திங்கள், 10 ஜூலை, 2017

தோழர் காலன்துரை அவர்களுக்கு,
----------------------------------------------------------------
1) தங்களுடன் "தத்துவப் போராட்டம்"நடத்த
யார் எவரும் என்னை நியமிக்கவில்லை.
"தத்துவப் போராட்டம்" நடத்தும் பொறுப்பையும்
யார் எவரும் என்னிடம் ஒப்படைக்கவில்லை.
2) தனிநபர்களை மையப்படுத்தி நடைபெறும்
 சர்ச்சைகளில் எனக்குப் பங்கில்லை. அவற்றில்
இருந்து துண்டித்துக் கொண்டு இருப்பவன் நான்.
3) அத்வைதம் பொருள்முதல்வாதமே என்று தாங்கள்
 முன்வைத்த விஷயம் மட்டுமே என் அக்கறைக்கு
 உரியது, அது தீமையை விளைவிக்கும் கருத்து என்பதால்.  
4) ஒரு கருத்தைப் பொதுவெளியில் முன்வைக்கிற
எவரும் அதன் மீதான எதிர்வினையைச் சந்திக்கச்
சித்தமாக இருக்க வேண்டும்.
5) அனைவருக்கும் நன்றி.
------------------------------------------------------------------------------------------
1) அரசியலில் ஏற்பும் மறுப்பும் பிரதான பங்கு வகிப்பவை.
ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை குறித்து எதிர்மறையாக
ஒரு கருத்து பொதுவெளியில் முன்வைக்கப் படுமென்றால்,
ஒன்று அதை ஏற்க வேண்டும் அல்லது அதை மறுக்க
வேண்டும். இது மார்க்சியர்களின் கடமை ஆகும்.
**
2) தோழர் காலன்துரை அவர்கள்  "அத்வைதம்
பொருள்முதல்வாதமே"  என்ற ஒரு கருத்தைப்
பொதுவெளியில் முன்வைத்துள்ளார்.
**
3) இது சரியென்றால் அதை ஏற்பதும், தவறு என்றால்
அதை மறுப்பதும் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட
ஒவ்வொருவரின் கடமை ஆகும்.
**
4) தோழர் காலன்துரையின் மேற்கூறிய கருத்து
அடிப்படையிலேயே தவறானது. அத்வைதம்
பொருள்முதல் வாதம் அல்ல. இதை நிலைநாட்டுவது
ஒவ்வொரு மார்க்சியரின் கடமை ஆகும். எனவே
என்னுடைய கடமையும் ஆகும்.
**
5) அடுத்து, விரைவில் இது குறித்து அனைவரின் ஒத்துழைப்புடனும் எழுத உள்ளேன். நன்றி.
    

சற்றுமுன்தான் தங்களின் "மறுவிசாரணை தத்துவத்தில்"
என்பது கிடைக்கப் பெற்றது. எனினும் எனக்கு எவ்வித
அவசரமும் இல்லை. மருத்துவ அட்மிஷன் தொடங்கிய
பிறகுதான் எழுத உள்ளேன். எனவே தங்களுடன்
விவாதித்த பின்னரே எழுதலாம் என்று உள்ளேன்.

தோழர் உறவு பாலா அவர்களுக்கு,
தங்களின் கூற்றில் உண்மை இல்லை. அத்வைதம்
கருத்துமுதல்வாதமே என்று கூற எந்த அமைப்பும்
அஞ்சப்போவதில்லை. மார்க்சியம் அந்த அளவு
பலவீனமான தத்துவம் அல்ல. எந்தவொரு மார்க்சிய
லெனினிய அமைப்பும் பதில் சொல்லும் பொறுப்பை மற்றவர்களிடம் தள்ளி விட்டு ஒதுங்கக் கூடிய
அமைப்பு அல்ல. சந்தர்ப்பவாதம் என்பதெல்லாம்
தங்களின் கற்பனையே. தாங்கள் அதீதமான
மனக்கிளர்ச்சிக்கு ஆளாகிறீர்கள் என்பது என்
தாழ்மையான கருத்து. மிக இயல்பாகவும்
எளிமையாகவும் இந்த ஒட்டு மொத்த
விவகாரத்தையும் அனைவரும் கையாளலாம்
என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக