செவ்வாய், 7 நவம்பர், 2017

கண்ணாடி என்பதை அறிவியல் எவ்வாறு
வரையறுக்கிறது? கண்ணாடி என்பது அறிவியலில்
என்ன பொருளைத் தருகிறது?
----------------------------------------------------------------------------
சிலிகான் டை ஆக்சைடில் இருந்து தயாரிக்கப்படும்
கண்ணாடி பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.
கண்ணாடி என்ற சொல் பரந்துபட்ட பொருளைத்
தரும் ஒரு சொல். இங்கு கண்ணாடி என்பது vitrified water
என்ற பொருளில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியால்
ஆளப்படுகிறது.
**
ஒவ்வொரு உயிரி மூலக்கூற்றிலும் (bio molecule)
தண்ணீர் இருக்கிறது. எலக்ட்ரான் மைக்ராஸ்க்கோப்பில்
உள்ள வெற்றிடத்தில்தான் பயோ சாம்பிளை
வைக்க வேண்டும். வெற்றிடம் காரணமாக பயோ
சாம்பிள் அழிந்து விடும். மேலும் தண்ணீரின்
படிகத் தன்மை காரணமாக, diffraction நடப்பதில்லை.
எனவே மைக்ராஸ்க்கோப்பில் சரியான image
கிடைப்பதில்லை.
**
தண்ணீரின் படிகத் தன்மையைக் குறைக்காமல்
ஒரு  அங்குலம் கூட முன்னேற முடியாது என்ற நிலை
ஏற்பட்டது. இது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக
இருந்தது.
**
இந்நிலையில், ஜாகுவாஸ் டுபோசேட் இதற்கு ஒரு
தீர்வைக் கண்டறிந்தார். அதுதான்  தண்ணீரை
படிகத் தன்மை அடைந்து விடாமல் தடுத்து, அதை
கண்ணாடி நிலைக்கு கொண்டு வருவது. அதில் வெற்றி
பெற்றதால் நோபல் பரிசை வென்றார்.
**
இவர் கண்டுபிடித்த எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில்   கிரையோஜெனிக் தொழில்நுட்பம்  பயன்படுத்தப்
படுகிறது. திரவ நைட்ரஜன் மைனஸ் 196 டிகிரி
அளவுக்கு கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்
படுகிறது. எனவே ஜாகுவாஷ்  டுபோசெட்டின்
டெக்னாலஜியில் குளிர்வித்தல் தவிர்க்க இயலாதது.
**
Normal coolingக்கு பதில் rapid cooling செய்வதன் மூலம்,
பயோ சாம்பிளில் உள்ள தண்ணீரை படிக நிலைக்குச்
செல்லாமல் தடுத்து, கண்ணாடி நிலைக்குக் கொண்டு
வந்தார்.
**
இங்கு கண்ணாடி என்பதை வெகுஜனங்கள் புரிந்து
கொண்டுள்ள  அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கண்ணாடி என்பதை அறிவியல் பின்வருமாறு
வரையறுக்கிறது. கண்ணாடி என்றால்,
படிகத்  தன்மையற்றது (non crystalline) என்று பொருள். கண்ணாடிஎன்றால் (non crystalline stuff with disordered
state of  molecules) ஒழுங்கற்ற நிலையில் இருக்கும்
மூலக்கூறுகளால் ஆன, படிகத் தன்மையற்ற
பொருள் என்று அர்த்தம். தண்ணீரை இவ்வாறு
கண்ணாடியாக மாற்றுவது vitrification method ஆகும்.
இந்த பூமி முழுவதும் உள்ள தண்ணீரில் பெரும்
பகுதி கண்ணாடித் தண்ணீர்தான். அதாவது
vitrified waterதான். மேலும் இந்தக் கண்ணாடிக்கு
transparency உண்டு.ஒளிபுகும் தன்மை உண்டு.    
 
1) படிகத் தன்மை அற்றதும் (non crystalline)
2) மூலக்கூற்று மட்டத்தில் ஒழுங்கற்றதாக
இருப்பதுவும் (disordered state at molecular level)
கண்ணாடி ஆகும் என்று அறிவியல் வரையறுக்கிறது.
சிலிகான் டை ஆக்சைடில் இருந்து செய்யப்படுவது
மட்டுமே கண்ணாடி என்று கருதக் கூடாது.

தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறாமல் தடுத்து, அதைக்
கண்ணாடியாக  ஆக்குவது என்பதன் பொருள்
அதைப் படிகத் தன்மையற்றதாக ஆக்குவது
என்பதுதான். ஐஸ்கட்டியாக மாறாமல் தடுக்கப்பட்டு,
கண்ணாடியாக மாற்றப்பட்ட தண்ணீருக்கு
vitrified water என்று பெயர். இந்த பூமியில் உள்ள
தண்ணீரில் பெரும்பகுதி vitrified waterதான்.
வெகுஜனங்கள் மத்தியில் கண்ணாடி என்ற
சொல்லுக்கு இருக்கும் பொருளில்
இக்கட்டுரையில் கண்ணாடி என்ற சொல்
ஆளப்படவில்லை. இதை வாசகர்கள் மனதில்
கொள்ளவும்.


        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக