புதன், 30 டிசம்பர், 2020

உலகம் போற்றும் பெண் விஞ்ஞானி ஒரு தமிழச்சி!

--------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------ 

மொத்தத் தமிழ்நாடும் இரண்டு விஷயங்களில் 

மூழ்கிக் கிடக்கிறது. 1) கமலஹாசனின் பிக் பாஸ்,

2) ரஜனி காந்த்தின் அரசியலுக்கு முழுக்கு.


எட்டுக் கோடித் தமிழர்களும் தங்களின் மூளையில்

கூத்தாடிகளை இறக்கி வைத்துள்ளனர். அது அவர்களுக்குப் 

பிடித்த வேலை. நாம் நமக்குத் பிடித்த வேலையைச் 

செய்வோம். நமக்குத் பிடித்த வேலை அறிவியல் வேலை.

அறிவியல் நமது மூளையில் நிறையட்டும். அது 

நம் அறிவினில் உறையட்டும்!


முந்திய கட்டுரை ஒன்றில், உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் 

பெண் விஞ்ஞானியை அறிமுகம் செய்தேன். குவாண்டம் 

ஈர்ப்பு (quantum gravity) என்னும் நவீன இயற்பியலில் 

ஆராய்ச்சி செய்யும் அப்பெண் விஞ்ஞானியின் பெயர் 

சபைன் ஹோசன்பெடர் (Sabine Hossenfelder).


இன்று இன்னொரு பெண் விஞ்ஞானியை உங்களுக்கு 

அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். உலகம் போற்றும்

பெண் விஞ்ஞானியான இவர் ஒரு தமிழச்சி. நம் 

கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண். இவரின் பெயர் 

பிரியம்வதா நடராசன். இவர் ஒரு விண்ணியற்பியலாளர் 

(Astrophysicist) மற்றும் பிரபஞ்சவியலாளர் (cosmologist).


கேம்பிரிட்ஜில் படித்த இவர் தற்போது அமெரிக்காவின் 

யேல் பல்கலையில் பணிபுரிகிறார். கரும்பொருள் 

மற்றும் கரும் ஆற்றல் (dark matter and dark energy) குறித்து 

ஆராய்ச்சி செய்து வருகிறார். கருந்துளைகள் 

குறித்தும் இவர் பெரிதும் அக்கறை கொண்டவர்.

உலகப் புகழ் பெற்றவர் இவர். என்றேனும் ஒருநாள் 

இவர் நோபெல் பரிசு பெறக்கூடும். உலக அளவில் 

உச்சத்தில் இருக்கும் பெண் விஞ்ஞானிகளில் 

இவரும் ஒருவர்.


இவரைத் தெரிந்து கொள்வோம். இவரைத்  

தெரிந்து கொள்ளாமல் இருப்பது இழிவு.

இவரை இதுவரை தெரியாமல் இருந்ததற்காக நாணுவோம்.

**************************************************  mmmmm

 


    

    


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக