சனி, 25 நவம்பர், 2017

(1) காரல் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாடு
காலாவதி ஆகி விட்டதா? உண்மை என்ன?
-------------------------------------------------------------------------------
1) உபரி மதிப்புக் கோட்பாடு (theory of surplus value)
முதலாளியப் பொருள் உற்பத்தி முறை நிலவும்
ஒரு சமூகத்தில் நிலவும் கோட்பாடு.

2) முதலாளியப் பொருள் உற்பத்தி முறை நீடிக்கும்
வரை, உபரி மதிப்புக் கோட்பாடும் நீடிக்கும்.

3) ரிக்கார்டோவின் வாரக் கோட்பாடு இன்றளவும்
நீடிக்கிறதா? அல்லது காலாவதி ஆகி விட்டதா?
காலாவதி ஆகவில்லை என்பது தெளிவு.

4) இதைப் போலவே உபரி மதிப்புக் கோட்பாடும்
காலாவதி ஆகவில்லை; நீடிக்கிறது இதுவே உண்மை.  

5) என்றாலும், உபரி மதிப்பு காலாவதி ஆகி விட்டது
என்ற குரல்கள் இன்று ஓங்கி ஒலிக்கின்றன. இவற்றில்
தர்க்க வலிமையே இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.
எளிய தர்க்கத்துடன்தான் இந்த எதிர்ப்புக் குரல்கள்
ஒலிக்கின்றன. அசுரத் தனமான தொழில்நுட்ப
வளர்ச்சியும், சர்வ வியாபகம் ஆகி வருகின்ற
கணினிமயமும் மார்க்சிய எதிர்ப்பாளர்களால்
சுட்டிக் காட்டப் படுகின்றன.

6) எனவே மார்க்சிஸ்டுகள் இவற்றுக்குப்
பதிலளிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
தெரியாத கேள்வியை சாய்ஸில் விடும் பள்ளி
மாணவன் போலநடந்து கொள்கிறவர்கள்
மார்க்சிஸ்டுகள் அல்லர். ஏனெனில் இது
compulsory question. விடையளிக்காவிட்டால்
மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே மார்க்சியம்
இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

7) மூல ஆசான்கள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின்
ஆகியோரின் நூல்களில், எதிர் வாதங்களுக்கு
பதிலளித்த நூல்களே (polemical writings) மிகுதி!

8) இங்கு பொருளாதாரம் பற்றிய ஒரு முக்கியமான
விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதார விதிகள் யாவும் இயற்பியல் விதிகள்
போன்றோ  கணித விதிகள் போன்றோ முற்றிலும்
துல்லியமானவையாக இருப்பதில்லை. மேலும்
இயற்பியல் விதிகளுக்கு உரிய பிரபஞ்சத் தன்மை
பொருளியல் விதிகளுக்கு இல்லை.

9) ஆயின், பொருளியல் விதிகள் எப்படிப்பட்டவை?
அவை வெறுமனே ஒரு போக்கைச் சுட்டிக் காட்டுபவை.
Economic laws are hypothetical tendencies! Just that is all.
எங்கும் எதிலும் எப்போதும் எந்தச் சூழலுக்கும்
பொருந்தும் பிரபஞ்சத்தன்மை உடைய (universal)
முற்றிலும் சரியான விதி எதுவும் பொருளியலில்
கிடையாது. இது பொருளியல் கொள்கைகள்
அனைத்துக்கும் பொருந்தும்.
Every law of economics has its own limitations.

10) இந்தச் சூழலை மனதில் கொண்டுதான் உபரி
மதிப்புக் கோட்பாடு பற்றிய விமர்சனத்தைக்
கையாள வேண்டும்.

11) இந்தப் பீடிகையுடன் உபரி மதிப்புக் கோட்பாட்டின்
செல்லுபடித் தன்மை என்ற பிரதான விஷ்யத்துக்குள்
செல்லலாம். (கட்டுரை அடுத்த பதிவில்; இன்று இரவில்
வெளியாகும்)
************************************************************



    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக