புதன், 30 டிசம்பர், 2020

அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல் பங்கேற்காது!

நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலை!

மஞ்சள் கடுதாசி கொடுக்க சுனில் மிட்டல் திட்டம்!

-------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------

2021 மார்ச் 31ல் அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் 

நடைபெற உள்ளது. இதில் பல்வேறு frequency உள்ள 

அலைக்கற்றைகள், 5ஜி உட்பட, ஏலம் விடப்படுகின்றன.


700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz,

2500 MHz ஆகிய frequency கொண்ட அலைக்கற்றைகள் 

ஏலம் விடப்படும். அதாவது 2G, 3G, 4G அலைக்கற்றைகளும் 

ஏலம் விடப்படும். 


இந்த ஏலத்தில் 700 MHz அதிர்வெண் கொண்ட 

அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை 

என்று ஏர்டெல்லின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

700 MHz அலைக்கற்றையின் விலையை 43 சதம் குறைத்தது 

டிராய் அமைப்பு. குறைக்கப்பட்ட பின்னர் விலை 

ரூ 6568 per MHz.


ஒரு மெகா ஹெர்ட்ஸ் என்று உதிரியாக வாங்க முடியாது.

குறைந்த பட்சம் 5 MHz கொண்ட ஒரு தொகுப்பாகத்தான் 

வாங்க இயலும். ஒரு தொகுப்பின் விலை (price per block)

ரூ 32,840 கோடி. 700 MHz அலைக்கற்றையானது 4ஜிக்கும் 

ஓரளவு 5ஜிக்கும் உகந்தது. இருப்பினும் குறைந்தபட்சம் 

ரூ 32,840 கோடி செலவழிக்க இயலாத நிலையில், இந்த 

700 MHz அலைக்கற்றையின் ஏலத்தில் பங்கேற்கப் 

போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது ஏர்டெல்.


இது ஏர்டெல்லின் வறுமை நிலையை வெளிச்சம் 

போட்டுக் காட்டுகிறது. ஒரு நிறுவனத்தால் முக்கியமான 

அலைக்கற்றையை வாங்க முடியவில்லை என்பது 

ஒரு குடும்பத் தலைவரால் வீட்டுக்கு அரிசி வாங்க 

முடியவில்லை என்பதைப் போன்றது.


30 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்டெல் 

வைத்திருக்கும் அலைக்கற்றையில் பெரும்பகுதி 

1800 MHz அதிர்வெண்ணில் உள்ள அலைக்கற்றையே. 

வரும் ஜூலை 2021ல் இந்தியாவின் 14 மாநிலங்களில் 

(Telecom circles) ஏர்டெல்லின் உரிமம் முடிவுக்கு வருகிறது.

இந்த உரிமங்களைப் புதுப்பிக்கவே ஏர்டெல்லுக்கு   

குறைந்தது ரூ 13,000 கோடி செலவாகும் என்று ஒரு 

மதிப்பீடு கூறுகிறது. 


இருப்பினும், இந்த 13,000 கோடி  ரூபாயைக் கூட ஏர்டெல் 

செலவழிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே மேற்கூறிய 

14 மாநிலங்களிலும் உரிமம் காலாவதியான அலைக்

கற்றையைப் புதுப்பிக்க ஏர்டெல்  தயாராக இல்லை என்று 

தெரிய வருகிறது. உரிமத்தைப் புதுப்பித்து புதிதாக

அலைக்கற்றை வாங்காமல், கைவசம் இருக்கும் வேறு 

அதிர்வெண் கொண்ட அலைக்கற்றையைக் கொண்டு 

ஒப்பேத்தலாம் என்று ஏர்டெல் முடிவு செய்துள்ளது.


ஆக, ஏர்டெல்லின் நிதி நெருக்கடியை இனிமேலும் 

திரை போட்டு மறைக்க இயலாது. ஒரு காலத்தில் 

மொபைல் சேவையில் சக்கரவர்த்தியாக இருந்த 

ஏர்டெல் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் 

சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கிறது.   


குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் 

என்ற தமிழ் மூதுரை ஏர்டெல்லுக்கு கச்சிதமாகப் 

பொருந்துகிறது.


BSNLஆ? ஏர்டெல்லா? எது மோசமான நிலையில் 

இருக்கிறது என்று பார்த்தால், படு மோசமான 

நிலையில் ஏர்டெல்  இருக்கிறது. எந்த நேரமும் 

சுனில் மிட்டல் மஞ்சள் கடுதாசி கொடுக்கலாம் 

என்ற நிலைமை உள்ளது. ஏர்டெல்லோடு ஒப்பிடும்போது 

BSNLன் நிலைமை ஆயிரம் மடங்கு மேல். இதுதான் 

டெலிகாம் இண்டஸ்டிரியில் இன்றைய யதார்த்தம்!


அழுகை நிற்கவில்லை சுனில் மிட்டலுக்கு! தேம்பித் 

தேம்பி அழுது கொண்டிருக்கிறார். நாளை டெல்லி 

செல்கிறேன்! எதற்கு? ஆறுதல் கூறி சுனில் மிட்டலின் 

அழுகையை நிறுத்தத்தான்! விபரீத முடிவு ஏதேனும் 

எடுத்துத் தொலைக்காமல் அவரைத் தடுக்கத்தான்!

******************************************************888

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக