சனி, 25 நவம்பர், 2017

அன்றே கூறினார் ஆர்ய பட்டர்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ஆர்ய பட்டர் கூறிய piன் மதிப்பு = 3.1416.
இது மூன்று தசம இடங்கள் வரை சரியாக உள்ளது.
pi = 3.14159265 என்று முடிவுறாமல் செல்லும்.

ஆர்ய பட்டரின் பின்வரும் சூத்திரம் piன் மதிப்பை
கணக்கிடுவது என்று கூறுகிறது.

1) 4 என்ற எண்ணைக் கருதுக. (4)
2) இதை 100உடன் கூட்டுக.(104)
3) இதை 8ஆல் பெருக்குக. (104x8= 832)
4) இதை 62000 என்ற எண்ணுடன் கூட்டுக. (832+62000=62832)
5) இந்த 62832 என்பது விட்டத்தின் அளவு 20000 கொண்ட
ஒரு வட்டத்தின் சுற்றளவு ஆகும்.
( pi x 20000 = 62832)
6) எனவே pi = 62832 divided by 20000
= 3.1416/

ஆர்ய பட்டர் கூறிய மதிப்பு = 3.1416
நவீன மதிப்பு = 3.1415

ஆர்ய பட்டர் கூறியது கி.பி 499இல். தாம் கூறிய மதிப்பு
தோராயமானதே என்றும் அவர் கூறியிருந்தார்.
இச்செய்தி அவரின் ஆர்ய பட்டியம் என்ற நூலில் உள்ளது.
*****************************************************    

தை மகளின் கை விரல்களை
வெண்டைப்பிஞ்சுகள் என
மயங்கினான் மாமன்னன்.
pi = 3.14159265.....
இது ஒரு நினைவுகூரும் வாக்கியம்.

இவ்வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும்
எத்தனை எழுத்து உள்ளதோ அதைக் கொண்டு
pi ன் மதிப்பை நினைவு கூரலாம். இது நல்ல அழகான
வாக்கியம்தான். என்றாலும் வேறு ஒரு வாக்கியத்தை
உருவாக்க முயல்கிறேன். காரணம், தமிழ் தெரியாத பல
மூதேவிகள் "வெண்டைப்பிஞ்சுகள்" என்று எழுதுவதே
சரி என்று அறியாமல் வெண்டை என்றும் பிஞ்சு என்றும்
பிரித்து விட்டால் பிழை ஏற்படும். இதைத் தவிர்க்கவே
வேறு ஒரு வாக்கியத்தை உருவாக்க விழைகிறேன்.

நுகர்வுக் கலாச்சாரத்தின் தந்தை ஓஷோ!
உதிரி விடலைகளின் ஆசான் ஓஷோ!
--------------------------------------------------------------------------.
ஓஷோ அறிவாளிதான். மறுப்பதற்கில்லை.
ஒரு அறிவாளிதான் ஒரு theoreticianஆக இருக்க
முடியும். அவருடைய தியரி என்ன
என்பதும் அது சமூகத்துக்கு பயனுள்ளதா, சமூகத்தை
மேம்படுத்துமா என்றுமே பார்க்க வேண்டும்.

ஓஷோ இறந்து விட்டார். அவர் இறந்து 25 ஆண்டுகள்
ஆகின்றன.மிகப்பெரும் நுகர்வுக் கலாச்சாரத்தை
ஓஷோ சென்ற இடமெல்லாம் விதைத்தார்.
காம நுகர்வே பேரின்பம், பெருங்கடமை என்றார்.
ஆடம்பர வாழ்வே லட்சியம் என்கிறார்.
பிரம்மாணடமான ஆடம்பரத்துடன் வாழ்ந்தார்.
இந்தியாவின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடித்தளம்
இட்டவர் ஓஷோவே. எனவே அவர்தான் இந்தியாவின்
வெறுக்கத்தக்க நுகர்வுக் கலாச்சராத்தின் தந்தை.


காந்தியத்துக்கு நேர் எதிரானது ஓஷோவின் சித்தாந்தம்.
மகாத்மா காந்தி நுகர்வு மறுப்பைப் போதித்தார்.
தாம் போதித்தபடி வாழ்ந்து காட்டினார். சுதந்திரம்
அடைந்த பின்னரும் ஒரு தலைமுறை முழுவதுமே
இந்திய மக்களை பொறுத்தமட்டில், நுகர்வு மறுப்புச்
சிந்தனையைப் பற்றி ஒழுகியது. மகாத்மா காந்தியின்
இந்த நுகர்வு மறுப்புச் சிந்தனையின் மீது முதன் முதலில் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறையிலும்
(in theory and practice) கத்தியைப் பாய்ச்சியவர் ஓஷோவே.

காந்தியைப் போலவே மாவோவும் தீவிரமான
நுகர்வு மறுப்பாளர். நுகர்வு மறுப்புச் சிந்தனையை
மொத்த சீனத்தின் தேசியக் கோட்பாட்டாக
வளர்த்து எடுத்தவர் மாவோ. ஓஷோ மார்க்சியத்தை
எதிர்த்தார். ஆனால் மாவோவின் கம்யூன்
முறையிலான கூட்டு வாழ்க்கையை அறிமுகம் செய்தார்.
 
மாவோ பாணியில் ஓஷோ கம்யூன்களை
ஏற்படுத்தியதன் நோக்கம் கூட்டுக்கலவியை
மேற்கொள்ளவே. கலவிக் கூச்சம், கலவித்தடைகள்
ஆகியவற்றைத் தகர்த்து எறிந்தார் ஓஷோ. இதுவே
அவரின் வாழ்நாள் சாதனை.

இதுதான் தனது சித்தாந்தம் என்று அடையாளம்
காட்ட இயலாத அளவுக்கு,  முரண்பட்ட பல்வேறு
தத்துவங்களில் இருந்து அவற்றின் சில பல
கூறுகளை எடுத்துக் கொண்டு  ஓஷோ தமது சொந்த சித்தாந்தத்தை உருவாக்கினார். இதனால்
இதுதான் அவரின் கொள்கை என்று
திட்டவட்டமாக எந்த ஒன்றையும் சுட்ட முடியாமல்
போனது. ஓஷோவின் சித்தாந்தமானது பல்வேறு
தத்துவங்களின் காக்டெயில் ஆகும்.

இதன் காரணமாக, எந்த ஒரு தத்துவத்தையும்
முறையாகப் பயின்று, அதற்கு தம்மை ஒப்புக்
கொடுக்க விரும்பாத உதிரி விடலைகளின்
கூட்டம் ஓஷோவைத் தலையில் வைத்துக்
கொண்டாடியது. இன்றும் கொண்டாடி வருகிறது.
*******************************************************


சோவியத் புரட்சிக் கவிஞன்
மாயா காவ்ஸ்கி தற்கொலை செய்து இறந்தார்!
-----------------------------------------------------------------------------------








 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக