செவ்வாய், 29 டிசம்பர், 2020

5G அலைக்கற்றையும் 5G தொழில்நுட்பமும்! 

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் 

34 நாடுகளில் உள்ள 378 நகரங்களில் 5ஜி மொபைல் 

சேவை உள்ளது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.   


இந்தியாவில் 5ஜி அலைக்கற்றையின் ஏலம் அறிவிக்கப் 

பட்டு, கொரோனா காரணமாக ரத்து செய்யப் பட்டது.

தற்போது 2021 மார்ச் மாதவாக்கில் 5ஜி ஏலம் நடைபெறக் 

கூடும் என்று தெரிகிறது. ஏலத்தேதி இன்னும் அறிவிக்கப் 

படவில்லை. ஏலம் விடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட 

5G அலைக்கற்றையின் அளவு = 175 MHz. இது 3300-3600 MHz

frequencyயில் அமையும். விலையைப் பொறுத்த மட்டில்,

ஒரு மெகா ஹெர்ட்ஸ் விலை (price per MHz) = ரூ 492 கோடி.


5ஜி அலைக்கற்றைக்கான கருவிகளின் பரிசோதனை 

(equipment trial) 2020 மார்ச்சில் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால் நடைபெறவில்லை.


தற்போது 5ஜி பரிசோதனைகளுக்கு உள்துறை அமைச்சகம் 

இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்தியாவில் 5ஜி மாநாடு 

(virtual summit) 2021 பெப்ரவரியில் நடைபெற உள்ளது.

அறிவித்தபடி 2021 மார்ச்சில் 5ஜி ஏலம் நடைபெறுமானால் 

ஏலம் எடுத்த நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு 

(For service roll out) 2023 அல்லது 2024 ஆகிவிடும். 

இதுதான் இந்தியாவில் 5ஜியின் நிலைமை.


இயல்பாகவும் சுமுகமாகவும் 3ஜியில் இருந்து 4ஜி போக 

முடிந்தது. ஆனால் 4ஜியில் இருந்து 5ஜி போவது அவ்வளவு 

எளிதாகவோ சுமுகமானதாகவோ இருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் இது சற்றுக் கடினமானது.


5ஜி வந்தாலும் அதற்கு முந்திய தலைமுறை தொழில்நுட்பம் 

காலாவதி ஆகி விடாது. 4ஜி LTE எனப்படும் அலைக்கற்றை

5ஜிக்கு முந்தியது. இது 2008ல் அறிமுகமானது. இந்தியாவில் 

இது தொடர்ந்து நீடிக்கும். குறைந்தது 10 ஆண்டுகளுக்கேனும் 

நீடிக்கும். ஐஓடி எனப்படும் Internet of Thingsக்கு 4ஜி LTE 

பயன்படுகிறது. இந்த நிலை தொடரும். எனவே 4ஜி LTEக்கு 

sunsetting இருக்காது. (இந்தியாவில் 2ஜிக்கே இன்னும் 

sunsetting நிகழாதபோது, 3ஜி, 4ஜி, LTE ஆகியவை 

சிரஞ்சீவியாக வாழும்). 


5ஜிக்கான மொபைல் கருவிகளை, ஐஓடி கருவிகளைத் 

தயாரிக்கும் நிறுவனங்கள்,  பழைய தலைமுறை 

அலைக்கற்றையுடனும் கருவிகள் செயல்படுமாறு 

(with backward compatibility) தயாரிக்க வேண்டும். இந்திய 

அரசானது மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 

இதை ஒரு நிபந்தனையாக ஆக்க வேண்டும். ஆனால் 

அதற்கான தேவை இருக்காது.


இந்திய மொபைல் சந்தையின் நாடியைப் பிடித்துப் 

பார்த்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள்

backward compatibility கொண்ட கருவிகளையே 

தயாரிப்பார்கள்.  


12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில் மின்காந்த 

அலைக்கற்றையின் (Electromagnetic spectrum) படம் 

உள்ளது. (Spectrum என்பதற்கு அலைக்கற்றை என்ற 

மொழிபெயர்ப்பு சரியில்லை). அது தேர்வுக்கு உரியதல்ல 

என்ற குறிப்புடன் அப்படம் புத்தகத்தில் உள்ளது.

ஒவ்வொருவரும் இந்த spectrum படத்தைப் பார்க்க 

வேண்டும்; படிக்க வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும். 


5ஜி அலைக்கற்றையின் frequency 30 GHz முதல் 300 GHz 

வரையிலானது. இது EHF (Extremely High Frequency) வகையைச் 

சேர்ந்தது. அலைநீளம் (wavelength) 1 மில்லி மீட்டர் முதல் 

10 மில்லி மீட்டர் வரை. (நன்கு கவனிக்கவும்: மில்லி மீட்டர்).

இந்த வகை அலைக்கற்றை மில்லி மீட்டர் அலைகள் 

(millimeter waves) எனப்படுகிறது. Low band, Mid band, High band

ஆகிய மூன்றில் 24 GHz முதல் 48 GHz வரையிலானது

High band ஆகும்.   


தற்போது மொபைல்களில் பயன்படும் மின்காந்த 

அலைகள்  ரேடியோ அலைகள் என்னும் வகையைச் 

சேர்ந்தவை. இவை தீங்கு விளைவிக்காத Non ionising 

radiation ஆகும். ஸ்மார்ட் போன்களில் பயன்படும் 

மின்காந்த அலைகளின் அலைநீளம் சென்டி மீட்டரில்

உள்ளது. இதற்கு மாறாக 5ஜியில் மில்லி மீட்டர் 

அலைகள் பயன்படுகின்றன. அதிகமான bandwidth 

அதாவது அதிகமான data carrying capacityயை மில்லி மீட்டர் 

அலைகள் மூலம் பெற முடிகிறது.


மில்லி மீட்டர் அலைகளின் குறைபாடு என்னவெனில் 

கட்டிடங்களை ஊடுருவிச் செல்லும் திறன் இவற்றுக்குக் 

குறைவு (unable to penetrate structures and other obstacles).  மேலும் 

மழை பெய்யும்போது இவற்றின் சிக்கனல்கள் மழையில் 

கரைந்து விடும். அதாவது மழை இந்த சிக்கனல்களை 

உட்கிரகித்து விடும். அது போலவே இலை தழைகளும் 

இவற்றின் சிக்கனல்களை உறிஞ்சி விடும்.


தற்போது உள்ள பெரும் செலவு பிடிக்கக் கூடிய 

Base stations 5ஜியின் மில்லி மீட்டர் அலைகளுக்கு 

 தேவை இல்லை. குறைந்த செலவில் சிறிய அளவிலான 

Base stationsஐக் கட்டினால் போதும். இது capexஐக் குறைக்கும்.


மேலும் மில்லி மீட்டர் அலைகளில் சுணக்கம் குறைவு.

சுணக்கம் என்பதை ஒரு அறிவியல் கலைச்சொல்லாக 

இங்கு பயன்படுத்துகிறேன். Latency என்ற ஆங்கிலச் 

சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் சுணக்கம் ஆகும்.


முதலில் latency என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

ஒரு நெட்ஒர்க்கில் ஒரு இடத்துக்கு அனுப்பப் பட்ட 

சிக்னலானது அந்த இடத்துக்குச் சென்று விட்டு மீண்டும் 

புறப்பட்ட இடத்துக்கு வருவதற்கான (for a round trip) கால 

அளவு latency எனப்படும். Latency = சுணக்கம்.

    

Latencyயானது மில்லி செகண்டில் அளக்கப்படும்.

3ஜி, 4ஜி, 4G LTE ஆகியவற்றின் லேட்டன்சி 80 மில்லி செகண்ட்,

100 மில்லி செகண்ட் என்றெல்லாம் இருக்கும்போது,

5ஜியின் லேட்டன்சி 10 மில்லி செகண்ட் என்ற அளவில் 

இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது 

சிக்கனல்கள் அதிவிரைவாக செருமிடத்துக்குச் சென்று 

சேரும் என்று பொருள்.


ஐரோப்பாவின் சில நாடுகளில் விஞ்ஞானிகளும் 

மருத்துவர்களும் பொது மக்களும் இணைந்து 5ஜிக்கு 

எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். 5ஜி அலைகளில் 

இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது Non ionising radiation

என்ற வகையைச் சேர்ந்ததாக இருந்த போதிலும் 

அந்த அலைகள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை 

என்றும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகப் படுத்துவன 

என்றும் எனவே 5ஜியைக் கைவிட வேண்டும் என்றும் 

மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.


ஜெர்மனியின் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானி 

சபைன் ஹோசன்பெடர் (Sabine Hossenfelder) 5ஜியின் 

மில்லி மீட்டர் அலைகள் குறித்தும் அவை தீங்கு விளைவிக்கக் 

கூடும் என்றும்  கருத்துத் தெரிவித்துள்ளார். 

சபைன் ஹோசன்பெடர் குவாண்டம் ஈர்ப்புவிசை 

(quantum gravity) ஆராய்ச்சியாளர். உலக அளவில் உள்ள 

பெண் விஞ்ஞானிகளில் உச்ச  இடத்தில் உள்ள வெகு 

சிலரில் இவரும் ஒருவர். இந்தக் கட்டுரை மூலம் 

நமது வாசகர்களுக்கு சபைன் ஹோசன்பெடரை அறிமுகம் 

செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவரைப் பற்றித் 

தெரியாதவர்களை முட்டாள்கள் என்றே கருதுகின்றனர்

இயற்பியல் கற்றவர்கள். 


இறுதியாக, 5ஜி குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை 

இது. கடைசிக் கட்டுரையும் இதுதான். ஏனெனில் 

மேற்கொண்டும் 5ஜி குறித்து எழுத நான் விரும்பவில்லை. 

நான் எழுதாவிட்டால் வேறு எவரும் எழுதப் போவதில்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் எழுதலாம் 

அல்லவா! ஆனால் கடவுள் இல்லை என்னும்போது 

இன்னொரு கட்டுரைக்கு எங்கு போவது! நிற்க.


வாசகர்கள் இது போன்ற அறிவியல் கட்டுரைகளைப் 

படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும். இக்கட்டுரைகளை 

ஆதரிக்க வேண்டும். வாசகர்கள் ஆதரிக்கவில்லை என்றால் 

இது போன்ற அறிவியல் கட்டுரைகளை எழுதி முகநூலில் 

வெளியிடுவதை நான் நிறுத்தி விடுவேன். நீங்கள் 

படிக்கவில்லை என்றால் எனக்கு நஷ்டமில்லை.

**********************************************************      


           

 


       

          

         

 


   தெரியாமல் இருப்பது  மடமை என்றே கருதப் படுகிறது. 


அறிவியலைத் தமிழில் எழுதுபவர்களை சோர்வடையச் 

செய்வது சமூகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். 

  


வருகிறது 5ஜி! வேகம் பேய்த்தனமானது! 


 


       


 


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக