சனி, 5 டிசம்பர், 2020

 உலகில் எத்தனையோ மோசமான விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதில் இன்றுவரை முதலிடத்தில் இருக்கும் விபத்து செர்னோபில் அணுஉலை கசிவு.

அதற்கு அடுத்த பேரழிவு நடந்த இடம் போபால். ஆனால் உக்ரைனின் மக்கள் செறிவிற்கும், போபாலின் மக்கள் நெரிசலையும் ஒப்பிட்டுபார்த்தால் உலகளவில் இன்றுவரை ஆலை விபத்தில் மக்கள் அதிகம் கொல்லபட்டது போபால் விஷயாவு விபத்து அல்லது படுகொலை சம்பவத்தில் மட்டும்தான்.
அது வெளிநாட்டு கம்பெனி, பெயர் யூனியன் கார்பைடு. எவரெடி பேட்டரிகள் செய்யும் கம்பெனிதான், அடுத்தாக பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என 1970ல் போபாலுக்கு வந்தார்கள். செவின் என்ற பூச்சிகொல்லி செய்யபோகிறோம் என்றார்கள், அந்த செவினின் அடிப்படை வேதிபொருள் மெத்தில் ஐசோ சயனைட் என்பது,
திரவ நிலையில் மகா கவனமாக கவனிக்கவேண்டிய விஷம் இது. விஷம் என்றால் உலகின் மொத்த அரசியல்வாதிகளை விட மகா மோசமானது.
1975 மற்றும் 1981ல் சில விபத்துக்கள சந்தித்த நிறுவணம் இது, அன்று அங்கு நியாமான கலெக்டர் அனுமதி மறுத்தார், ஆயினும் பன்னாட்டு கம்பெனி டெல்லியில் ஆடவேண்டிய விதத்தில் ஆடி உயிர்பெற்றது.
அன்று 1984 டிசம்பர் 2 நள்ளிரவு அந்த விஷ வாயு கசிந்தது, இதே நாள் உலகமே அதிர்ந்து நின்றது நிச்சயம் ஆலையின் கவன‌ கோளாறுதான்.
மணமும் நிறமுமில்லா மகா ஆபத்தான வாயு அது,. மிளகாய்பொடி சுவாசித்தது போன்ற உணர்வு நிலையில் மக்கள் இரும தொடங்கினார்கள்.
நிலை 10 நிமிடத்தில் மிகவும்"மோசமானது. மனிதர்கள்,ஆடு,மாடு,நாய்கள் என சகலமும் இறக்க தொடங்கின. உடனடியாக இறந்தது 3 ஆயிரம்பேர்!
ஆலை மெதுவாக விழித்து அதன்பின் அபாய சங்கினை ஒலிக்கசெய்தது, அப்பகுதி சுகாதரதுறை களத்தில் இறங்கி சொன்னது, கதவு ஜன்னலை பூட்டுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம், விளைவு சாவு எண்ணிக்கை இன்னும் 4 ஆயிரம் ஆனது.
அந்த இரவு நிச்சயம் கொலை இரவு, செத்து செத்து ஜனம் விழுந்தது, போபால் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்த பயணிகள் 250 பேர் செத்தனர், ஒரு பாராட்டதக்க அதிகாரி துருவே என்பவர் அந்நிலையிலும் எல்லா ரயில் நிலையத்திற்கும் தகவல் அனுப்பிவிட்டு அவ்விடத்திலே உயிர்விட்டார், கடமைக்கும் தியாகத்திற்கும் உன்னத எடுத்துகாட்டு.
ஆனால் மாநில முதல்வர் 20 கிமீ தள்ளி ஓடிவிட்டார், 5 மணிநேரம் கழித்து அரசு மக்களை மீட்க பேருந்துகளை இயக்கியது, மீட்கபட்டோர் அனைவரும் குலை உயிராயினர், காரணம் அந்த விஷகாற்றின் தாக்கம் அப்படி.
மூளையினை தாக்கி உடல் இயக்கத்தை பாதிக்கும், பலர் உயிர்பிணமாயினர், (இக்காலம் என்றால் மூளைச்சாவு என கசாப்பு ஆக்கியிருப்பார்கள்), ஏகபட்ட கரு கலைந்தது, கிட்னி செயலிழப்பு, கண் பார்வை பாதிப்பு, நுரையீரல் நோய் என பிழைத்தவர்களை விட செத்தவர்கள் பாக்கியசாலிகள்.
இவ்வளவு களபேரத்திலும் அன்றைய இந்திய அரசின் கவனம் அந்த நிறுவண தலைவர் ஆண்டர்சனை காப்பாற்றுவதில் இருந்தது, காதும் காதும் வைத்தார் போல அவர் ரகசியமாய் அமெரிக்கா அனுப்பபட்டார், அனுப்பி வைத்தது ராஜிவ்காந்தி!!!
விஷயம் பின்புதான் தெரிந்தது கேட்டால் சர்வதேசம், பொருளாதாரம் என என்னவோ சொன்னார்கள், பின்னர் அமெரிக்காவிடம் அவரை தாருங்கள் என்றார்கள்,
அவர்களா தருவார்கள்?
இலங்கையிடம் முன்னாள் புலி கே.பத்மநாபன், மலேசியாவிடம் குவாத்ரோச்சி என கெஞ்சிகொண்டிருந்த‌ நாட்டிற்கு அமெரிக்கா ஆண்டர்சனை கொடுக்குமா? அவர் வாழ்வாங்கு வாழ்ந்து சமீபத்தில்தான் இறந்தார்.
மொத்ததில் போபால் சம்பவத்தில் உடனடியாக‌ இறந்தவர்கள் 30 ஆயிரம் பேர், அதாவது அரசு கணக்குபடி என்றால் பார்த்துகொளுங்கள். உடல்நிலை பாதிக்கபட்டவர் பல்லாயிரம், 8 லட்சம் மக்களை அழித்த விபத்து இது, ஆடு மாடுகள் கணக்கு தனி, நிச்சயம் மறக்க கூடியது அல்ல போபால்.
இதில் மகா கொடுமையான விஷயம் என்னவென்றால், மாற்று மருந்துகொடுக்க பல நாடுகள் முன்வந்தன, எந்த நச்சுவாயு என சொன்னால் அதற்குரிய மருந்துகளை கொடுக்க தயார் என அவை பரிதவித்தன, ஆனால் ஆலை நிர்வாகம் வாய் திறக்கவே இல்லை. இதுதான் இந்தவிபத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பெரும் தலைகுனிவு அல்லது கையாலாகத தனம்.
இந்த விபத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு எப்படி இருந்தது? தண்டிக்கபட்டவர் யாருமில்லை, 1984 விலைவாசிபடி இந்தியா கோரிய நஷ்ட ஈடு 1500 கோடி 23 ஆண்டுகள் கழித்து கிடைத்தது 250 கோடி. எவ்வளவு பெரிய மோசடி இது?
போபால் பெரும் விபத்து, பெரும் அழிவு ஆனால் அதிலிருந்து இந்தியா கற்றுகொண்ட பாடம் என்ன? ஒரு மண்ணாங்காடியுமில்லை
அன்று போபால் விபத்திற்கு காரணமான அந்த மெத்தில் ஐசோ சயனைடு (எம்.ஐ.சி) எனபடும் வேதிபொருள் இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை என்றா நினைகின்றீர்கள்? நெஞ்சை பிடித்துகொள்ளுங்கள்.
கடலூர் தோல் தொழிற்சாலை, தூத்துக்குடி தொழிற்சாலை என தமிழகத்திலே அது பரவலாக மாட்டிற்கு வைக்கபடும் கழுநீர் போல பயன்படுத்தபட்டுகொண்டிருக்கின்றது, கசிந்தால் அவ்வளவுதான்.
ஒரு விஷவாயு இவ்வளவு பெரும் அழிவினை கொடுக்கமுடியும் என்பதை போபால் சொன்னது, இன்று அந்த ஆலை மூடபட்டிருக்கலாம், மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ வாழ்க்கைக்கு திரும்பலாம், இன்னும் 50 ஆண்டுகளில் அது அந்தவிபத்தினை மறந்தும் போகலாம்.
இந்த யூனியர் கார்படை அமெரிக்காவில் நடத்தமுடியாதா? விடமாட்டார்கள். இந்த கூடங்குள அணுவுலையினை ஜெர்மனியில்,சிங்கப்பூரில் நடததமுடியுமா? தொலைத்துவிடுவார்கள், பின் எப்படி நம் நாட்டில் சாத்தியம்?
மேல்நாட்டவரை பொறுத்தவரையில் நாமெல்லாம் பரிசோதனை கூடம், சந்தை அல்லது குப்பைதொட்டி. எல்லா சவால்களையும் இந்த அபலை கூட்டத்தின் மீது செய்துபார்க்கலாம், யாரையும் கொல்லலாம் யாரும் கேட்கமாட்டார்கள்.
நமக்காக விழிப்புணர்வு வரும் வரை இது நடந்துகொண்டுதான் இருக்கும், விழித்துகொண்டால் ஓடிவிடுவார்கள்.
அந்த யூனியன் கார்பைடு கம்பெனி என்ன ஆனது? ஒன்றும் ஆகவில்லை கெட்டுவிட்ட பெயரினை சமார்த்தியமாக டவ் கம்பெனியுடன் கூட்டுசேர்ந்து மறைத்துவிட்டார்கள், இன்றும் டவ் கம்பெனியின் பொருட்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் விற்பனை செய்யபட்டுகொண்டுதான் இருக்கின்றது.
இன்னும் இந்தியா பாதுகாப்பு விஷயங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கடுமையாக முன்னேறவேண்டும். மக்கள்தொகை மிகுந்த நாடு சிறு விபத்தும் ஏராளமான உயிர்களை கொல்லும் சாத்தியம் உண்டு.
5 லட்சம் மக்களை நிர்மூலமாக்கிய அந்த டிசம்பர் 2 நள்ளிரவு உயிர்பலி திரும்ப, திரும்ப சொல்வது அதுதான்.
பாதுகாப்பு விஷய்ங்களிலும், மீட்புபணிகளிலும்,முன் எச்சரிக்கை நடவடிக்கையிலும், பேரிடர் மீட்புகளிலும் இந்தியா முன்னேறவேண்டியது நிரம்ப உண்டு, அப்படி முன்னேறிய பின் இம்மாதிரி திட்டங்களை பரிசீலிக்கலாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் ஆபத்தான விஷயங்களை அனுமதிப்பது ராஜநாகத்தோடு விளையாடுவதற்கு சமம்,
ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால் , பாம்பினை மடக்கும் வித்தை தெரிந்திருந்தாலும் என்ன பயன்?
சுட்டவடை.(காப்பி&பேஸ்ட் பதிவு)
Image may contain: sky, outdoor and text
Ilango

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக