ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆந்திர மாநில MBBS தரவரிசைப் பட்டியல்!
ஆந்திரம் கேரளம் ஒப்பீடு!
கேரளத்தை விடக் குறைவான மதிப்பெண்ணுக்கு
ஆந்திரத்தில் MBBS இடம் கிடைக்கும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1) நீட் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண் மற்றும்
தரவரிசைப் பட்டியலை (RANK LIST) ஆந்திர மாநிலம்
முன்பே வெளியிட்டு விட்டது.

2) ஆந்திரத் தரவரிசைப் பட்டியல் 798 பக்கங்கள்
கொண்டது. 44640 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதாவது நீட் தேர்வு எழுதிய அனைவரின் பட்டியல் இது.
தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களின்
மதிப்பெண் மற்றும் ரேங்க் கொண்ட முழுமையான
பட்டியல் இது. எனவே நெகட்டிவ் மதிப்பெண் பெற்ற
மாணவர்கள் பற்றிய விவரங்களும் இப்பட்டியலில் உள்ளன.

3) ஆந்திர அரசு செய்தது போல, தமிழக அரசும்
நீட் எழுதிய அத்தனை பேரின் (தேறியோர் தேறாதோர்
உட்பட) மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியலை
பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் வண்ணம்
வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழக
அரசு வெளியிடவில்லை. வெளியிட வேண்டும் என்று
கோரிக்கை விடுக்கக்கூட தமிழ்நாட்டில் நியூட்டன்
அறிவியல் மன்றத்தைத் தவிர யாரும் இல்லை.

4) தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வைக்கப்பட
வேண்டும். தமிழக அரசு நீட் முடிவுகளைப்
பொதுவெளியில் வைக்கவில்லை. தேர்வு எழுதிய
மாணவர் மட்டும் தனது பதிவு எண் மூலம்
LOG IN செய்து தன்னுடைய மதிப்பெண்ணை மட்டும்
பார்க்கக்கூடிய அளவில்தான் தமிழக அரசு
வெளியிட்டு உள்ளது. இது சரியல்ல.

5) தற்போது, ஆந்திரா கேரளா ஒப்பிட்டுப் பார்ப்போம்.
(நேற்று வெளியிட்ட கேரளத்து தரவரிசைப்
பட்டியல் பற்றிய எமது பதிவைப் பார்க்கவும்)
ஆந்திராவில், முதல் ரேங்க்பெற்ற மாணவனின்
நீட் மதிப்பெண் 685.(கேரளத்தில் 691).

6) ஆந்திராவில், 50ஆவது ரேங்க் மாணவனின்
நீட் மதிப்பெண் 638.(கேரளத்தில் 644)

7) 100ஆவது ரேங்க் மாணவனின் நீட் மதிப்பெண்
624. (கேரளத்தில் 635).

8) 200ஆவது ரேங்க் மாணவனின் நீட் மதிப்பெண்
599 (கேரளத்தில் 622).

9) 198ஆவது ரேங்குடன் ஆந்திரத்தில் 600 மதிப்பெண்
முடிவுக்கு  வந்து விடுகிறது. (கேரளத்தில் 491ஆவது
ரேங்கில்தான் 600 மதிப்பெண் முடிவுக்கு வருகிறது)

10)1000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 530.
(கேரளத்தில் 576; 46 மதிப்பெண்கள் அதிகம்).

11) 2000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 487.
(கேரளத்தில் 544: 57 மதிப்பெண் அதிகம்).

12) 3000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 454.
(கேரளத்தில் 517)

13) 4000ஆவது ரேங்கின் நீட் மதிப்பெண் 428.
(கேரளத்தில் 496)

14) இதன் மூலம் தெரிய வருவது என்ன? ஆந்திர
மாணவர்கள் நீட் தேர்வில் கேரள மாணவர்களை
விடக் குறைவாகவே மதிப்பெண் பெற்றுள்ளனர்
என்பது தெரிய வருகிறது.

15) இதன் பொருள் என்ன? கேரளத்தை விடக்
குறைவாக மதிப்பெண் எடுத்தாலும், ஆந்திராவிலும்
இடம் கிடைக்கும் என்பதுதான் இதன் பொருள்.

16) தமிழக ரேங்க் பட்டியல் வெளியிடப் பட்ட
பிறகுதான் நமது மாணவர்களின் நிலை தெரியவரும்.
ஆனால் ஆந்திராவை விடக் குறைவாக மதிப்பெண்
எடுத்திருந்தாலும், தமிழகத்தில் இடம் கிடைக்கும்.
**************************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக