வெள்ளி, 14 ஜூலை, 2017

மருத்துவப் படிப்பில் CBSEக்கான 15 சத ஒதுக்கீட்டை
நீதிமன்றம் ரத்து செய்ததால் பாதிப்பு இருக்குமா?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------
1) தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்
மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு
இடங்களில், CBSE பாடத்திட்ட மாணவர்க்கு 15 சதமும்
தமிழக மாநிலப் பாடத்திட்ட மாணவர்க்கு 85 சதமும்
ஒதுக்கி, தமிழக அரசு ஆணையிட்டது (பார்க்க:
ஜூன் 22, 2017 அரசாணை)
2) இந்த அரசாணை செல்லாது என்று சென்னை
உயர்நீதிமன்றம் இன்று ( ஜூலை 14, 2017) தீர்ப்பு
கூறியுள்ளது.
3) இதன் மூலம் மொத்தமுள்ள 3377 MBBS இடங்களில்
(அரசு+தனியாரின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்)
மாநிலப் பாடத்திட்டத்திற்கு 2867 இடங்கள் மற்றும்
CBSEக்கு 510 இடங்கள் என்ற பாகுபாடு ரத்தாகிறது.
4)அதே போல, BDS மொத்த இடங்கள் 1190இல்,
மாநிலப் பாடத்திட்டம்+CBSE = 1011+179 என்ற
பாகுபாடும் முடிவுக்கு வருகிறது. 
5) எனவே மொத்தமுள்ள MBBS+BDS = 4567 இடங்களிலும்
CBSE, State Board என்னும் பாகுபாடு செயல்படாது.
6) மேற்கூறிய 4567 இடங்களிலும் 69 சத இட ஒதுக்கீடு
மட்டுமே செயல்படும். (மாற்றுத் திறனாளி ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடாக அமையும். விளையாட்டு ஒதுக்கீடு
அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்படும்.)
7) உயர்நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்படும் சாதக
பாதகம் என்ன என்று பார்ப்போம்.
8) CBSE மாணவர்கள் பொதுவாக மருத்துவப் படிப்பை
நாடுவதில்லை. விதிவிலக்காகவே ஒரு சிலர்
மட்டும் MBBSக்கு விண்ணப்பம் செய்வர். தமிழத்தில்
நீட் தேர்வு எழுதியவர்கள் 88431 பேர். இதில் CBSE
மாணவர்கள் வெறும் 4675 பேர் மட்டுமே. இது 5.3 சதம்
ஆகும்.
9) இந்த 4675 பேரில் எத்தனை பேர் தேறியுள்ளனர் என்ற
புள்ளி விவரத்தை இன்னும் அரசு வெளியிடவில்லை. 
தேறி இருந்தாலும், முற்பட்ட மற்றும் BC மாணவர்கள்
என்றால், 200க்கு கீழ் மதிப்பெண் பெற்றுத் தேறி
இருந்தால், அதனால் பயனில்லை. அவர்களுக்கு
MBBS, BDS இடம் கிடைக்காது.

10) CBSEக்கு தமிழக அரசு ஒதுக்கிய 15 சதம் இடங்கள்
மிகவும் RATIONALஆன ஒரு மதிப்பீடு. அதில் தவறு
காண இடமில்லை.
11) தற்போது இந்த ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து
செய்தாலும், அதனால் மாநிலப் பாடத்திட்ட
மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்
என்று கருத இடமில்லை. அதிகபட்சமாக, CBSE
மாணவர்கள் 20 சதம் இடங்களை மட்டுமே
பிடிக்கக் கூடும் என்று கருத இடமுண்டு.

12) என்றாலும், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்
பட்டு, CBSE மாணவர்கள் எத்தனை பேர் 350க்கு
மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர் என்ற எண்ணிக்கை
தெரிந்த பின்பே, அவர்கள் எத்தனை இடங்களைப்
பெறுவார்கள் என்று கூற முடியும்.

13) தற்போதைய நிலையில் யார் என்ன  கருத்தைக்
கூறினாலும், அது துல்லியமான மதிப்பீடாக
இருக்காது; இருக்கவும் முடியாது. இது நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் கணிப்புக்கும் பொருந்தும்.

14) கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி, CBSE
மாணவர்களால் பெரும்பகுதி இடங்களைக் கைப்பற்ற
முடியாது என்பதே எங்களின் கணிப்பு.

15) தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று
என்பது போல, தமிழகப் பாடத்திட்ட மாணவர்கள்
மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி
விடுவார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகே
துல்லியமாகக் கணிக்க முடியும். மேற்கூறிய
எமது கணிப்பு தோராயமானதே.
***************************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக