.

எனினும், நாம் என்னதான் கரடியாகக் கத்தினாலும்
பேஸ்புக் பொறுக்கிகள் (தொடர் (phrase)  உபயம்:
திமுகவின்மனுஷ்ய புத்திரன்) இது போன்ற முக்கிய
விஷயங்களைக் காதிலேயே போட்டுக்
கொள்வதில்லை. பாகுபலி அவர்களின் சிந்தையைச்
சிறை செய்து இருக்கக் கூடும்.

நிற்க. அயன் ராண்டின் fountainhead நாவலைப்
படித்து இருக்கிறீர்களா? இல்லையென்றால்
படிக்கலாம். சற்று நீண்ட நாவல். 600 அல்லது 700
பக்கம் உள்ள நாவல். கதாநாயகன் பெயர் ரோர்க்.
(Howard Roark). இவன் ஒரு B.Arch மாணவன். நாவலைப்
படியுங்கள். அது ஒரு முதலாளித்துவ நாவல்தான்.
என்றாலும் படிக்க வேண்டிய ஒரு நாவல்.

அதைப்படித்த பிறகாவது, வாஸ்து சாஸ்திரம் என்ற
புராதனப் பொய்யை எதிர்க்க வேண்டும் என்ற
சிந்தனையை நீங்கள் பெறலாம்!  
***************************************************************

இந்தப் பதிவில் குறிப்பிடப் படுகிற, ஐஐடியில்
வாஸ்து சாஸ்திரம் பற்றிய எமது முந்திய பத்திவைப் படிக்காதவர்கள் இப்போதாவது படிப்பது நலம்.


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக