சனி, 25 நவம்பர், 2017

அத்வைதத்தின் நவீன வடிவங்களும்
ஆதிசங்கரரின் புதிய அவதாரங்களும்!
-------------------------------------------------------------------------
முன்குறிப்பு: மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற
வெளிவரவிருக்கும் நூலில் இருந்து ஒரு கட்டுரை இது!
-----------------------------------------------------------------------------------------------------
1970களில் இந்தியாவில் இரண்டு ஆன்மிகவாதிகள்
மிகவும் பிரபலம். ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (1895-1986).
இன்னொருவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990).

இருவரில் ரஜனீஷ் இளையவர். இருவருமே பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் பிறந்தவர்கள். இருவரும் உலகம்
முழுவதும் சுற்றி தங்கள் சித்தாந்தத்தைப்
பரப்பியவர்கள். இருவருக்கும் அமெரிக்க சீடர்கள்
அதிகம். அமெரிக்காவில் ஆசிரமம் நடத்தியவர்
ரஜனீஷ்.

இந்த ஆச்சார்ய ரஜனீஷ்தான் பின்னாளில் ஓஷோ
என்று அழைக்கப்பட்டார்.ஓஷோ என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ஆசான் என்று பொருள்.

ஓஷோ ஒரு கருத்துமுதல்வாதி. சிந்தனைக்கு கட்டற்ற
சுதந்திரத்தை அவரின் சித்தாந்தம் அளிக்கிறது.
அந்த வகையில் ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு
இவரின் சித்தாந்தம் மிக நெருக்கமாக வரும்.

நிலவுடைமைச் சமூக காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசைத்
தத்துவங்கள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வு
மறுப்பை வலியுறுத்தும். அதற்கு மாறாக, ஓஷோவின்
தத்துவம் நுகர்வை, இன்ப நுகர்ச்சியை தீவிரமாக
வலியுறுத்துகிறது. பாலியல் வேட்கை, பாலியல்
உறவுகள் ஆகியவை மிகவும் அழுத்தத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் கொந்தளிப்பு
நிலவும் என்கிறார் ஓஷோ. எனவே பாலியல்
சுதந்திரம் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தினார் ஓஷோ. கழிபெருங்காமம்,
கட்டற்ற பாலுறவு ஆகியவற்றை அவர் ஆதரித்தார்.
இதன் காரணமாக செக்ஸ் சாமியார் என்று பெயர்
பெற்றார்.

ஒருபுறம் மனதின் கட்டற்ற சுதந்திரத்தை வலியுறுத்திய
ஓஷோ, மறுபுறம் கட்டற்ற இன்ப நுகர்ச்சியை
வலியுறுத்தினார். இதன் மூலம் கருத்துமுதல்
வாதம், பொருள்முதல் வாதம் ஆகிய இரண்டின்
விசித்திரமான ஒரு கலவையை உருவாக்கினார்.
இதுவே அவரின் சித்தாந்தம் ஆகும்.

மேலும் மஹாயான புத்தமதம் கூறும் கருத்துமுதல்
வாதம்,  நீட்ஷேயின் தத்துவங்கள் ஆகியவற்றின்
செல்வாக்கும் இவரின் சித்தாந்தத்தில் உண்டு.
A rare blend of various philosophical thoughts is Oshoism!

ஆதிசங்கரரைப் போலவே ஓஷோவும் மதங்களை
எதிர்த்தார்; சடங்குகளை எதிர்த்தார். சங்கரரைப் போல
ஓஷோவும் கடவுளுக்கு பெரிய முக்கியத்துவம்
எதையும் அளிக்கவில்லை. பொருள் என்பதையே
முற்றிலுமாக மறுத்த ஆதிசங்கரரைப் போல்
அல்லாமல், ஓஷோ பொருளின் பங்கை
மறுக்கவில்லை. இதனால் ஓஷோவின் தத்துவத்தில்
அப்பாலைத் தன்மைக்கு இடமில்லை. இதன்
காரணாமாக ஓஷோவின் சிந்தனைகள் அவரின்
மரணத்திற்குப் பின்னரும் மடிந்து விடாமல்
உள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஒரு கல்லூரியில் தத்துவப்
பேராசிரியராகப் பணியாற்றிய ஓஷோ, வேலையைத்
துறந்து முழுநேர ஆன்மிகவாதியாக மாறிய பின்னர்
கணக்கற்ற நூல்களை எழுதி உள்ளார்.

இருக்கின்ற அமைப்பை மாற்ற முடியாது என்ற
கொள்கையைப் போதித்தவர் ஓஷோ. மார்க்சியத்தை
சோஷலிஸ்ட் கொள்கைகளை எதிர்த்தார் ஓஷோ.
கிறிஸ்துவ மதத்தை முற்றிலுமாக  எதிர்த்தவர் ஓஷோ.
ஏசு கிறிஸ்து கிருஷ்ணரின் அவதாரமே என்று ஓஷோ
கூறியதால் அமெரிக்காவில் அவரால் தொடர்ந்து
நீடிக்க முடியவில்லை.

ஓஷோவின் அமெரிக்க ஆசிரமம் ஓரிகானில்
இருந்தது. பெரும் ஆடம்பர வாழ்க்கையை
மேற்கொண்டவர் ஓஷோ. வருஷம் 365 நாளுக்கும்
365 ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்து காட்டினார்
ஓஷோ. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அமெரிக்கக்
கோடீஸ்வரர் ராக்பெல்லர் ஆகியோருக்கும் கூடக்
கிட்டாத வாழ்வு இது.

அவரின் அமெரிக்க ஆசிரமம் பல்வேறு குற்றச்
செயல்கள் நடக்கிற இடமாக இருந்தது. கொலை,
கொலை முயற்சி, கொலைக்கான சதித்திட்டம்
ஆகிய குற்றச் செயல்களுக்காக ஓஷோ அமெரிக்கச்
சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர்
விடுதலையானார்.உலகின் பல நாடுகள் அவரைத்
தம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தன.
இறுதியில் தம் 58ஆவது வயதில் இறந்தார்.

அரியானவைச் சேர்ந்த சாமியார் ராம் ரஹீம்
என்பவர் பல்வேறு காமக் களியாட்டங்கள்,
கற்பழிப்புக் குற்றங்களுக்காக  தற்போது சிறையில்
அடைக்கப் பட்டுள்ளார். இவரெல்லாம் ஓஷோவின்
தத்துவத்தால் ஈர்க்கப் பட்டவரே.

ஓஷோவின் தத்துவம் எப்படிப்பட்ட பின்விளைவுகளை
ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ராம் ரஹீம்
ஒரு உதாரணம். இன்றைக்கு மார்க்சிய எதிர்ப்புக்கு
ஓஷோ பெரிதும் பயன்படுகிறார். அத்வைதம்
காலத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்
கொள்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக ஓஷோவின்
தத்துவம் உள்ளது.
***************************************************************** 
ocean என்ற சொல்லில் இருந்து ஓஷோ என்ற சொல்
வந்ததாக ஒரு கருத்து உள்ளது. எனினும் ஓஷோவின்
ஆதரவாளர்கள் பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்
கொள்ளவில்லை. தம் பெயருக்கு அவர்  அத்தகைய
விளக்கத்தை ஒருபோதும்  அளித்ததில்லை என்றும்
கூறப்படுகிறது. இந்த விவரங்கள் முழுக்கட்டுரையில்
உள்ளன. இது சுருங்கிய முகநூல் பதிவு.
**
ஓஷோவின் பேச்சும் எழுத்துக்களுமே கணக்கற்ற
தொகுப்பு நூல்களாக உள்ளன. இவையே அவர் எழுதிய
நூல்களாக இங்கு குறிப்பிடப் படுகின்றன.  


பாலுறவில் உச்சம் அடைவதை ஓஷோ தீவிரமாக
வலியுறுத்தினார். அந்த உச்ச நிலையை (climax)
அவர் உச்சகட்ட யோகநிலை என்று வர்ணித்தார்.
அதை அடையாத பாலுறவு பயனற்றது என்றார்.

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் ஓஷோவின்
செக்ஸ் பற்றிய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு
அதை வெகுவாக சிலாகித்தவர். அவர் மடத்தை விட்டு
ஓடுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று அப்போது
சொல்லப்பட்டது.
 

 ....என்று சொல்லப் .படுகிறது. யாசர் அராபத்துக்கும்
கதிரியக்கத் தன்மை உடைய பொலோனியம் நஞ்சு
கொடுக்கப் பட்டது என்றும் கூறப் படுகிறது.
Conspiracy theories are never finite; they are always infinite.



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக