வியாழன், 20 ஆகஸ்ட், 2020

மூன்று துறைகளுக்கு ஒரே தேர்வு!
மத்திய அமைச்சரவை முடிவு!
இது ஒற்றைச் சாளர முறை! வரவேற்கத் தக்கது!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) மத்திய அரசுப் பணிகளுக்கான SSC தேர்வுகள் 
(Staff Selection Commission), வங்கித் தேர்வுகள்
(IBPS), ரயில்வே தேர்வுகள் (RRB) ஆகிய மூன்று
அமைப்புகளின் தேர்வுகளும் ஒரே தேர்வாக
இனிமேல் நடைபெறும். இத்தேர்வுகளை NRA
(National Recruitment Agency) நடத்தும். இதுவரை
நடந்து வந்த மூன்று தனித்தனி தேர்வுகளுக்குப்
பதிலாக, இனி ஒரே ஓரு தேர்வு (Common Eligibility Test)
நடைபெறும்.   

2) மத்திய அரசுப் பணிகளில் ஆண்டு ஒன்றுக்கு
1.25 லட்சம் வேலைகளுக்கு தேர்வு நடத்தி ஆள்
எடுக்க வேண்டி உள்ளது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும்
2.5 கோடிப்பேர் எழுதுகிறார்கள். இந்த இரண்டரைக்
கோடிப் பேருக்கு இந்தப் பொதுத்தேர்வு ஒரு
வரப் பிரசாதம். இது நீண்ட காலமாக எதிர்பார்த்துக்
கிடந்த ஒரு ஒற்றைச் சாளர முறை.

3) மத்திய அரசு, வங்கி,ரயில்வே ஆகிய மூன்றிலும்
உள்ள Group C மற்றும் Group B பதவிகளான அரசிதழ்
பதிவுறா (Non Gazatted) வேலைகளுக்கு மட்டுமே
இந்தத் தேர்வுகள் உரியவை. மேலும் இவை Non-Technical
பதவிகளுக்கு மட்டுமானவை.

4) "மத்திய அரசில் 50 துறைகள் (departments) உள்ளன.
ஆளெடுப்பு நிறுவனங்கள் (Recruitment agencies) 20 உள்ளன.
தற்போது மூன்று ஆளெடுப்பு நிறுவனங்கள் மட்டுமே
இந்த ஒற்றைச்சாளரப் பொதுத்தேர்வில் இணைந்துள்ளன.
காலப்போக்கில், பிற ஆளெடுப்பு நிறுவனங்கள் விரும்பினால் 
இத்தேர்வில் இணைந்து கொள்ளலாம்" என்று
அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்
திரு சி சந்திரமௌலி, அரசுச் செயலர் (Secretary to Govt).

5) இந்தப் பொதுத்தேர்வு முறை மத்திய அரசு மற்றும்
மத்தியப் பொதுத்துறைகளுக்கு மட்டும்தான். மாநில
அரசின் தேர்வுகளுக்கு இந்தப் பொதுத்தேர்வு 
பொருந்தாது.தமிழக அரசு TNPSC தேர்வுகளை நடத்தி
வருகிறது. அத்தேர்வுகள் தொடர்ந்து நீடிக்கும்.
அதே நேரத்தில் காலப்போக்கில் எந்த ஒரு மாநில
அரசாவது இப்பொதுத்தேர்வை விரும்பினால், அவர்களின்
வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு அம்மாநிலத்தின்
தேர்வுகளை நடத்தும்.

6) போட்டியாளர்களுக்கு ஒரு level playing field கிடைக்கும்.
ஒற்றைச் சாளர முறை என்பதால் போட்டியாளர்களின்
கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.
அ) செலவு பல மடங்கு குறையும்.
ஆ) ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக
விண்ணப்பித்து, தனித்தனியாகப் பணம் கட்ட
வேண்டியதில்லை. ஒரே தேர்வு;ஒரே செலவு!
இ)ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு
மையம் கொண்டு வரப்படும். திருநெல்வேலியில்
உள்ளவர்கள் சென்னைக்கு வந்து தேர்வு எழுத
வேண்டியதில்லை. 
ஈ) ஒற்றைச்சாளரை முறையின் நன்மைகள் அதை
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
****************************************************

இந்தத் தேர்வை infinity times எழுதலாம்!

12 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தேர்வு
நடைபெறும். தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,
வங்காளி என்று மொத்தம் 12 இந்திய மொழிகளில்
இத்தேர்வு நடைபெறும்.
 
பின்குறிப்பு:
BSNL நிறுவனத்தை மத்திய அரசு இதில் சேர்க்கவில்லை.
எனவே BSNL கேட் தேர்வு (GATE) மூலமும் ஏனைய
பணிகளுக்கு தனது சொந்த ஆளெடுப்பு விதிகள்
மூலமும் ஆளெடுக்கும். 

ஒரு முறை எடுத்த மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்குச்
செல்லுபடி ஆகும்.

தமிழக அரசின் TNPSC, TRB, TNUSRB வாரியங்கள்
தொடர்ந்து தாங்களே ஆளெடுக்கும். மத்திய அரசு
தனது பொதுத்தேர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த ஒரு
மாநிலத்தையும் சேர்க்கவில்லை.


நீதிபதி கர்ணன் (SC சாதி) மீதான
நீதிமன்ற அவமதிப்பில் ஆறு மாத சிறை   கிடைத்த
தண்டனை வழங்கிய போது அதை
ஆதரித்தவர் பிரஷாந்த் பூஷன்!




  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக