திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இந்த விஷயத்தில் நான் ஜவகர்லால் நேரு அவர்களின்
காலில் விழுந்து வணங்குகிறேன். இந்தி பேசாத
மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும்
என்று உறுதிமொழி கொடுத்தார் நேரு. அதை ஏற்றுக்
கொண்டு எல்லாப் போராட்டங்களும் நின்றன.

நேருவின் உறுதிமொழி என்பது சட்டபூர்வமானதல்ல.
அதற்கு எள்முனையளவு கூட சட்ட அந்தஸ்து
கிடையாது.அவரின் உறுதிமொழியில் so many
uncertainties இருந்தபோதிலும், அது ஒரு தீர்வாக
எல்லோராலும் கருதப் பட்டது.

இன்றைக்கு இந்த 2020ல் இப்படி யாராவது ஒரு
உறுதிமொழியைக் கொடுக்க முன்வருவாரேயானால்,
அவர் எவ்வளவுதூரம் எள்ளி நகையாடப் படுவார்
என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவும்.

ஆனால் நேருவின் காலம் நிலப்பிரபுத்துவ சமூக
அமைப்பு நிலவிய காலம் (feudal society). அது
வைராக்கியங்களால் நிரம்பி வழிந்த காலம்.
ஜவகர்லால் நேரு  மட்டுமல்ல, சாதாரணமான
ஒரு ஆள் (ஒரு பெரிய மனுஷன்) வாக்குக்
கொடுத்தாலும் அதை அந்த மனிதர் மீற மாட்டார்.
வாக்கு என்று சொன்னாலே அது சத்திய வாக்குதான்.

அந்தக் காலத்தில் நேரு அவர்களின் உறுதிமொழி
என்பது கடவுளின் உறுதிமொழி போன்று
கருதப் பட்டது.

நேருவின் காலத்தில் நான் மிகவும் சிறுவன்.
இந்தச் செய்திகளை எல்லாம் நான் எந்தப்
புத்தகத்திலும் படிக்கவில்லை. எந்தப் புத்தகத்திலும்
நான் சொன்னபடி எழுதி இருக்க வாய்ப்பே இல்லை.

ஊர்ப்பெரியவர்களும் பள்ளி ஆசிரியர்களும்
அன்றாடம் பேசிக் கொண்டதை நான் கேட்டு
மனத்தில் பதித்தபடி இங்கு எழுதுகிறேன்.
இதுதான் உண்மை. புத்தகங்களில் எழுதப் பட்ட
நேரு குறித்த செயற்கையான புகழுரைகள்
உண்மையானவை அல்ல.

மேற்கூறிய செய்திகளை எல்லாம் எனக்கும்
எங்கள் தலைமுறைக்கும் சொன்ன பெரியவர்கள்
அனைவரும் தற்போது உயிர் வாழ்வதற்கான
வாய்ப்பில்லை.

நிலப்பிரபுத்துவ வைராக்கியம் என்பதன்
சரியான பொருளை உணர்ந்து கொள்ளுமாறு
வேண்டுகிறேன்.

   
  சட்டத் திருத்தம் என்று எதுவும் கிடையாது.
நேருவின் oral assurance மட்டும்தான். அது அரசின்
மாபெரும்  commitment என்று கருதப் பட்டது.

ஒரு சாதாரண வாய்மொழியின் பேரிலான
உறுதிமொழி என்றபோதிலும், இத்தனை ஆண்டு
காலத்தில், அது நிலைபேறு உடையதாகி விட்டது.
இன்றளவும் அது மதிக்கப்பட்டுத்தானே வருகிறது.
15 ஆண்டுகள் மட்டுமே ஆங்கிலத்துக்கு வாழ்வு
என்ற ஷரத்தை, நேருவின் நா அசைவு  infinity வரை
கொண்டு சென்று விட்டது அல்லவா! (Readers are requested
to study the constitution of India)

இனி எந்த ஒரு ஆட்சியாளராலும் இதை மாற்ற முடியும்
என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி எந்த
ஆட்சியாளராவது முயன்றால், ரத்த ஆறு ஓடும் என்பதை
உறுதியாகச் சொல்ல முடியும்.


1965 மொழிப்போரின்போதும் அதன் பின்னரும் (1970களில்)
official language என்பதற்கு ஆட்சிமொழி என்றே தமிழில்
அனைவரும் வழங்கி வந்தனர். எல்லாக் கட்சியினரும்
எல்லா நாளிதழ்கள், வாரமாத இதழ்கள் என்று
அனைத்துமே ஆட்சிமொழி என்றே வழங்கி வந்தன.
TNPSC Guides எல்லாவற்றிலும் ஆட்சிமொழிதான்.

உண்மையில் ஆட்சிமொழி என்பதே மிகச் சரியான
மொழிபெயர்ப்பு ஆகும். இதை நான் மட்டுமல்ல
மத்திய அரசில் பணியாற்றிய அனைவருமே சொல்வார்கள்.

இந்த மில்லேனியத்துக்குப் பின்னர், திடீரென
அலுவல் மொழி என்ற சொல்லைப் புழக்கத்துக்கு
விட்டனர் தமிழ்தேசியக் குழுவினர். அலுவல் மொழி
என்பதில் official என்பதில் உள்ள அதிகாரம் (power)
உள்வரவில்லை. ஆட்சிமொழி என்பது அலுவல் மொழி
என்பதையும் விட உயர்ந்ததும் அதிகாரம் மிக்கதும் ஆகும்.
ஆங்கிலமே தெரியாதவர்கள் மொழிபெயர்க்கிறார்கள்.

வாசகர்கள் குழம்பி விடக்கூடாது என்பதற்காக
நான் அலுவல் மொழி என்ற சொல்லையும் 
பயன்படுத்த நேர்கிறது.

  .

    .
2016ல் இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை
மூடிவிடுவார்கள் என்று சொன்ன
புழுவினும் இழிந்த
திருமுருகன் காந்தி எங்கே?

தான் சொன்னது தப்பாகப் போன பிறகு
மன்னிப்புக் கேட்பான் நியாயவான்.
ஆனால் போக்கிரிப்பயல் திருமுருகன்
எந்த மன்னிப்பும் கேட்காமல் மக்களை முட்டாள்கள்
என்று கருதிக் கொண்டு திமிருடன் அலைகிறான்.

இவனை ரோட்டில் பொது இடத்தில் எங்கு கண்டாலும்
 செருப்பால் அடியுங்கள்.
 -----------------------------------------------------------------



  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக