செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!
-------------------------------------------------------
1999-2004 காலத்தில் வாஜ்பாய் அவர்களின் மதவாத
ஆட்சி நடந்தது. வாஜ்பாயுடன் கருணாநிதி கூட்டணி.
முரசொலி மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர்
வாஜ்பாய் அவர்களின் மதவாத அமைச்சரவையில்
அமைச்சர்கள்.

வாஜ்பாய் ஆட்சி என்றாலும் அது பாஜகவின்
தனிப்பெரும்பான்மை கொண்ட ஆட்சி அல்ல.
கூட்டணி ஆட்சிதான். கூட்டணிக் கட்சிகளை
அனுசரித்து ஆட்சி நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே 
வாஜ்பாய் ஆட்சி நடத்தினார். ஜோசியப் படிப்பு
வேண்டாம் என்று  கருணாநிதி ஆட்சேபம்
தெரிவித்து இருந்தாலே போதும்! வாஜ்பாய் அதை
அமல்படுத்துவதை நிறுத்தி இருந்திருப்பார். ஆனால்
கொள்ளையடிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட  
கருணாநிதி பிற்போக்கு ஜோசியப் படிப்பை
எதிர்க்கவில்லை.

சரி, 2004ல் வாஜ்பாய் ஆட்சி போய்விட்டது. மன்மோகன்
ஆட்சி வந்து விட்டது. மன்மோகன் ஆட்சி 10 ஆண்டுகள்
(200-2014) நீடித்தது. இந்த ஆட்சியில் திமுக பங்குபெற்றது.
ஆ ராசா அமைச்சராக இருந்தார். 2ஜி ஊழல் புரிந்தார்.
சிறையில் அடைத்தார்கள். ஜோசியப் படிப்பை நீக்க
வேண்டும் என்று ஆ ராசா கலைஞரிடமோ
மன்மோகனிடமோ வலியுறுத்தினாரா, இல்லையே.

தலித் என்பது பிற்போக்கான ஜோசியப் படிப்பை
கொண்டு வர உடந்தையாக இருப்பதற்கு 
லைசன்ஸ் அல்ல. தலித் என்பது ஊழல் புரிவதற்கு
லைசன்ஸ் அல்ல. தலித் என்பது பிற்போக்கைத்
தலையில் கட்டி மக்களுக்குத் துரோகம் செய்வதற்கு அல்ல.

தலித் ஒத்துழைப்புடன் வாஜ்பாய் கொண்டுவந்த
பிற்போக்கு ஜோசியத்தை ஆதரிக்க வேண்டும் என்று
வாதிடுவது மானமுள்ள செய்கை அல்ல.

பிற்போக்குத் தனத்தையும் ஊழலையும் இன்ன பிற
சமூகக் கேடுகளையும்  தலித் என்ற கவசத்தைக்
கொண்டு ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி
எறியாமல் யாரும் மானத்துடன் வாழ முடியாது.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதே
பெரியாரின் செய்தி. தலித் என்கிற IMMUNITYஐ
வைத்துக் கொண்டு ஜோசியம் போன்ற பிற்போக்குத்
தனங்களை ஆதரிப்பது மன்னிக்கவே முடியாத போக்கு.
பெரியாரின் பெயரை உச்சரிக்க ஆ ராசாவுக்கு
என்ன அருகதை இருக்கிறது?



ஜோசியத்தை ஆதரித்தும், ஆ ராசாவின் பிற்போக்குத்
தனத்துக்கு வக்காலத்து வாங்கியும் இங்கு எழுதுவதை
விட, ஆ ராசாவிடம் பேசி ஜோசியப் படிப்பை
ரத்து செய்ய வலியுறுத்துவது நல்லது..

பல்கலைப் படிப்பில் ஜோசியம் கொண்டு வந்ததற்கு
ஒத்துழைத்தது திமுக. இதற்குப் பொறுப்பானவர்கள்
என்று திமுகவில் நான்கு பேரைச் சொல்லலாம். இந்த
நால்வரில் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர்
இறந்து விட்டனர்.

டி ஆர் பாலு கடவுளைக்  கும்பிட்டு விட்டு தேர்தல்
பிரச்சாரத்தைத் தொடங்குவார். இது அனைவரும்
அறிந்த ஒன்று. மேலும் டி  ஆர் பாலு தன்னை
பெரியாரிஸ்ட் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை.

ஆனால் ஜோசிய  ஆதரவாளரான ஆ ராசா
பெரியார் கிரியார் என்றெல்லாம்
பேசுவது மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.   சாதியை
ஒரு கவசமாக வைத்துக் கொண்டு, பிற்போக்குத்
தனத்தை சமூகத்தில் புகுத்திய  ஆ ராசா
போன்றவர்கள் மற்ற யாரையும் விட ஆபத்தானவர்கள்.
இவர்கள் மக்களின்  மிகக்கொடிய விரோதிகள் 




இந்த சனாதனக்  கும்பலுக்கு விசுவாசமான
வேலைக்காரன் என்றால் ஆ ராசாதான்.
எனவே ஆ ராசா சனாதனக் கும்பலை விட
ஆபத்தான ஆசாமி.

சனாதனன் ஜோசியம் வே


சனாதனக் கும்பலின் விசுவாசமான சேவகன்
ஆ ராசா மிக ஆபத்தானவர். இவரை ஆதரிக்கும்போது
நமது மதிப்பும் மரியாதையும் காற்றில் பறக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக