தொ பரமசிவம் மறைவுக்கு இரங்கல்!
பரமசிவம் மார்க்சிய ஆய்வாளர் அல்லர்!
அவர் தீவிரமான கருத்துமுதல்வாதி!
-------------------------------------------------------------
தமிழறிஞராக, ஆய்வாளராக அறியப்படும்
தொ பரமசிவம் அவர்களின் மறைவுக்கு எமது
ஆழ்ந்த இறங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொ பரமசிவம் மார்க்சிய ஆய்வாளர் அல்லர்.
அவர் மார்க்சியம் கற்றவரும் அல்லர். மார்க்சியப்
பொருள்முதல்வாதம் குறித்தோ, மார்க்சியம் கூறுகிற
இயங்கியல் (dialectics) குறித்தோ அவருக்கு ஒன்றும்
தெரியாது.
மேலும் தொ பரமசிவம் அறிவியல் கற்றவரும் அல்லர்.
அவரின் ஆய்வு முறைமை மார்க்சியமற்றது (unmarxist)
மற்றும் அறிவியலற்றது (unscientific).
அவர் ஒரு தமிழ்ப் பண்டிட். 1950களில் தமிழ்நாட்டில்
தமிழ்ப் பண்டிட்ட்டுகளின் பொற்காலம் நிலவியது.
அது கொஞ்சம் கொஞ்சமாக மங்கி தற்போதுதான்
மறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் தவிர வேறு எதுவும் அறியாதவர்கள் பெரும்
அறிஞர்களாகக் கொண்டாடப் பட்டனர். இந்த
முட்டாள்தனம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும்
கிடையாது.
ரிலேட்டிவிட்டி தியரி, குவாண்டம் தியரி, ஸ்டிரிங் தியரி
என்று அறிவியல் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் தொ பரமசிவம் போன்ற தமிழ்ப் பண்டிட்டுகள்
இது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமலே வாழ்ந்து
வருபவர்கள். a plus b whole squared என்றால் என்னவென்றே
தெரியாதவர்களை அறிஞர்கள் என்று கருதுவது
பரிதாபம்.
கமல் ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும்
தொ பரமசிவன் ஒரு மார்க்சிய ஆய்வாளர் என்று
தங்களின் அஞ்சலிக்கு குறிப்பில் எழுதி உள்ளனர்.
இவை உலகின் இழிந்த கூற்றுகள் ஆகும்.
தமது முன்முடிவுகளை ஆய்வுகள் என்ற பெயரில்
தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தவர் தொ பரமசிவம்.
கால வெள்ளத்தில் அவரின் போலி ஆய்வுகள்
நிராகரிக்கப் படும்.
***********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக