சனி, 29 ஜூலை, 2017

சாதியும் வர்க்கமும்!
-----------------------------------
சாதி என்பது ஏனைய சமூக யதார்த்தங்களில்
இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு,
முழுமுதலான ஒன்றாக (absolute) இருப்பதில்லை.
அது மட்டுமல்ல, என்றுமே அப்படி இருந்ததில்லை.
சாதி தோன்றும்போதே, அது தன் முக்கிய உள்ளடக்கமாக
(essential ingredient) வர்க்கத்தையும் கொண்டிருந்தது. 

மனிதகுலம் அதன் தொடக்க காலத்திலேயே
வர்க்கங்களாகப் பிரிந்து விட்டது. சாதி என்பது
காலத்தால் பிந்திய மற்றுமொரு பிரிவினையே.
வர்க்கப் பிரிவினையை அழித்து விட்டு, அதன்
இடத்தில் சாதி தோன்றவில்லை. மாறாக, ஏற்கனவே
சமூகத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினையுடன்,
கூடுதலான மற்றுமொரு பிரிவினையாக சாதி
தோன்றியது.

சாதிய அரசியல் செய்பவர்களின் மூளையில்
இந்த உண்மை உறைக்காது. அவர்கள் சாதியை
தனித்துவமானதும் முழுமுதலானதுமான ஒன்றாகப்
பார்க்கிறவர்கள். எனவே சமூகத்தின்  தொடர்ச்சியான
இயக்கத்தின் விளைவாக, ஒவ்வொரு சாதிக்குள்ளும்
புதிது புதிதாக வர்க்கங்கள் முளைப்பதை அவர்கள்
கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

சாதியானது மாற்றவே முடியாத ஒன்று என்ற கருத்தும்
முற்றிலும் தவறானதே. இன்றுள்ள சாதிகள் யாவும்,
இன்றுள்ள தமது சமூக அந்தஸ்துடன், ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இருந்தததில்லை. இன்று
முன்னேறிய சாதிகளாகக் கருதப்படும் சில
சாதிகள் முன்பு கீழ்நிலை சாதிகளாக இருந்தவையே.
இதனால் யாப்புறுத்தப் படுவது என்னவெனில்,
சாதியும் சரி, வர்க்கமும் சரி, இரண்டுமே மாற்றத்துக்கு
ஆட்படுபவைதான்.
==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக