வியாழன், 31 டிசம்பர், 2020

 மனிதர்களுக்கு குடியுரிமை இல்லை!

ஆனால் ஒரு ரோபோவுக்கு குடியுரிமை கிடைத்தது!

--------------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------------------

ஒரு நாட்டின் குடிமகன் என்பதற்கு அடையாளமாக 

குடியுரிமை (citizenship) வழங்கப் படுகிறது. குடியுரிமை 

கிடைக்காமல் அவதிப் படுவோர் பலர்.


ஆனால் ஒரு எந்திரத்துக்கு, அதாவது ஒரு ரோபோவுக்கு 

ஒரு நாடு குடியுரிமை வழங்கி உள்ளது. நம்புவதற்கு

கஷ்டமாக உள்ளதா? ஆனால் இது உண்மை.


குடியுரிமை வழங்கிய நாடு சவூதி அரேபியா. 

குடியுரிமை வழங்கியது ஒரு ரோபோவுக்கு.

அந்த ரோபோவின் பெயர் சோபியா (Sophia).

2017 அக்டோபரில் குடியுரிமை வழங்கப் பட்டது.  


இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

குடியுரிமை வழங்கும் அளவுக்கு அந்த ரோபோ 

மனிதனை ஓத்திருக்கிறதா?

அப்படியானால் அந்த ரோபோவின் IQ என்ன?


ரோபோக்களுக்கு IQ கிடையாது. மனிதனைப் போலவே 

நடந்து கொள்வதுதான் ரோபோ என்ற போதிலும் 

ரோபோக்களுக்கு முறையான IQ கிடையாது. 


காரி காஸ்பரோவை Deep Blue என்னும்  கணினி சதுரங்கத்தில் 

தோற்கடித்தது. இதனால் அந்தக் கணினி காஸ்பரோவின் 

IQவைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல இயலுமா?    


IQ என்பது ஒற்றை அம்சம் கொண்டதல்ல. 

அது அகல்விரிவானது; மற்றும் ஆழமானது 

(comprehensive and deep). அத்தகைய  IQவை உடைய 

ரோபோக்களை இதுவரை தயாரிக்க இயலவில்லை.    


சோபியா பெப்ரவரி 14, 2016ல் பிறந்தது. இதை உருவாக்கியது 

ஹாங்காங் நிறுவனமான ஹான்சன் ரோபோடிக்ஸ் 

(Hansan Robotics). இந்த ரோபோவை உலகெங்கும் உள்ள 

பத்திரிகையாளர்கள் நேர்காணல் செய்தனர்.


எனினும் குடியுரிமை வழங்கும் அளவுக்கு சோபியா 

மனித அறிவைப் பெற்றதல்ல.


ஆனால் நமது தமிழ்நாட்டில் உள்ள பலரை விட 

சோபியாவின் அறிவு அதிகம். இது மறுக்க முடியாத 

உண்மை.

--------------------------------------------------------------------------------------     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக