செவ்வாய், 7 நவம்பர், 2017

பார்க்க வேண்டிய ஓர் அறிவியல் சினிமா!
2010: ஒடிசி இரண்டு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
ஆர்தர் கிளார்க் ஓர் அறிவியல் புனைவு எழுத்தாளர்
(science fiction writer). சில அணுக்களுக்கு முன்பு இவர்
இறந்து விட்டார். இவர் புனைவாக எழுதிய பல
விஷயங்கள் அறிவியலின் வளர்ச்சியில்
உண்மையாகி விட்டன. இவரின் ஒரு நாவல்
"2010: Odyssey Two".

இந்த நாவலைப் பின்பற்றி ஒரு ஆங்கிலத்
திரைப்படம் எடுக்கப் பட்டது. அதன் பெயர்:
"2010: The year we make contact" ஆகும். இப்படத்தை
இயக்கியவர் Peter Hyams.

படத்தின் கதை:
----------------------------
2001இல் அமெரிக்கா "டிஸ்கவரி ஒன்று" என்ற
விண்கலத்தை வியாழனுக்கு அனுப்பியது. அதன்
கதி என்னவென்று தெரியவில்லை. அதில் சென்ற விண்வெளியாளர்களில் (astronauts) 4 பேர் இறந்து
விட்டனர் என்று செய்தி கிடைக்கிறது.

எனவே அதைக் கண்டறிந்து மீட்க அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தனித்தனியாக
விண்கலன்களை அனுப்புகின்றன. வியாழனை
விண்கலன் அடைந்தபோது, வியாழனில் உயிர்
இருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
இப்படிப் போகிறது கதை. மீதியை வெள்ளித்
திரையில் காணவும்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இப்படத்தைப்
பார்க்கும்படி பரிந்துரைக்கிறது. இதுபோன்ற
படங்களை பார்ப்பதன் மூலமும், விண்வெளி
குறித்த சில தகவல்களை அறிந்து கொள்ள
முடியும். தோராயமாகவேனும் விண்வெளி
அறிவியல் (space science) குறித்து ஒரு புரிதல்
கிடைக்கும். சிலருக்கு இது அறிவியலில்
ஆர்வத்தைத் தூண்டக் கூடும்.

அறிவியல் புத்தக வாசிப்புக்குத் தேவையான
ஒரு பின்னணி இப்படத்தைப் பார்ப்பதன் மூலம்
கிடைக்கும். எல்லாவற்றையும் எழுதிப் புரிய
வைக்க முடியாது.

எனவே படத்தைப் பார்க்க வேண்டுகிறோம்.
*********************************************************       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக