செவ்வாய், 4 ஜூலை, 2017

முதலில் சேர்க்கப் படாமல் இருந்த
ரியல் எஸ்டேட் பின்னர் GST யில் சேர்க்கப்பட்டது.

வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
(The role of individual in society) என்பது வரம்புக்கு உட்பட்டது.
இது மார்க்சியப் பார்வை. உலகமயத்தின் விளைவுதான்
மாநில அரசுகளின் உரிமை இழப்பு. இது LPG
கொள்கைகள் செயலுக்கு வந்த காலம் முதலே
தொடங்கி விட்டது.
**
இதில் மன்மோகன் சிங்கையோ
அல்லது மோடியையோ பொறுப்பாளியாக்குவது
அபத்தம். பிரதமராக நீங்கள் இருந்தாலும் சரி,
அல்லது நான் இருந்தாலும் சரி, அல்லது தளபதி
மு க ஸ்டாலின் அவர்கள் இருந்தாலும் சரி,
மாநில உரிமையை மீட்டு எடுத்து விட முடியாது.
இது எதை உணர்த்துகிறது? பிரச்சினை தனிநபர்
அல்ல என்பதை உணர்த்துகிறது.  
**
ஆனால் உலகமயம் என்றால் என்ன என்று
இம்மியளவு கூட புரிந்து கொள்ளாதவர்கள்,
மோடி ஒழிக என்று கக்கூஸில் கிறுக்கி விட்டு
பெரும் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொண்டு
விட்ட திருப்தியுடன் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டு
திரிகிறார்கள். அவர்களுக்கு உணர்த்தவே இந்த
வாக்கியம். மன்மோகன் பிரதமராக இருந்தபோது
அவரும் இது போன்ற தனிநபர் ரீதியிலான
எதிர்ப்பைச் சந்தித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக