திங்கள், 10 ஆகஸ்ட், 2020

தலை இருக்கும் வரை தலைவலியும் இருக்கும்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) டாக்டர் அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசமைப்புச்
சட்டம் 1950 ஜனவரி 26 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

2) அதன் ஷரத்து 343 இப்படிக் கூறுகிறது:
The official language of the Union shall be Hindi in devanagari script.

3) இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியே என்று இதற்குப்
பொருள்.

4) இந்தி official (language) என்பது
இந்தியைத் தவிர மீதி மொழிகள் எல்லாம் UNOFFICIAL
என்று பொருள்படும்.

5) தலை இருக்கும்வரை தலைவலியும் இருக்கும்.
அதைப்போல இந்தி ஆட்சிமொழியாக இருக்கும்வரை
இந்தித் திணிப்பு என்ற கூச்சல் கேட்டுக் கொண்டே
இருக்கும்.   

6) இந்தியைத் திணிக்கிறானோ இல்லையோ, திணிப்பது
போன்ற நினைப்பு உண்டாகிக் கொண்டே இருக்கும்.

7) இதெற்கெல்லாம் தீர்வு என்ன?

8) ஒரே ஒரு தீர்வுதான். அது இதுதான்!
மேற்கூறிய ஷரத்து 343ஐ அரசமைப்புச் சட்டத்தில்
இருந்து நீக்குவதே ஒரே தீர்வு.

9) இந்தித் திணிப்பு என்று கூச்சலிடும் கனிமொழி
நாடாளுமன்றத்தில் என்றாவது ஒருநாள் மேற்கூறிய
ஷரத்து 343ஐ நீக்க வேண்டும் என்று குரல்
கொடுத்திருப்பாரா? No, NEVER!

10) இந்தியை எதிர்ப்பதாக நாடகம் நடிக்கும் எந்த
ஒரு கழிசடையாவது ஷரத்து 343ஐ நீக்க வேண்டும்
என்று என்றாவது குரல் கொடுப்பார்களா?

11) திருமாவளவன், ஆ ராசா, திருச்சி சிவா என்று
இந்தி எதிர்ப்பு நாடக நடிகர்கள் யாரும் என்றாவது
நாடாளுமன்றத்தில் ஷரத்து 343ஐ நீக்கு என்று
குரல் கொடுத்து இருப்பார்களா? No,Never!

12) மூளை இருக்கிறவன் யோசித்துப் பார்!
மூளை இல்லாதவன் செத்துப் போ!
***********************************************     

மும்மொழித் திட்டம் என்பது மத்திய அரசின் முடிவு.
அது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தால்
மட்டுமே அது மாநிலங்களைக் கட்டுப்படுத்தும்.
எனவே கட்டாய மும்மொழித் திட்டம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக