வியாழன், 17 டிசம்பர், 2020

 வாக்ய பஞ்சாங்கம் தவறு என்று விஞ்ஞானம் மூலம் இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வரும் 2020 டிசம்பர் மாசம் 21ம் தேதி குருவும் ஷனியும் 0.1 டிகிரிக்குள் மிகவும் நெருக்கமாக இணைகின்றன என்று சொல்கிறார்கள்.

கடந்த நவம்பர் மாசம் குரு மகரத்திற்கு பெயர்ச்சியாகி இப்போது மகரத்தில் 5 டிகிரியை கடந்துவிட்டார். வாக்ய பஞ்சங்கத்தினர் ஷனி டிசம்பர் 27ம் தேதி தான் தனுஷில் இருந்து மகரத்திற்கு பெயர்ச்சி ஆகும் என்று சொல்கிறார்கள்.
பிறகு எப்படி டிசம்பர் 21ம் தேதி தனுஷில் உள்ள ஷனி மகரத்தில் 5 டிகிரி கடந்து 276 டிகிரியில் உள்ள குருவை மிகவும் நெருக்கமாக 0.1 டிகிரிக்குள் நெருக்கும்?? எனவே வாக்ய பஞ்சாங்கப்படி ஷனி பெயர்ச்சி தவறு.
திருக்கணிதப்படி 2020ம் வருஷம் ஜனவரி 24ம் தேதி ஷனி பெயர்ச்சி நடந்திருந்தால் மட்டுமே விஞ்ஞானப்படி இந்த டிசம்பர் மாசம் 21ம் தேதி மகரத்தில் 276 டிகிரியில் ஷனியும் குருவும் 0.1 டிகிரிக்குள் மகரத்தில் நெருக்கமாக இணைய முடியம். எனவே திருக்கணித பஞ்சாங்க முறை தான் சரி என்று நிரூபணம் ஆகுகிறது.
வாக்ய பஞ்சாங்கம் தவறு என்று தெரிந்து தான் மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற மாநில கோவில்கள் வாக்ய பஞ்சாங்கத்தை தவிர்த்துவிட்டு திருக்கணிதத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் மட்டும் தான் இதுபற்றி விழிப்புணர்வு இல்லாததால் தமிழக கோவில்களில் இன்னும் வாக்ய பஞ்சாங்கம் நடைமுறையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக