வியாழன், 31 டிசம்பர், 2020

 ஜனவரிப் புத்தாண்டு தமிழனுக்கு உரியது!

இரண்டு புத்தாண்டுகள் தமிழனுக்கு!

அறிவியலின் தீர்ப்பு என்ன?

----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

இரண்டு பொண்டாட்டி என்பது போல 

இரண்டு புத்தாண்டுகள் இருக்கும்!

ஜனவரிப் புத்தாண்டு அனைவருக்கும் பொதுவானது!

சித்திரைப்  புத்தாண்டு தமிழனுக்கு மட்டுமானது!

----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

சித்திரை என்பது  பண்பாட்டுப் புத்தாண்டு. 

ஜனவரி என்பது  உற்பத்திப் புத்தாண்டு.

உலகளாவிய மானுட சமூகம்

மொத்தத்திற்கும் உரிய புத்தாண்டு ஜனவரிப் 

புத்தாண்டு. இது ஆங்கிலேயனுக்கு மட்டும் 

சொந்தமானதல்ல. 


சமூகத்தின் பொருள் உற்பத்தி உலகம் முழுவதும் 

எந்தப் புத்தாண்டின் அடிப்படையில் நடக்கிறது?

ரயில்களும் விமானங்களும் புறப்படும் நேரங்கள் 

எந்தக் காலண்டரின்படி தீர்மானிக்கப் படுகின்றன?


பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் 

எந்தக் காலண்டரின் அடிப்படையில் பதிவு 

செய்யப் படுகின்றன?


பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் எந்தக் காலண்டரின் 

அடிப்படையில் நடக்கின்றன?


உலகில் நடைபெறும் அத்தனை நடவடிக்கைகளும் 

செயல்பாடுகளும் எந்தக் காலண்டரின் அடிப்படையில் 

மேற்கொள்ளப் படுகின்றன? ஜனவரி காலண்டரின் 

அடிப்படையில்தானே! 


மாநகராட்சிகளில்  எந்தக் காலண்டரின் பேரில் 

பிறப்பு  இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப் 

படுகின்றன?


ஜனவரிப் புத்தாண்டை அதாவது இந்தக் காலண்டரை 

விஞ்ஞானிகள் தங்களின் பொறுப்பில் எடுத்துக் 

கொண்டுள்ளனர். இது மதத் தலைவர்களின் 

கட்டுப்பாட்டில் இல்லை. எனவேதான் மதச்சார்புடைய 

கிமு கிபி போன்ற ஏசு கிறிஸ்து பெயரிலான 

குறியீடுகள் நீக்கப் பட்டுள்ளன.


ஜனவரிப் புத்தாண்டு என்பது உலகப் பொதுப் புத்தாண்டு. 

இது அறிவியல் புத்தாண்டு. இது அனைவருக்கும் உரியது. 

இது தமிழனுக்கும்  உரியது.


அறிவியல் ஒளி பெப்ரவரி ஆண்டு மலரில் வெளியான 

காலண்டரின் கதை என்னும் எனது கட்டுரையைப் 

படிக்கலாம்;; தெளிவு கிடைக்கும். 


சித்திரைப் புத்தாண்டைக் கைவிட வேண்டியதில்லை. அது 

பண்பாட்டின் அடையாளமாக இருக்கும். பழைய 

வரலாற்றின் சின்னமாக இருக்கும்.


உலகம் முழுவதும் எல்லோரும் இரண்டு புத்தாண்டுகளை 

வைத்துக் கொண்டுள்ளனர். ஒன்று ஜனவரிப் புத்தாண்டு.

இன்னொன்று தங்களின் பழைய புத்தாண்டு.


தமிழனுக்கும் இரண்டு புத்தாண்டு! ஒன்று ஜனவரிப் 

புத்தாண்டு! இன்னொன்று சித்திரைப் புத்தாண்டு.

களத்திர ஸ்தானத்தில் தமிழனுக்கு இரண்டு இருக்கிறது.

தமிழனின் கடவுளான முருகக் கடவுளுக்கும்

ரெண்டு பொண்டாட்டி; வள்ளி, தெய்வயானை!


வள்ளியாக சித்திரைப் புத்தாண்டும்

தெய்வயானையாக ஜனவரிப் புத்தாண்டும் கொண்டு 

தமிழன் வாழட்டும்! நீடூழி வாழட்டும்!

இதுதான் எனது தீர்ப்பு! அதாவது அறிவியலின் தீர்ப்பு!!

**********************************************************     

 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக