நான் thermodynamicsல் brownian motion
படித்துக் கொண்டிருந்தபோது லெனின் வந்தார். வந்து
என்ன படிக்கிறாய் என்றார். physics என்றேன்.
முட்டாளே அதுவும் மார்க்சியம் தாண்டா என்றார்.
மைனஸ் 1ன் வர்க்க மூலம் ஒரு முரண்பாடு
என்கிறார் எங்கல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு-ல்.
இதைப் படிக்காமலோ புரியாமலோ
முரண்பாட்டை எப்படிக் கையாள முடியும்?
மார்க்சியத் தத்துவத்தை பொருள்முதல்வாதத்தை
அறிந்து கொள்ள மிக முக்கியமான நூல் இது.
இந்த நூலைப் பற்றி, "இது ஒரு என்சைக்ளோபீடியா
போன்றது" என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். (பார்க்க:
மார்க்சுக்கு எங்கல்ஸ் எழுதிய கடிதம் 1878ல் ஜெர்மன்
மொழியில் நூல் வெளியானதும் மார்க்சுக்கு எங்கல்ஸ்
எழுதிய கடிதம். இந்த நூலைப் படிக்காமலும்
புரியாமலும் மார்க்சியத் தத்துவத்தைப் புரிந்து
கொள்ள முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக