சனி, 1 ஜூலை, 2017

தொலைபேசி சேவைக்கான
GST வரி 18 சதம் என்று
GST கவுன்சில் முடிவு.
பிராட்பேண்ட் சேவை
வணிகருக்குத் தேவை. இது அநியாயம்!
எனவே இதை 5 சதமாக குறை!

தியேட்டரில் சினிமா பார்க்க
GST வரி 28 சதம்தானா?
ரூ 50 டிக்கட்டை ரூ 500க்கு 
வாங்கும் ரசிகனுக்கு  அவமதிக்காதே.
200 சதம் வரி விதி! 

GSTயால் விலைவாசி குறையும்!
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார்
அருள்வாக்கு!

GST வரி செலுத்தாமல்
ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல்
இருந்தால் கைது (Non Bailable)
என்ற ஷரத்தை
காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை?  

சேவைக்கு வரி என்ற கோட்பாடு
அடிப்படையிலேயே தவறு.
இந்தியாவுக்கு பொருந்தாது.
டெலிகாம், வங்கி போன்ற சேவைக்கு 
வரி கூடாது.

நுனிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு
அடிக்கிளையை வெட்டும் மூடத்தனமே 
தொலைபேசி சேவைக்கு விதித்த
18 சதம் GST வரி.

நிதியமைச்சரால் வரி விதிக்க முடியாது.
வரி என்றாலே இனி GSTதான். அதை GST கவுன்சில்
முடிவு செய்யும். தலமட்ட (LOCAL) தீர்வைகள்
மட்டுமே உள்ளாட்சி நிறுவனங்கள் விதிக்க முடியும்.

தொலைபேசி சேவைக்கான
18 சதம் GST வரியை எதிர்த்து
BSNL தொழிற்சங்கங்கள்
NFTE BSNLEU போராட வேண்டும்.
இது AIBEA, BEFIக்கும் பொருந்தும்.

GST அமல்.
ஜெயேந்திரர் ஆனந்த லஹரி!
கோவாப்பரேட் பண்ணிய
யெச்சூரிக்கு
இன்டெலிஜென்ட் அண்ட்
ரெஸ்பான்சிபிள் லீடர்
என்று ஜெயேந்திரர் புகழாரம்! பாராட்டு!

லஹரி= வெள்ளம். லஹரி என்பது சமஸ்கிருதம்.
ஸௌந்தர்ய லஹரி தெரியுமா? படித்தது உண்டா?
நமது பதிவுகளைப் படிப்பவர்களுக்கு சம்ஸ்கிருத
அறிவு இருப்பது விரும்பத்தக்கது என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
  குறிப்பு: நேரடி வரிகள் அப்படியே நீடிக்கின்றன.
அவற்றுக்கு GST பொருந்தாது. உதாரணம்: வருமானவரி.

இது போன்ற பல பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது.
பேராசிரியர் சுப வீ அவர்கள் அப்படிக் கூறினார்
என்பதற்கான ஆதாரத்தைத் தந்தால் மகிழ்ச்சி!

சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கியே
எறும்புகள் செல்லும். அது போல, அதிகாரம்
இருக்கும் இடத்தை நோக்கியே அரசியல்வாதிகள்
செல்வார்கள். GST மூலம் மாநில நிதியமைச்சர்களின்
அதிகாரம் மத்திக்குச் சென்று விட்டது. இது தேசியக்
கட்சிகளுக்கு சாதகம். மாநிலக் கட்சிகளுக்கு பாதகம்.

மார்க்சிஸ்ட் தலைவர் யெச்சூரிக்கு
நடிகை ஸ்வர்ண மால்யா பாராட்டு!
GST குறித்து கருத்து தெரிவித்தார்!
-----------------------------------------------------------------
மோடிஜி நெனச்சத சாதிச்சுட்டாரோன்னோ!
பட் ஆனா அப்போசீஸன்ல இருக்கறவா
நன்னா ஸப்போட் பண்ணினா!
யெச்சூரி அங்கிள் ஃபுல்லா கோஆப்பரேட்
பண்ணினா. அவா கோஆப்பரேஷன் இல்லன்னா
GST பாஸ் ஆகி இருக்குமோ!

இவ்வாறு நடிகை ஸ்வர்ண மால்யா கருத்து
தெரிவித்தார். முற்போக்குக் கருத்துக்களை
அடிக்கடி தெரிவித்து வருபவர் ஸ்வர்ண மால்யா
என்பது குறிப்பிட்டது தக்கது.

His Master's Voice என்பது போல, ஸ்வர்ண மால்யாவின்
கருத்து Her Masters Voice என்பது குறிப்பிடத் தக்கது.
***************************************************************  
 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக