மாவோயிஸ்ட் தோழர் விவேக் மதுரையில் கைது!
இக்கைது நியாயமற்றது! தமிழக அரசே,
தோழர் விவேக் அவர்களை விடுதலை செய்!
---------------------------------------------------------------------
இன்று காலை (16.12.2020) மாவோயிஸ்ட் தோழர்
விவேக் அவர்களை மதுரை தல்லாகுளம் காவல்துறை
கைது செய்துள்ளது. UAPA சட்டத்தின் கீழ் விவேக்
கைது என்றும் UAPA சட்டத்தில் அல்ல, வேறு ஒரு பிரிவில்
கைது என்றும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன.
இந்த நிமிடம் வரை சரியான தகவல் எது என்று
உறுதி செய்ய இயலவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு, ஆங்கில ஏடு இந்துஸ்தான்
டைம்சில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்ட செய்தி
வெளியாகி இருந்தது. அதைத் தமிழில் மொழிபெயர்த்து
தமது முகநூல் பக்கத்தில் பதிவாக வெளியிட்டார் தோழர்
விவேக் என்பதே அவர் இழைத்த பயங்கரவாதச் செயல் (??)
என்று கருதுகிறது போலீஸ். அதையொட்டியே இந்தக் கைது.
தோழர் விவேக் அவர்களை உடனடியாக விடுதலை
செய்ய வேண்டும். அவர் மீதான பித்துக்குளித் தனமான
மொழிபெயர்ப்பு வழக்கை காவல்துறை உடனடியாக
வாபஸ் பெற வேண்டும்.
மாவோயிஸ்டுகளைப் பொறுத்து அல்லது மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகளைப் பொறுத்து, தமிழ்நாட்டில்
சட்ட விரோதச் செயல்கள் (unlawful activities) என்பதற்கு
முற்றிலும் இடமில்லை. எந்தத் தனிநபரோ அல்லது
மாவோயிச அமைப்போ சட்ட விரோதச் செயல்களில்
ஈடுபடவில்லை; அவர்களின் அஜெண்டாவில் சட்ட
விரோதச் செயல்களுக்கு இடமே இல்லை.
Unlawful activities என்பனவற்றை யாரும் isolated chamberல்
வைத்துச் செய்ய இயலாது. Unlawful activitiesஐ மேற்கொள்ள
வேண்டுமெனில், அதற்கான சாதகமான புறச் சூழ்நிலைகள்,
அகநிலை ரீதியான வலிமை, logistic support ஆகியவை
போதிய அளவில் தேவை. இவை எதுவும் தற்போது
மாவோயிஸ்டுகளுக்கு இல்லாத சூழலில் UAPA சட்டப்
பிரயோகம் என்பது முற்றிலும் தேவையற்றது ஆகும்.
எனவே தோழர் விவேக் மீதோ அல்லது வேறு எவர் மீதோ
UAPA சட்டத்தைப் பிரயோகிப்பது முற்றிலும் கேலிக்கூத்து
ஆகும். முகநூலில் உள்ள கியூ பிராஞ்சு ஆட்காட்டிகள்
ஸ்கிரீன் ஷாட் எடுத்துத் தருகிற முகநூல் பதிவுகளின்
அடிப்படையில் மாவோயிஸ்டுகளைக் கைது செய்ய
தமிழக போலீஸ் முடிவு செய்யுமானால், அது சிரிப்புக்கு
இடமாகிப் போகும்.
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகளின் கவனத்திற்கு,
முகநூலில் உள்ள கியூ பிராஞ்சின் ஆட்காட்டிகளிடம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம். மாறுவேடத்தில் மார்க்சிய முகாமில்
இருக்கும் கயவர்கள் அவர்கள். **********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக